20/08/2020

வாடிவடம்

 (விரைவில் திரைக்கு வரவுள்ள

#விஜயன் திரைப்பட இயக்குனர்

 
அன்புத் தம்பி
Pulidevan Puvi
அவர்களின்
மூன்றாம் நாவலான #வாடிவடம் பற்றிய பதிவு
 
************
அடிஅடியாய் வாசிக்கையில்
இடிஇடியாய் முழக்கமிட்டு
அடைமழையாய் நனைய வைத்து
கோடைவெயிலாய் கொதிக்க வைத்த
அற்புத நாவல்களில்
முக்கிய நாவலெனில்
"பாரிமலைக் கொடி" என்பேன்
அதற்கடுத்த நாவலெனில்
அது "வாடிவடம்" என்றுரைப்பேன்...
 
முன்னதை எழுதியவர்
நம்ம குரு "கண்ணதாசர்"
பின்னதை எழுதியவர்
எங்க ஊரு "புலித்தேவர்'
பாரிமலைக் கொடிபற்றி
படித்ததைப் பகிர்ந்திருந்தேன்
பகிர்ந்ததைப் படித்தவர்கள்
படித்ததைப் பகிர்ந்தார்கள்!.
 
அஃதே...
வாடிவடம் அனுபவத்தை
வாசகனாய்ப் பகிர்கின்றேன்!
வாசித்து முடித்தவுடன்
வாடிவடம் அழைக்கின்றேன்
வாருங்கள் பயணிப்போம்...\
 
வாடிவடம்
***********
அத்தான் நாவலின்
அடுத்த படைப்பென்று
முன்னுரையில் மொழிகின்றார்
தன்னுரையாய் ஆசிரியர்!
 
ஒரேபாத்திரத்தில்
வேறு நாவலெனெ
புதிய வழி காட்டுகின்றார்!
புலித்தேவன் பார்த்திடுவீர்!
 
கதை நகர்வு
***************
மாட்டுவண்டி பந்தயத்தை
மனக்கண்ணில் காட்டுகிற
முதலாம் காட்சியே
ஐந்தாம் கியரில்தான்....
 
மந்தக்காளி என்றுவரும்
அந்தப் பாத்திரம்தான்
இந்தக் கதை முழுவதுமே
இயங்குகிற நேத்திரமாய்...
 
ஒண்டி உதவி செய்யும்
நொண்டிக் கருப்பனால்தான்
என்னமோ ஏதோவென
எப்படியோ கணித்தாலும்
முழுவதும் படித்தால்தான்
முடிந்தபின் புரியவரும்!
 
அப்பாவின் மகளாய்
அப்பப்பா "பெரியநாச்சி"
அதகளம் செய்கின்றார்
அதையும் களம் ஆக்குகின்றார்
 
மெல்லிய காதலோடு
முரட்டு மோதல் களம்‌‌...
மகளின் காதலுக்காய்
மனமிரங்கும் தந்தை மனம்
பாளைமேட்டு வீரருக்கே
காளைமாடு தண்ணிகாட்ட
மந்தக்காளி வெற்றி கண்டு
பந்தக்காலை வைக்க எண்ண
அப்புறம் நடப்பதெல்லாம்
அப்பப்பா என் சொல்வேன்?!
 
போலீஸ் ஸ்டேஷனுக்குள்
வாக்கி டாக்கி கத்துவதும்;
கிழவியோடு உட்கார்ந்து
சாராயம் குடிக்கிறதும்;
 
இராத்திரியில் கேத காரர்
பச்சையென்று கூவுறதும்;
மஞ்சுவிரட்டு பொட்டலில
மைக் செட்டு கத்துறதும்;
 
மகளைத் தேடிக்கிட்டே
குழந்தையாக மாறுவதும்...
கண்முன்னே நின்று கொண்டு
காணொளியாய்க் கதைக்கிறது
 
வாடிவடம்...
வெறும் கதையல்ல
அது
தெற்குச் சீமையின் உணர்வுக் களம்!
ப்பா....👏👏👏👏
👏
✍️செ.இராசா

No comments: