27/01/2023

அவளைப் பார்க்கல -அடி நான் அவளைப் பார்க்கல

 


அவளைப் பார்க்கல -அடி நான்
அவளைப் பார்க்கல...அவ
பாடுகிற பாட்டில் உள்ள
கருத்தைப் பார்க்குறேன்- ஆமா
கருத்தைப் பார்க்குறேன்

அவளைப் பார்க்கல -அடி நான்
அவளைப் பார்க்கல...அவ
ஆடுகிற டான்ஸில் உள்ள
கலையைப் பார்க்குறேன்- ஆமா
கலையைப் பாரக்குறேன்

ஏய்‌.... நிறுத்து..
கருத்துன்னா....?
CONCEPT....
கலைனா?!
ART....
ஓ.....சரி சரி.....அப்ப நடத்து...

(அவளைப் பார்க்கல....)

26/01/2023

கானா---- வீணா....உட்டா லக்கடி ஆட்டம்

 


#கானா

வீணா....உட்டா லக்கடி ஆட்டம் போட்டா முன்னால
வேணாம்...விட்டா அப்புறம் வீங்கிப் போயிடும் பின்னால
தானா...கெத்தா நிக்கிற தௌலத் துண்டா உன்னான்ட
நீலாம்..வெத்தா இப்படி ஏன்டா நிக்கிற என்னான்ட..

வா முடிஞ்சா வந்திடு பார்த்துக்கலாம்
தில் இருந்தா தொட்டிடு பார்த்துக்கலாம்...(2)

நீலாங்கரை ஊராண்டநீ இன்பாப் பேரை சொன்னாலே...
வாலாட்டிடும் பேமானிக நண்பா என்பான் தன்னாலே...
கானாவுல ஃபீலாபல ஷோக்கோவரும் அப்போதே‌..
வீணாயினி காண்டாக்குனா சீனாகுவ இப்போதே...

✍️செ. இராசா

கண்டவுடன் நெஞ்சம் கதகளி ஆடுதடி


 

கண்டவுடன் நெஞ்சம் கதகளி ஆடுதடி
சுண்டுவிரல் கூட சுவைத்திட- எண்ணுதடி
உண்டிடும்முன் நாக்கில் ஒழுகுது தீர்த்தமடி
உண்மையிலே சொர்க்கமடி நீ!

#பூரிவெண்பா

✍️செ. இராசா

24/01/2023

கண்ணாடி போட்டபடி

 


திடீரென்று புலனத்தில் (Whatsapp) ஓர் குழுவில் சேர்வதற்கான அழைப்பு வந்தது. என்னவென்று பார்த்தால் 95 வது வருடம் 10ஆம் வகுப்பில் சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளியில் படித்த மாணவர்கள் குழுவாம். புகைப்படத்தில் என்னைத் தேடியபோது சந்தோசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம், காது இரண்டும் விடைத்தபடி, குழி விழுந்த ஒடுங்கிய கன்னங்களுடன், மிகவும் குள்ளமாக..... ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருந்தேன். சத்தியமாக, அதில் நண்பன் சுகுமாரையும் வாத்தியார்களையும் சில நண்பர்களையும்தவிர யாருடைய உருவமும் பெயர்களும் ஞாபகமே இல்லை. 27 வருடங்கள் ஓடிவிட்டதல்லவா??
 
கண்ணாடி போட்டபடி
........காலரில்கை வச்சபடி
பெண்களின் பின்னாடி
.......பேபேன்னு- சுண்டலிபோல்
பத்தாம் வகுப்புலநான்
.......பார்க்குறத பார்க்கயில
அத்தனை சந்தோஷம்;
.......ஆம்!
 
✍️செ. இராசா
(மற்ற படங்களையும் சேர்த்துள்ளேன். இதில் 10ஆம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தமைக்கான பெயர் பட்டியலில் நம் பெயர் இன்னும் உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது)

23/01/2023

தலைப்பு: ஔவை_யார்? (ஔவைத் திங்கள் 25)



சுருங்க உரைக்கின்ற சூட்சுமம் சொல்லும்
பெருங்கவி ஔவையார் பேர்!
(1)

ஈரடிக்கு வள்ளுவனார் என்பதுபோல் நற்பெருமை
ஓரடிக்கு ஔவையால் உண்டு!
(2)

குறைவாகச் சொல்லும் குறுந்தகவல் நுட்ப
முறைகாட்டித் தந்தார் முதல்!
(3)

மூத்த குடியாக முன்நிற்கும் நம்மினத்தைக்
காத்த புலவரிவர் காண்!
(4)

மூதுரையின் நல்வழியில் முன்னேறிச் செல்வோர்க்குத்
தீதுரைகள் தீண்டாது செல்!
(5)

அங்கவையும் சங்கவையும் ஔவையால் மீண்டமைக்குச்
சங்கத் தமிழ்மொழியே சான்று!
(6)

அதியமான் தந்தகனி ஔவை-யார் என்றே
பதிவான சான்றாகும் பார்!
(7)

காசுக்குப் பாடிய கம்பனையும் கண்டித்த
மாசில்லா தாயை வணங்கு!
(8)

பாரியையும் காரியையும் பைந்தமிழர் யாவரையும்
பேரன்பால் கட்டிவைத்த பெண்!
(9)

வங்கக் கடலோரம் வைத்திடுவோம் அன்னைக்குத்
தங்கத்தால் மின்னும் சிலை!
(10)

✍️செ. இராசா

22/01/2023

மெட்டு: யாரோ இவன்

 


மெட்டு: #யாரோ_இவன்

தீயா இவள்.. நீரா இவள்...
என் வாழ்வினில் யார்தான் இவள்?
என் பாதையில் வந்தாள் இவள்..
மெய்யானவள்!

எப்...போதுமே வருகின்றவள்..
தப்‌..பானதை தவிர்க்கின்றவள்..
தன் மோதலில் பிழையானதைக் களைகின்றவள்....

சொல்....லாமலே சொல்கின்றவள்..
கண்...ணாலயே கவி(ழ்)க்கின்றவள்..
முன்கோபிகள் எல்லோரிலும் முதலாள் இவள்...

✍️செ. இராசா

21/01/2023

USB -- யூஎஸ்பி


 

உனக்குத்தான் எத்தனை பெயர்கள்?

பேனா இயக்கி - PEN DRIVE-
கட்டைவிரல் இயக்கி - THUMB DRIVE
வெட்டொளி இயக்கி - FLASH DRIVE
நினைவகக் குச்சி - MEMEORY STICK
என்றெல்லாம் உன்னை அழைத்தாலும்‌‌..
என்னைப் பொறுத்தவரை
உனக்கு "#சேமிப்பான்" என்ற பெயரே
பொறுத்தமென்று நினைக்கிறேன்...

உண்டியலில்...
எதைப் போடுகிறோமோ...
எவ்வளவு போடுகிறோமோ..
அதைத்தானே எடுக்க முடியும்?
அதேபோல்...
நிரம்பிய உண்டியலில்
மீண்டும் நிரப்ப முடியுமா என்ன?
இப்படி..
உண்டியல் போலவே உள்ளதால்
உன்னை "சேமிப்பான்" என்றழைப்பதுதானே சரி?

உண்மையில்
நீ ஒழுக்கமானவன்தான்
உன்னை ஒழுங்காகப் பாவித்தால்...
கண்ட இடமெல்லாம்
கால் வைத்தால்தான் சிக்கல்..
கெட்டும் போவாய்...கேடும் தருவாய்...

உன் தாத்தா ஃபிளாப்பி (Floppy)
எட்டடி பாய்ந்தபோது
உன் அப்பா சிடி (CD)
பதினாரடி பாய்ந்தார்....
ஆனால் நீயோ...
நூறடி அல்லவா பாய்கின்றாய்!!!

என்ன செய்ய?
இன்றைய பிரம்மாக்களால்
நேற்றைய பிள்ளைகள் பாவம்தான்....
இல்லை...இல்லை
அது பாவமல்ல...தியாகம்!!

அதோ..
உன்னைவிட வேகமாய்
உன் பிள்ளைகள் வருகிறதே...

✍️செ. இராசா

(என் பிள்ளை கொடுத்த தலைப்பு இது)

வாங்கும்முன் நல்லாத்தான்

 

வாங்கும்முன் நல்லாத்தான்
......வக்கணையாய்ப் பேசுகின்றீர்!
வாங்கியபின் நாளில்தான்
......மௌனமாய்த்- தூங்குகின்றீர்
உங்களைப்போல் தானே
.......உலகத்தில் நாங்களும்
எங்களையும் பாரேன்
.......எழுந்து!
 
✍️செ. இராசா

19/01/2023

காத்திருந்தா பஸ்ஸு கிடைக்கும்

 


காத்திருந்தா பஸ்ஸு கிடைக்கும்
காதலிச்சா கிஸ்ஸு கிடைக்கும்
சொன்னாரு கவிஞர்வாலி நேத்து...

ஈஸியாவே ஆளு கிடைக்கும்
ஈஸிஆரில் தூளு பறக்கும்
சொல்றாங்கோ இன்னிக்கி நிலையப் பார்த்து- மச்சி
சொல்றாங்கோ இன்னிக்கி நிலையப் பார்த்து...

எங்கங்கே துட்டு இருக்கு
அங்கங்கே கூடிக் கிடக்கு
உண்மையான காதலெங்கே சொல்லு- நீயும்
காண்பதெல்லாம் காதலில்லை தள்ளு- இந்தக்
காதலெல்லாம் காஸ்டிலியான ஜொள்ளு

✍️செ. இராசா

17/01/2023

விசிறி




உங்களிடம் ஒருவர் ஓடோடிவந்து
நான் உங்கள் விசிறி என்றால்
உண்மையில் எப்படி இருக்கும்?
குளுகுளு என்றிருக்காதா?

அதனால்தான் என்னவோ
விசிறி என்ற பெயரை
இரசிகனுக்கும் வைத்தார்கள்போல...

யோசித்துப் பாருங்கள்...
இந்த விசிறி இல்லாத இடம்
ஏதேனும் உண்டா?
விமானமோ ஹெலிகாப்டரோ...
கப்பலோ கணினியோ..
ஏசியோ... ஃபிரிட்ஜோ‌‌..
விசிறியின் பங்களிப்பு
வியக்க வைக்கிறதல்லவா?!

உண்மையில்
இந்த விசிறி என்ற சொல்
சங்க இலக்கியத்தில்
நேரடியாக இல்லைதான்
ஆனால்
பாவிக்கப்பட்ட சான்றுகள்
பலவாறு உள்ளனவே....

நெடுநல்வாடையில் ஓர் இடம்;
கவின் பெறப் புனைந்த
சேங்கழ் வட்டம் என்கின்ற விசிறி
சிலந்தி கட்டிக் கிடந்ததாம்....

அதேபோல் புறநானூற்றில் ஓர் இடம்;
மோசிகீரனார் என்னும் ஏழைப்புலவனுக்கு
சேரமான் பெருஞ்சேரல் விசிறி விட்டானாம்
அதுவும் எப்படி?
"தண்ணென வீசியோயே" என்றால்
குளிர்தர வீசினாயோ என்கின்றான்...

இப்படி வீசும் விசிறிகள்தான்
எத்தனை வகைகள்?

பனையோலை விசிறி
தென்னை மட்டை விசிறி
மடக்கு விசிறி
மயில் விசிறியென இருந்து
பிளாஸ்டிக் விசிறி
மின் விசிறியென
விசிறிகள்தான் எத்தனை எத்தனை.?!

ஒன்று தெரியுமா உங்களுக்கு...?!
சொளகை விசிறியாக்கி தூற்றியது
நாம் மட்டும் இல்லை....
இயேசுவும்தான்....

ஆம்...
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது
பதரை விளக்கி களஞ்சியம் சேர்ப்பார் என்று
இயேசுவைக் கைகாட்டினாரே
திருமுழுக்கு யோவான்...
எனில் இந்த விசிறியின் முக்கியத்துவம் பாரிர்.

ராஜாக்கள் காலம் முதல்
ஆங்கிலேயர் காலம் வரை
இந்த விசிறியை சாமரம்போட்டு விசிறத்தான்
எத்தனை எத்தனை ஆட்கள்?!

அட..
ஆண்டவர்க்கு மட்டுமா விசிறிகள்?!
ஆண்டவர்க்கே விசிறிகள் உண்டே...

விஞ்ஞான வரவால்
மின்விசிறி வந்ததும்
அடிமைமுறை பங்கா வாலாக்கள்
முற்றிலும் ஒழுந்தது மகிழ்ச்சிதான்
ஆனால்....
விசிறிகளும் விடைபெற்றுப் போனதே...!!!

தயவுகூர்ந்து...
குளிரூட்டி அறை விடுத்து
கொஞ்சம் வெளியே வாருங்கள்...
அடடே....
நமக்காகவே விசிறிவிட
இதோ சில மரங்கள் இன்னும்....

✍️செ. இராசா

16/01/2023

இன்னாபா பார்க்குற



 #ஜல்லிக்கட்டு_பார்க்குறாங்க
#மெட்ராஸ்_வெண்பா

இன்னாபா பார்க்குற
.....ஏத்திடுவேங் கொய்யால
என்னான்ட வச்சுகினா
.....ஏழ்ரைதான்- என்பதுபோல்
பாஞ்சு வரயேதும்
.....பார்க்குதோ....ஏன்நைனா..
மூஞ்சிய மூடிக்க வா...?!

✍️செ. இராசா

14/01/2023

சம்பளம்


உழைத்த உழைப்பிற்கு
உழைப்பின் அடிப்படையில் தரப்படும்
ஓர் பொருளே சம்பளம்..

அதென்ன சம்பளம்?

சம்பா நெல்லும்
உப்பள உப்பும்
ஈடு பொருளாய் தந்த காலத்தில்
சம்பா அளவுப்பு சொற்றொடரே
சம்பளம் ஆனதென்பர்...

அதேபோல்‌...
உழைப்பினைக் குறிக்கும்
ஊழியச் சொற்றொடரே
ஊதியம் ஆனதென்பர்....

அதென்ன கூலி?

பஞ்ச காலத்தில்
கூல் ஊற்றியதாலேயே
கூலியாய் ஆனதென்பர்....

இவ்வளவு ஏன்
SALARY என்ற ஆங்கிலச்சொல்லே
SALTல் இருந்துதான் வந்ததாம்
சந்தேகமெனில் கூகுளைப் பாருங்கள்...

அதெல்லாம் சரி...
அதற்கென்ன இப்போது?
அதானே...‌‌

மாதச் சம்பளம்
மாதா மாதம் வருவோருக்குத் தெரியாது
அதன் மகிமை....
தாமதம் ஆனாலோ
தடைபட்டுப் போனாலோ தெரியும்
சம்பளமே தம் பலமென்று...

நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில்
வெட்டியாய் வெட்டுவோருக்குத் தெரியாது
அதன் மகிமை..
அதுவும் கிடைக்காதபோதே தெரியும்
வடநாட்டுக்காரன் வராத இடம்
அதுமட்டுமே என்று...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
ஒன்றின் மகிமை என்பது
ஒன்றில் இருக்கும்போது அல்ல...
ஒன்றை இழக்கும்போதே தெரியும்....
ஆக..‌
இருக்கும்போதே சேமியுங்கள்...
இல்லாதபோது உதவும்...

✍️செ. இராசா

13/01/2023

ஆட்டுக்கெதுக்கு தாடி-----------------(கோத்தால்சாவடி lady)

  


பல்லவி
ஆட்டுக்கெதுக்கு தாடி
இந்த நாட்டுக்கெதுக்கு கேடி
செல்லோ செல்லோ செல்லோ
செல்லோ செல்லோ...
ஆட்டுக்கெதுக்கு தாடி
இந்த நாட்டுக்கெதுக்கு கேடி

சும்மா சும்மா சீனு போடவும் (போடாடேய்)
மக்கு போல பேசி ஓட்டவும் போடாடேய்)
உங்களோட புத்திய காட்டவும் (போடாடேய்)
மண்டுகளக் கூட்டு சேர்க்கவும் (போடாடோய்)
நீ எச்சத் தனமா நடிச்க வேணாம்
கலைஞர் ஆட்சி நடக்குதிங்கே...
 

பல்லவி
ஆட்டுக்கெதுக்கு தாடி
இந்த நாட்டுக்கெதுக்கு கேடி
ஆட்டுக்கெதுக்கு தாடி
இந்த நாட்டுக்கெதுக்கு கேடி
 

சரணம்_1
ஒன்றியம்போட்ட ரூட்ல ஒட்டி நீயும் பாக்ற
தளபதியால் தவிடு பொடி ஆவய்யா
சொல்லுற தாள நடையில சொன்னதெல்லாம் செய்யுற
யாருனாலும் பதறி ஓட வேணும்யா..‌

கூடிவந்தா ஒழுங்கா முறையா இருக்கலாம்
மோதிநின்னா முறைச்சா வகையா செய்யுவோம்
கூடிவந்தா ஒழுங்கா முறையா இருக்கலாம்
மோதிநின்னா முறைச்சா வகையா செய்யுவோம்

தாஜா பண்ணி பேஜார் பண்ணும் மனுசன் யாருங்கோ
அவர் நுழைய பார்த்தா கழகம் வெட்டும் வாலத் தானுங்கோ
 

சரணம்_2
கட்டுறவாச்சு ரேட்டுல காஸ்ட்லி வாட்சு விலையில
எத்தனைவாட்சு விலைக்குநாம வாங்கலாம்
பேட்டி கொடுத்து பார்க்குறார் பின்னால போயி பேசுறார்
பில்லுகேட்டா கொடுக்கவில்லை பாருங்க

பில்லுகேட்டா ஒழுங்கா முறையா காட்டுய்யா
இல்லைனாக்க ஒழுங்கா வாய மூடுய்யா
பில்லுகேட்டா ஒழுங்கா முறையா காட்டுய்யா
இல்லைனாக்க ஒழுங்கா வாய மூடுய்யா
தாஜா பண்ணி பேஜார் பண்ணும் மனுசன் யாருங்கோ
அவர் நுழைய பார்த்தா கழகம் வெட்டும் வாலத் தானுங்கோ


12/01/2023

இஸ்லாமியத் திருமண வாழ்த்து

 

பாடகர்கள்: அக்பர், இன்பக்கலில் மற்றும் ZEE தமிழ் புகழ் ஷியாமலா
இசையமைப்பாளர்: விஜய் சங்கர்
எழுதியவர்: Raja Manickam
தயாரிப்பாளர்: அக்பர்
 
ஷாகுல் ஹமீது + அஃப்ரோஸ் பானு
 
ஆண்-1
பாசம் நேசம் மிக வாழ்வீரே...
பாவம் நீங்கும் நல்லருள் கிட்டும் துஆக்களாலே...
 
ஆண்-2
நபியின் வழியின் படி செல்வீரே...
நாளும் நாளும் நல்லறம் கிட்டும் துஆக்களாலே
 
ஆண்-1 & 2:
பரக்கத்து செய்வான் அல்லாஹ்
படைத்தவன் அன்றோ அல்லாஹ்
தரத்தரத் தருவான் அல்லாஹ்
தடுப்பதும் கொடுப்பதும் அல்லாஹ்.....(2)
 
ஆண்:
யாரையும் என்றும் புண்படப் பேசார் அதுதானெங்கள் ஷாகுல்..
சீண்டிடப் பார்க்கும் சிலரையும் கூட
சிரித்தேகடப்பார் ஷாகுல்..
 
பெண்:
யாரையும் வீணாய்க் கண்டிட மாட்டாள்
அதுதானெங்கள் அஃப்ரோஸ்....
சீண்டிட எண்ணும் சிலரையும் கூட
சிந்திக்கவைப்பாள் அஃப்ரோஸ்....
 
ஆண்:
நல்ல வழியில் நலமுடன் செல்ல நினைப்பவனெங்கள் ஷாகுல்...
செல்லும் முறையில் நேர்மை இருக்க
நினைப்பவனெங்கள் ஷாகுல்...
 
பெண்:
அண்ணல் வழியில் அறமுடன் செல்ல
துணையெனவருவாள் அஃப்ரோஸ்....
இல்லம் முழுதும் இறையருள் பெருக
இணையெனவருவாள் அஃப்ரோஸ்....
 
இருவரும்:
நன்மறை காட்டும் வழியினிலே
நல்லறம் சிறக்க வாழ்த்திடுவோம்...(2)
 
ஆண்:
உதவிகள் வேண்டி உரைத்திடும் முன்னே உதவிடும் குணவான் ஷாகுல்
உடன்வரும் பெண்ணை உயர்வாய் எண்ணி உயிரென மதிப்பான் ஷாகுல்
 
பெண்:
உறவென நாடி வருபவர் கண்டே உதவிட இணைவாள் அஃப்ரோஸ்
உளமுடன் என்றும் கணவரை எண்ணி கடமையில் வருவாள் அஃப்ரோஸ்
 
ஆண்:
அகத்தை நோக்கி ஆழம் சென்றால் புரியும் ஷாகுலின் பாசம்
அருகினில் இன்னும் நெருங்கிடும் போதே தெரியும் ஷாகுலின் நேசம்
 
பெண்:
முகத்தை மூடி பார்க்கிற போதும் தெரியும் உண்மையின் வாசம்
சகத்தில் எங்கோ இருக்கிற போதும் கவிக்கும் காதலர் தேசம்..
 
இருவரும்:
நன்மறை காட்டும் வழியினிலே
நல்லறம் சிறக்க வாழ்த்திடுவோம்..(2)
 
✍️செ. இராசா

யாரு யாரு யாரு யாரு .........தன்னை நம்ப வில்லையோ

 


சுவாமி_விவேகானந்தரின்_பிறந்தநாள் 

தேசிய_இளைஞர்_தினம் 

அவரின்_பொன்மொழியே_பாடலாக 

மெட்டு_ஓடி_ஓடி_ஓடி_ஓடி_உட்கலந்த_ஜோதி

யாரு யாரு யாரு யாரு
.........தன்னை நம்ப வில்லையோ
யாருமில்லை இல்லை இல்லை
.........உண்மை யான ஆஸ்த்திகன்!
யாரு யாரு யாரு யாரு
..........தன்னை நம்பும் ஜீவனோ
யாருமென்றும் சொல்வதில்லை
...........நம்பி டாத நாஸ்திகன்!

வெற்றி வெற்றி வெற்றி யென்று
.........வெற்றி கொள்ள வேண்டினால்
வெற்றி பற்றும் வேட்கை கொண்டு
..........வேக மாக ஓடுவாய்!
முற்றும் உன்னை நம்பி நம்பி
.........முட்டி முட்டி மோதினால்
முற்றும் இல்லை என்ற வாய்ப்பும்
‌........முன்னே நிற்கக் காணுவாய்!

✍️செ. இராசா

11/01/2023

 ஒரு நீண்ட அத்தியாயம் முடிவுக்கு வருகிறது ------- கத்தாரில் நான்

 


ஒரு_நீண்ட_அத்தியாயம்_முடிவுக்கு_வருகிறது 

கத்தாரில்_நான்

ஏற்கனவே அஸ்ஸாமில்_நான் என்ற ஒரு நூல் வெளியீடு செய்திருந்தேன். அதில் என் பள்ளி மற்றும் கல்லூரி பருவம்தொட்டு சென்னை மற்றும் அஸ்ஸாமில் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான விடயங்களை தொகுத்து வழங்கி இருந்தேன். அதில் நான் கத்தார் வந்த வருடமான 2006 வரைக்கும் பதிவாகி இருந்தது. அதனை முகநூலில் தொடராக எழுதியபோதே அனைவரும் அடுத்தென்ன அடுத்தென்ன என்று ஆர்வமாக கேட்டார்கள். சரி..... விட்ட இடத்திலிருந்து அடுத்த கட்டுரைகளை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கின்ற கட்டம் வந்துவிட்டதாகவே உணர்கிறேன்.

முதல் நூலில் முதல் 25 வருட சுவாரஸ்யமாக அனுபவங்களை தொகுத்திருந்தேன். இப்போது, கத்தாரில்_நான் என்ற பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். பொதுவாக, இடம் பெயர்தல் ஆனபிறகுதான் இருந்த இடத்தைப்பற்றி சுதந்திரமாக எழுத முடியும் என்பது திண்ணம். ஏறக்குறைய, அதற்கான சூழல் வந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஆம், இந்த வருடத்தோடு பிள்ளைகளின் படிப்பை மனதில் கொண்டும், ஸ்திரமற்ற பணியை மனதில் கொண்டும் இடம் பெயர்தலை நோக்கி உந்தப்பட்டுள்ளேன் என்றே சொல்லலாம்.

அடுத்து எனக்கான அத்தியாயம் என்பது உள்நாட்டிலா? வெளி நாட்டிலா? இதே நிறுவனத்திலா? அடுத்த நிறுவனத்திலா?....இப்படி எதுவும் தெரியாமல், பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி எடுக்கும் சில அவசர முடிவுகள் என்பது கசப்பாக இருந்தாலும் காலத்தின் கைகளில் அதைக் கொடுத்து விட்டு இடம்பெயர்தல் என்னும் முடிவை எடுக்கத்தான் வேண்டியுள்ளது. காரணம், உலக அளவிலான பொருளாதாரப் போட்டியில், வேலை எடுக்கும் ஒப்பந்தக்காரர்களின் விலை குறைந்து கொண்டே போவதால், பெரிய சிறிய என அனைத்து நிறுவனங்களுமே தடுமாறுகின்றன. ஆள் குறைப்பு, சலுகைக் குறைப்பு, ஊதியக் குறைப்பு, தற்காலிக அல்லது நீண்ட கால கட்டாய விடுப்பு......என எல்லாமும் மாறிக்கொண்டே வருகிறது.
இப்பேர்பட்ட உலகத்தில் நாமும் நம் பிள்ளைகளை அவர்களின் தொடர் ஓட்டத்திற்கு தயார் படுத்த வேண்டாமா? (என்ன செய்வது பிறந்து விட்டோமே?)

2006இல் ஒரு வருடம் இருந்தால் போதும் என்று கத்தார் வந்த எனக்கு, இன்றுவரை உணவளித்து, அப்பாவின் கடனடைத்து, திருமணம் செய்வித்து, இரண்டு பிள்ளைகளையும் இங்கேயே பிரசவிக்க வைத்து, இரண்டு வீடுகள் கட்ட வைத்து, இது நாள் வரையிலும் எமக்கும் எம்மைச் சார்ந்த அனைவருக்கும் வாழ்வளித்த மற்றும் வாழ்வளித்துக் கொண்டிருக்கும் கத்தார் நாட்டிற்கு எம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இங்கே ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை எழுத ஆயத்தமாகிறேன்...பார்ப்போம்!

இறைவன் அருள் புரிந்தால் தொடரும்.....

செ. இராசா

போடுகிற திட்டத் தால (ஓடுகிற வண்டி ஓட)

 


 மெட்டு_ஓடுகிற_வண்டி_ஓட
 

பல்லவி

போடுகிற திட்டத் தால
பொன்னானது நம்ம நாடு...
நம்ம வீட்டில் நரிகள் புகுந்தா..
என்னாகும் எண்ணிப் பாரு ....(2)

போடுகிற திட்டத் தால..
 

சரணம்_1

நம்ம தமிழ் நாட்டிலிங்கு
வே...ரூன்ற ஆசைகொண்டு
கொல்லையில வந்த காளான்
விசம் தூவப் பார்க்குதிங்கே

ஆயிரம் கணக்கு போட்டு
சண்டாளர்கள் ஒன்று கூடி
செய்வது எல்லாம் வீணே
ஜெயிப்பது தர்மம் தானே

முட்டி முட்டி மோதி னாலும்
வெட்க மிலா கூட்டமம்மா...
நல்லவழி கேளம்மா...
கலைஞர்வழி தானம்மா....
 

பல்லவி

 போடுகிற திட்டத் தால
பொன்னானது நம்ம நாடு...
நம்ம வீட்டில் நரிகள் புகுந்தா.
என்னாகும் எண்ணிப் பாரு ....

போடுகிற திட்டத் தால..


சரணம்_2

ஆண்டவனத் தேடுகின்றார்
ஐயா வீட்டு மீனாட்சி
கோடுபோட்டு தடுக்கவில்லை
ஊரெல்லாம் இங்கே சாட்சி

கொள்கை வழி கழகமம்மா
கட்டாயப் பாடமம்மா
தானாக மாற வே....ண்டும்
தடியாலே இல்லையம்மா...

பொய்யான கூட்டம் இன்று
பொய்யாகப் பரப்பி விட்டு
அரசாளும் ஆசையால்
சும்மா ஏதோ பேசுகின்றார்


பல்லவி

போடுகிற திட்டத் தால
பொன்னானது நம்ம நாடு...
நம்ம வீட்டில் நரிகள் புகுந்தா..
என்னாகும் எண்ணிப் பாரு ....

போடுகிற திட்டத் தால..

✍️செ. இராசா

10/01/2023

மேலே ஏறி நிக்கசொல்ல (சென்னை கானா)

 

மேலே ஏறி நிக்கசொல்ல கண்டுக்க மாட்டான்..
கீழே வந்து சிரிச்சிகினே சீனப் போடுவான்..
மூடிக் கிட்டு குந்திகினா சொம்பைனு சொல்வான்
மோதி முட்டி வந்துநின்னா தௌலத்து என்பான்
 
மெய்யாலுமே சொல்லிகிறேன் கேட்டுக்க மச்சி
ஃப்ரியாவிடு பாத்துக்கலாம் நாளைக்கு வச்சி..(2)
 
(இதைவிட இன்னும் தரை மட்டாம வேண்டுமாம்....ஆக... இன்னும் முயல்வோம்)
 
✍️செ. இராசா

ஐயானா மா.சு பாருடா ஆ (அம்மானா_சும்மா_இல்லைடா)

 


 மெட்டு_அம்மானா_சும்மா_இல்லைடா

(மா.சுப்பிரமணி ஐயா அவர்களுக்காக)
 

பல்லவி 

ஐயானா மா.சு பாருடா ஆ...
அவர் இல்லேனா வேற யாருடா ஆ... (2)
கட்சி யோட ஆர்மி ஆர்மி
எங்க ரோலு மாடல் நீங்க சாமி

செஞ்சவர மறந்தா
அவன் நன்றிகெட்ட ஆளு
அந்த உத்தமர அழைச்சா
அவர் வந்திடுவார் கேளு

ஐயானா மா.சு தானடா
அவர் இல்லேனா நாம இல்லடா ஆ...
 

சரணம்_1
நம்ம கட்சி பேர் எடுத்தா
ஐயாவுக்கு சந்தோசம்
நாலு பேர வாழ வச்சா
தளபதிக்கும் சந்தோசம்

போற நிதி நன்மை செஞ்சால்
ஏழைக்கெல்லாம் சந்தோசம்
நல்ல திட்டம் சேர்ந்த தென்றால்
எப்போதுமே சந்தோஷம்

நம்ம கழகம்
ஆட்சி நடந்தா
டெல்லியுமங்கே
சொல்லக் கேட்கும்
நம்ம மதிச்சா
நாமும் மதிப்போம்
வம்பு பண்ணுனா
வம்பு தானடா...

வந்தாலும் வராமப் போனாலும்
நாளும் பணி செய்வோம் வாடா...

ஐயானா மா.சு பாருடா ஆ...
அவர் இல்லேனா வேற யாருடா ஆ

*************** 

சரணம்_2

இராவு பகல் கண் முழிச்சு
நாளும் நன்மை செய்திடுவார்
வாலாட்டும் பேர்களுக்கு
தன் மொழியில் புன்னகைப்பார்..

தொல்லைதந்த நோய் துரத்த
கண்ணுறக்கம் தள்ளி வச்சார்
ஊருக்காக முன்ன நின்னு
தன்மகனைக் கொல்லி வச்சார்

சொல்ல நினைச்சா ஆ
நெஞ்சம் கொதிக்கும்
தாயிபோலத் தான்
என்றும் அவரே....

நாட்டுக் காகத்தான்
என்றும் நினைக்கும்
ஸ்டாலின் ஐயாவின்
நண்பர் இவரே...

கட்சியைப் போல் கண்ணியம் கொண்டு
அண்ணனைப் போல் அண்ணனே உண்டு
  

பல்லவி 

ஐயானா மா.சு பாருடா ஆ...
அவர் இல்லேனா வேற யாருடா ஆ

✍️செ. இராசா

கொங்கு நாட்டுக் கோட்டை

 


பாடல் ஒலிப்பதிவு இனிதே நடைபெற்றது....
பாடியவர்கள்:
இன்பக்கலில் & ZEE தமிழ் புகழ் ஷியாமலா
எழுதியவர்: செ. இராசமாணிக்கம்
இசையமைப்பாளர்: விஜய் சங்கர்
தயாரிப்பாளர்: அஜீத், கொங்கு மக்கள் முன்னணி 
 
**********
கொங்கு நாட்டுக் கோட்டை
இனிதான் எங்க வேட்டை
கொட்டு கும்மிப் பாட்டை
அதுதான் அடிக்கும் சாட்டை
காளிங்க ராயரு கொங்காள்வான் கவுண்டரு
எல்லோரும் வாழ்ந்த மண்ணு...
இப்போது என்னானோம் சொல்லு கண்ணு?
இப்போதே... ஒன்னாவோம் வந்து நில்லு...
 
ஏ...
இடிஇடிக்குது வெடிவெடிக்குது சும்மா வந்தாலே
படபடங்குது நடுநடுங்குது சொன்னா தன்னாலே
ஆறுமுகக் கவுண்டரவரு பேரைச் சொன்னாலே
பாரிலுள்ள படைநடுங்கும் போடு தில்லாலே
 
***********
வீராதி வீரன்
சூராதி சூரன்
தீராதி தீரன் சின்ன மலை!
பாராண்ட வம்சம்
பாசத்தின் அம்சம்
பாருங்க இப்போ என்ன நிலை?
 
வெள்ளைக் காரனையே வெளுத்தது போல
கொள்ளைக் காரங்கள விரட்டிட வாங்க...
முன்போல் நிம்மதியா வாழ்ந்திட நீங்க
கொங்கு மக்களோட முன்னணி வாங்க
 
இடிஇடிக்குது வெடிவெடிக்குது சும்மா வந்தாலே
படபடங்குது நடுநடுங்குது சொன்னா தன்னாலே
ஆறுமுகக் கவுண்டரவரு பேரைச் சொன்னாலே
பாரிலுள்ள படைநடுங்கும் போடு தில்லாலே
 
************
ஓடாநிலை கோட்டைகட்டி
ஒய்யாரமா வாழ்ந்த இனம்..
ஊரூரா கால்வாய்வெட்டி
வெள்ளாமை செய்த இனம்...
பொன்னரு சங்கரு தீரன்சின்ன மலை
வம்சமா வந்த சனம்
பழனி மண்ணோட மைந்தரு ஆறுமுக அண்ணன்
கவுண்டரும் கொங்கு இனம்..
 
கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
கும்மியக் கொட்டுங்கடி
கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
கும்மியக் கொட்டுங்கடி
 
*********
காங்கேயங் காளை
பாய்ந்தோடும் வேளை
மேலேறி நிற்கும் எங்க வீரம்!
கோட்டைகள் கட்டி
கால்வாய்கள் வெட்டி
ஊருக்காய் வாழும் நெஞ்சின் ஈரம்!
 
வள்ளல் சடையப்பர் வாழ்ந்தது போல
வாரி வழங்கிட நிமிருவோம் வாங்க...
கவுண்டர் யாரென்று காட்டிட நீங்க
புலிக்கொடி ஏந்திட புறப்பட்டு வாங்க
 
இடிஇடிக்குது வெடிவெடிக்குது சும்மா வந்தாலே
படபடங்குது நடுநடுங்குது சொன்னா தன்னாலே
ஆறுமுகக் கவுண்டரவரு பேரைச் சொன்னாலே
பாரிலுள்ள படைநடுங்கும் போடு தில்லாலே
 
✍️செ. இராசமாணிக்கம்

கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி (வித விதமா சோப்பு சீப்பு)

 


மெட்டு: வித விதமா சோப்பு சீப்பு
 
*********
கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி
உன் பப்பு எல்லாம் வேகாதெங்க முன்னாடி
எப்பவுமே கழகம் ஒரு முன்னோடி
அதை எதிர்த்துவந்தா போயிருவ பின்னாடி
நான் சும்மா ஒன்னும் சொல்லல
கை வெச்சே சொல்றேன் நெஞ்சில
நாங்க யாரையும் பார்த்தும் அஞ்சல
நீ எங்கள பேச யாருள?
சீனு சீனு சீனுடா (இனி) சீனு போட்டா சங்குடா
சீனு சீனு சீனுடா சீனு போட்டா சங்குடா 
 
துண்டு பல்லவி
******************
கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி
உன் பப்பு எல்லாம் வேகாதெங்க முன்னாடி 
 
**********
பல நாள் போடுற வேஷம்
நேரம்வந்தாக்க அது வரும் தன்னால...
காலையில் எழுந்து குற்றம் சொல்லவேண்டி
கண்ணத் துலக்கி வச்சு நாளும் பார்க்குறான்
என்ன பார்த்தாலும் ஒன்னும் கிடைக்கல
என்ன செய்யலாம்னு கைய பிசையுறான்
அவன் கீழ பார்த்தான்..அட ஒன்னும் கிடைக்கல
அப்புறம்
சொம்மா சொம்மா பொய்யசொல்லி
சீனு போட்டுத் திரியிறான்
சீனு சீனு சீனுடா (இனி) சீனு போட்டா சங்குடா
சீனு சீனு சீனுடா சீனு போட்டா சங்குடா 
 
***********
சென்னை மாநகரிலே
மேயர் ஆனார் அன்றைக்கே.
கலைஞர் வழியினில் நல்லாட்சி செய்யும் எங்கள்
அண்ணா வழியினில் கட்சியினைக் கொண்டு செல்லும்
செய்யுற செயலால சிங்கம்போல ஏறிச்செல்லும்
ஸ்டாலின் ஐயாவின் ஆட்சியினைக் குத்தம் சொல்ல
நீ எல்லாம் ஆளா...?
போ பொழச்சு போயா...
ஆமாம்யா
சொம்மா சொம்மா பொய்யசொல்லி
சீனு போட்டுத் திரியிறான்
சீனு சீனு சீனுடா (இனி) சீனு போட்டா சங்குடா
சீனு சீனு சீனுடா சீனு போட்டா சங்குடா 
 
*********
கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி 
 
செ. இராசா

09/01/2023

நல்லவன் யாரு? கெட்டவன் யாரு?

நல்லவன் யாரு? கெட்டவன் யாரு?
.....................நம்ப முடியல...!!!!
சில்லரை யாரு? சினேகிதன் யாரு?
....................ஒன்னும் புரியல...!!!!
 
நேரப்பார்த்தா நண்பேங்கிறான்..
தள்ளிப்போனா வம்பேங்கிறான்.
அள்ளித்தந்தா கர்ணங்கிறான்..
கிள்ளித்தந்தா கஞ்சங்கிறான்..‌
 
பழகப்பழகப் பாலு புளிக்கும் 
..........பழமொழிதாங்க!
பழகும்போது தெரிவதில்லை
...........அதுமட்டும் ஏங்க?
விலகவிலக வேசங்களையும்
...........வெளிப்படையாங்க!
விலகும்முன்னே தெரிவதில்லை
...........அதுமட்டும் ஏங்க?
 
✍️செ. இராசா

08/01/2023

சோம்பல் முறி ------- ஔவைத் திங்கள் 24

விழிகள் திறந்து விடியலைப் பார்ப்போர்
விழிமூட மாட்டார் விரைந்து
(1)
 
உறங்கும் தருணம் உறங்கா திருந்தால்
உறங்குவாய் பின்னர் உழன்று
(2)
 
பிறகு பிறகென்று பேசுகின்ற யாரும்
பிறகும் பிறகென்பர் பார்
(3)
 
அன்றன்று செய்வதை அன்றன்று செய்பவர்கள்
என்றைக்கும் முன்செல்வர் இங்கு
(4)
 
கொட்டாவி விட்டபடி கோபுரத்தைப் பார்ப்பவர்க்குக்
கிட்டுமிடம் எப்போதும் கீழ்
(5)
 
வாய்ப்பு வருமென்று வாசலையே பாராமல்
வாய்ப்பை உருவாக்க வா
(6)
 
என்னத்த என்போர்சொல் எப்போதும் கேளாமல்
முன்னோக்கிச் சென்றால் முதல்
(7)
 
ஓய்வெடுத்த பின்னாலும் ஓடத் தயங்கினால்
நோய்ப்பற்றும் என்றெண்ணி ஓடு
(8)
 
துடிப்புடன் இல்லாமல் சோர்வுடன் நின்றால்
படியேறிப் போவர் பலர்
(9)
 
வருகின்ற வாய்ப்பெல்லாம் வாழ்க்கையென எண்ணித்
தருவதை நன்றாகத் தா!
(10)
 
✍️செ. இராசா