31/12/2019

தமிழ்ப்பட்டறை



தமிழ்ப்பட்டறை
***************
அங்கிங் கெனாதபடி
எங்கெங்கோ எழுதிவிட்டு
சான்றிதழின் பின்னாலே
சான்றோர்கள் போகையிலே
எப்பொருளும் தந்திடாமல்
மெய்ப்பொருளாய் இயங்குமொரு
முகநூலின் குழுமத்தை
முதன்முதலில் கண்டபோது
ஆச்சரியப் பூச்சொரிய
அன்னாந்து வியந்ததனை
அப்படியே சொல்லிடவே
அடியேனும் முயல்கின்றேன்!!!
அருந்தமிழ்ப் பட்டறையை
அடிதொட்டு வணங்குகிறேன்!!

அறிமுகம்
*********
எப்படி பட்டதென
இப்போதும் தெரியாது?
கவிதைப் போட்டியெனக்
கண்ணில் பட்டது..

“தங்கமடி நீ எனக்கு” இது தலைப்பு
தங்க மடி தந்தது அது எனக்கு
எழுதிய முதல் கவியே
இரண்டாமிடம் ஏற்றியது
எழுதினேன் எழுதினேன்..
தொடர்ந்து எழுதினேன்..
எத்தனையோ வெற்றிகள்
எத்தனையோ தோல்விகள்
அது ஒரு பொருட்டல்ல
அந்த நிர்வாகிகளின் பங்களிப்பு
அது அது அது என்னை ஈர்த்தது..

நிகழ்வுகள்
***********
ஒரு நாள் கவிச்சரம் என்றார்கள்
மறு நாள் கருத்தரங்கம் என்பார்கள்
ஒரு நாள் திண்ணை என்பார்கள்
மறு நாள் கதை எழுது என்பார்கள்
ஒரு பக்கம் ஹைக்கூ என்பார்கள்
மறு பக்கம் எசப்பாட்டு என்பார்கள்
ஒரு பக்கம் சிறுவர் பாடல் என்பார்கள்
மறு பக்கம் படக் கவிதை என்பார்கள்
தினமும் தினமும்
கணமும் கணமும்
கனமின்றி உழைப்பார்கள்- தலைக்
கனமின்றி உழைப்பார்கள்!!!

அன்றே எழுதிய வாழ்த்து (ஜூன் 2017)
************************************
எழுத்துத் தமிழ் சிறப்புறவே
தமிழ்ப்பட்டறைத் தளம்மூலம்
எழில்தமிழ் வளம்காக்கும்
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரு மூச்சு!
எப்பொழுதும் தமிழ் மூச்சு!
என்நேரம் தமிழ் தாகம்!
எல்லோர்க்கும் ஒரே நோக்கம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
எனக்குள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எடுத்தாளும் ஆளுமையால்
எழுத்துப்பட்டறை ஆகியதோ?!
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கிறதே!!!

என்தமிழ் உறவுகள்
என்றென்றும் சிறப்புறவே
என் மனமார வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறைத் தலைவரையும்
தமிழ்ப்பட்டறைத் தளத்தினையும்
என் மனம் மொழி இரண்டாலும்
என்வழியில் வாழ்த்துகிறேன்!
எம்சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

பட்டறை மாணவன் நான்
***********************
எதுகை மோனையென
எதை எதையோ எழுதி வந்தேன்..
இங்கே வந்தபின்தான்
இலக்கணம் அறிந்து கொண்டேன்..

ஹைக்கூ சென்றியூவென
பொய்கூவாய் கூவி வந்தேன்
இங்கே வந்தபின்தான்
அதையும் அறிந்து கொண்டேன்..

அது மட்டுமா?!

எசப்பாட்டு இல்லாட்டி- இன்றென்
நிசப்பாட்டு இல்லீங்கோ?!
கவிச்சரம் இல்லாட்டி- இன்றிந்தக்
கவி ராசா இல்லீங்கோ?!

இது மட்டுமா?!

எத்தனையோ அண்ணன்கள்?!
எத்தனையோ அக்காக்கள்?!
என்னெற்ற தம்பிகள்?!
என்னெற்ற உறவுகள்?!
அனைத்தையும் வழங்கியது
அருந் தமிழ்ப்பட்டறையே...!!!

நன்றியுரை
**********
“நான் எனும் மண்குடம்”
நான் வெளியிட்ட நூல் என்றால்
அதற்கு நானா காரணம்?!!
அதற்குப் பட்டறையே காரணம்

தமிழ் மாணவன் நானும்
தமிழ்ச்சோலையின் நிர்வாகி என்றால்
அதற்கு நானா காரணம்?!!
அதற்கும் பட்டறையே காரணம்

இன்னும் இன்னும் இன்னுமென
இன்னும் சொல்லலாம்தான்..
இருப்பினும் இத்தோடு முடித்து
என் இதயத்தை எடுத்து
இங்கேயே சமர்ப்பித்து
நன்றிகூறி விடைபெறுகிறேன்
நன்றி! நன்றி!! நன்றி!!!

✍️செ. இராசா

உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு மணித்துளியும்



உன்னோடு வாழ்ந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணித்த பின்னாலும்
மறையாது அற்புதமே...

காதலிலே சில நிமிடம்..
மோதலிலே சில நிமிடம்..
பாடலிலே சில பொழுது..
ஊடலிலே சில பொழுது..

எப்படி இருந்தாலும்
எப்போது நினைத்தாலும்
என்னோடு வருவாயே..
என்னோடு கலப்பாயே..

உன்னால் அடைந்த சுகம்
ஒன்றல்ல இரண்டல்ல
ஒவ்வொன்றாய் சொல்வதற்கு
ஒரே வார்த்தையில் சொல்வதெனில்
நீ இன்றி நானில்லை..
என் அன்புத் தமிழே
என் அன்பு நினைவுகளே...
உங்களால் வளர்கிறேன்..

2019 வரை வளர்த்த உங்களுக்கு
2020 ஆம் வருடத்திற்கான
உலகப் புதுவருட வாழ்த்துகளும்
உளமார்ந்த நன்றியும்!!

நன்றி! நன்றி!! நன்றி!!!

✍️செ. இராசா

பொறுமை



பொறுக்கும் தன்மையே
பொறுமை என்று
பொறுமையின் சிறப்பைப்
பொறுமையாய்ச் சொல்லிவிட்டு;

பொறுக்கும் மெய் மறந்தோர்க்கு
“பொறு” என்று அடித்துச் சொல்லி
பொறுமையின் பெருமையைப்
பொறுப்பாய்க் காட்டிவிட்டு;

பொறாமையில் தூற்றுவோரைப்
பொறாமல் சண்டையிட்டால்
பொறுமை..பொறுமை என்று...
பொறுமையும் நகைக்குமன்றோ?!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_99

30/12/2019

பணியாரம் வந்தால்

பனியாரும் வேளைப் பணியாரம் வந்தால்
பணியென்ன வேறு புசி


பாடல் மெட்டு: மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல்...



#மீனாட்சி மீனாட்சி
நித்தி வாழ்க்கை என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி
நித்தி வாழ்க்கை என்னாச்சி
கையில் காசு வந்தாச்சி
கைலாசுக்கே போயாச்சு

ரஞ்சிதம்மா ரஞ்சிதம்மா ரஞ்சிதம்மா
சாமிக்கிட்ட ரஞ்சீதமா கொஞ்சிடுமாம்

(மீனாட்சி மீனாட்சி .....)

ரஞ்சிதம்மா ரஞ்சிதம்மா ரஞ்சிதம்மா
சாமிக்கிட்ட ரஞ்சீதமா கொஞ்சிடுமாம்

கட்டிக்கிட்டாரு கட்டிக்கிட்டாரு எத்தனை பொண்ணுங்கதான்..
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு உளவுத் துறையத்தான்...
சாமியப்பாரு சாமியப்பாரு ரவுசு ரவுசுதான்!
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க தினமும் நியூசுதான்!

சாமி செஞ்ச நாடு! நீ சீக்கிரம்மா ஓடு
பாடு நீயும் பாடு! அவன் பாடு செம பாடு!
மக்கு இன்னா மக்கு! இங்க எல்லாருமே மக்கு!
தொக்குன்னாக்கா தொக்கு! நித்தி மட்டும் தொக்கு!

ரஞ்சிதம்மா ரஞ்சிதம்மா ரஞ்சிதம்மா
சாமிக்கிட்ட ரஞ்சீதமா சொல்லீடுமா..
மீனாட்சி மீனாட்சி
நித்தி வாழ்க்கை என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி
நித்தி வாழ்க்கை என்னாச்சி
கையில் காசு வந்தாச்சி
கைலாசுக்கே போயாச்சு!

✍️செ. இராசா

29/12/2019

#கெண்டை_மீனு_குழம்பு_வச்சு




#கெண்டை_மீனு_குழம்பு_வச்சு
கேப்பைக் களி செஞ்சு வச்சு
அத்த பெத்த ஆசை மகள்
அத்தானுக்கு செஞ்சு தந்தால்
நெஞ்சுக்குள்ள வாசம் வந்து
கொஞ்சிடுமே...கொஞ்சிடுமே
நெஞ்சுக்குள்ள வாசம் வந்து
கொஞ்சிடுமே...கொஞ்சிடுமே....

பட்டிக் காட்டு பொண்ணு ஒன்னும்
பெட்டிப் பாம்பு இல்லை மாமா
பட்டணத்தில் கூட்டி வந்து
கட்டியாந்து வச்சாலும்
இஞ்சபாரு...அன்பு மாமா
எங்கவூரு வாசம் மாமா
இஞ்சபாரு...அன்பு மாமா
எங்கவூரு வாசம் மாமா

✍️செ. இராசா

விலைமிகு வாகனமும்




விலைமிகு வாகனமும் வீதிக்கு வந்தால்
நிலையென்ன வாகும் நினை!

✍️செ. இராசா

28/12/2019

தேர்தல் முடிந்த நேரத்தில் ஒரு பாடல்


எங்க ஊரு நல்ல ஊரு
எந்த பேதமும் வந்ததில்லை
என்ன ஆச்சு? ஏது ஆச்சு?
அந்தக் காலம் இப்போ இல்லை

(எங்க ஊரு.....)

உள்ளூர் தேர்தல் வந்தாப் போதும்
எல்லாப் பேதமும் இங்கேப் புகுறும்
ஓட்டுக் கணக்கு தூக்கத்தைக் கெடுக்கும்!
நோட்டுக் கணக்கு துயரத்தைக் கொடுக்கும்!

(எங்க ஊரு.....)

எந்தத் தேர்தல்? இந்தத் தேர்தல்?
எதுக்கு இப்போ? இன்னொரு தேர்தல்?
எதுவும் தெரியா எங்கூர் பாட்டி...
என்றும் கேப்பாள் பொக்கையக் காட்டி!

(எங்க ஊரு.....)

ஒட்டும் உறவும் ஊருல இல்லை
ஒட்டுப் போடவும் ஆளே இல்லை
விரும்பி யாரும் விலகிட வில்லை
இருந்து பொழைக்க வழியே இல்லை!

(எங்க ஊரு.....)

நகரம் தேடியே நகரும் வாழ்க்கை
நாங்க ஒன்னும் விரும்பவே இல்லை
ஒன்னும் இல்லா ஊருக்குள்ளை
இன்னும் இன்னும் என்னத்த சொல்ல?!

(எங்க ஊரு.....)

யாரு பெருசு? யாரு சிறுசு?
எதுக்கு இப்போ சண்டை சண்டை
என்ன ஆச்சு? ஏது ஆச்சு?
இன்னும் எதுக்கு...........ஐயோ ஐயோ

போங்கப்பா....போங்க...
போய் வேலையப் பாருங்க...

செ. இராசா

தகதக தகதிமி நடராஜா


நம்ம ஊரு பசங்களுடன் சேர்ந்து ஒரு சிவன் பாடல் தொடங்கினோம். அந்தப் பாடல் இப்போதுதான் முடியும் நிலையில் உள்ளது. அதில் மேலும் சில வரிகள் உடனடியாக வேண்டுமென்று ஒரு இக்கட்டான நேரத்தில் கேட்டார்கள். இறைவனுடைய அருளால் உடனேயே எழுதி அனுப்பிவிட்டேன். அப்பாடல் கீழே உள்ளது உறவுகளே. அதில் கடைசி இரண்டு பத்திகள் தற்போது சேர்த்தது.

இதோ உங்கள் பார்வைக்கு...

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தகதக தகதிமி தகதக தகதிமி
தகதக தகதிமி நடராஜா
தரிகிட தகதிமி நடராஜா (1x2)

தில்லையின் கூத்தனே நடராஜா- நீ
எல்லையில் லாதவன் நடராஜா
அணுவிலே அசைந்திடும் நடராஜா-நீ
அனைத்திலும் ஆடிடும் நடராஜா

இசைக்கின்ற இசையின்
இசையிலே இசைந்து
அசைவது மட்டுமா நடனம்?- இல்லை
இசைக்கா இசையிலும்
இசையினை இசைக்கிற
அசைவுள்ள ஆட்ட(மே)மும் நடனம்!

தாம்தூம் தாளத்தில்
தகதிமி ஜதியினில்
ஆடுதல் மட்டுமா நடனம்?- இல்லை
அடிக்கிற பறையினில்
இடிக்கிற இசையினில்
துடிக்கிற துள்ள(ளே)ளும் நடனம்!

நாயண மேளத்தில்
நாட்டிய சபையினில்
காட்டுதல் மட்டுமா நடனம்?- இல்லை
நாட்டினை விட்டவர்
காட்டினைத் தேடையில்
காட்டிடும் ஆட்ட(மே)மும் நடனம்!

#மார்கழி மாதத்தில்
கானக சபையினில்
ஆடுதல் மட்டுமா நடனம்- இல்லை
#ஆடியில் ஆடிடும்
ஆலயம் கூடிடும்
ஆனந்த ஆட்டமும் நடனம்!

#ஜிகுஜிகு உடையினில்
விறுவிறு நடையினில்
அடிக்கிற கூத்தா நடனம்- இல்லை
#கிண்கிணி ஓசையில்
பொங்கிடும் ஆசையில்
வந்திடும் ஆட்டமே நடனம்!

தில்லையின் கூத்தனே நடராஜா- நீ
எல்லையில் லாதவன் நடராஜா
அணுவிலே அசைந்திடும் நடராஜா-நீ
அனைத்திலும் ஆடிடும் நடராஜா

✍️செ. இராசா

27/12/2019

கடுகைக் கடலெனக் காண்கின்ற நெஞ்சம்
கொடுக்கிற தெல்லாம் கொடை!!!

24/12/2019

சும்மாச் சும்மா



ச்சும்மா இருக்கிறேன் என்று
சும்மா சொல்லாதீர்..
சும்மாவா இருக்கிறோம்
சுற்றிக்கொண்டல்லவா இருக்கிறோம்

அதுவும் சும்மாவா சுற்றுகிறோம்?
ஆயிரம் மைல் வேகத்தில்*
ஆடாமல் குலுங்காமல்
ஆகாயத்திலல்லவா சுற்றுகிறோம்!

ஆனாலும்
நாம் சும்மாதான் சுற்றுகிறோம்

ஆகா...புரியவில்லையே
ஆம்...
இப்படியெல்லாம் சுற்றிச்சுற்றிவர
இங்கே என்ன செலவா செய்கிறோம்?!
இலவசமாய் உலாவரும் மந்திரிபோல்
எப்போதுமல்லவா சுற்றுகிறோம்?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
இங்கே எதுவும்
சும்மா இருப்பதே இல்லை!

அப்பா சும்மா இருந்திருந்தால்
எப்படியப்பா வந்திருப்போம்?
ஆதியப்பா...சும்மா இருந்திருந்தால்
ஏதப்பா இவ்வுலகம்?

இங்கே யாரும் சும்மா இல்லை
இங்கே எதுவும் சும்மா இல்லை

உயிரினங்களில் ஓடும்
இரத்த ஓட்டம் முதல்
காற்றோட்டம் வரை
எந்த ஓட்டமும் இல்லாமல்
இங்கே யாரும் சும்மா இல்லை

அட
உயிரே அல்லாத
சடப்பொருளில்கூட
புரோட்டான் முதல்
எலெக்ட்ரான் வரை
எந்த அணுவோட்டமும் இல்லாமல்
இங்கே ஏதும் சும்மா இல்லை

இனியும்..
சும்மாய் இருப்பதாய்
சும்மாச் சும்மா சொல்லாதீர்!

இதோ நீங்களும் சும்மா இல்லை
இதை அல்லவாப் படிக்கின்றீர்!
இதோ சிரிக்கவும் செய்கின்றீர்!
😊😊😊😊😊

நன்றி! நன்றி!!

✍️செ. இராசா

#சும்மா

(*பூமி சுழற்சியின் வேகம் 1000 மைல்/ மணி

23/12/2019

தெளிவாய்த் தியானங்கள் செய்!

பெரிய பெரிய பிரச்சினை என்று
பெரிதாய் நினைத்தால் பிழையாம்-புரிந்தே
எளிதாய்ச் சிறப்பாய் எதையும் முடிக்கத்
தெளிவாய்த் தியானங்கள் செய்!

போங்கப்பா நீங்க என்னோடு விளையாடுவதே இல்லை



“போங்கப்பா
நீங்க என்னோடு விளையாடுவதே இல்லை”
என்றக் கொஞ்சல் மொழியில்தான்
எத்தனை அர்த்தங்கள்?!!

“கேரம் போர்டெல்லாம்
ஒரு விளையாட்டாப்பா?”
என்ற வெள்ளந்தி வார்த்தையில்தான்
எத்தனை அர்த்தங்கள்?!

“அண்ணனோடு விளையாடுவதுபோல்
என்னோடு ஏனப்பா விளையாடவில்லை?!”
என்ற அதிர்ச்சிகரமான கேள்வியில்தான்
எத்தனை அர்த்தங்கள்?!

அர்த்தங்கள் புரிந்த அப்பா
அர்த்தமான அப்பாவாக
அன்றுதான் ஆயத்தமானார்...

#அன்பு_மகளோடு
உப்பு மூட்டை விளையாட.

✍️செ. இராசா

22/12/2019

எத்தனை திரவியம் போட்டாலும்

எத்தனை திரவியம் போட்டாலும்
செத்ததன் நாற்றம் போய்விடுமா?!
எத்தனை தடவைக் குளித்தாலும்
அத்தனை அழுக்கும் போய்விடுமா?!
எத்தனை மொட்டை அடித்தாலும்
அத்தனை பாவமும் கொட்டிடுமா?!

அருவியாய் நீரைப் பெய்தாலும்
எரிமலை என்னத் தூர்ந்திடுமா?!
கவித்திட கம்பன் வந்தாலும்
செவிடன் காதில் கேட்டிடுமா?!
அடிக்கடி ஆலயம் சென்றாலும்
அடிமன மிருகம் மாய்ந்திடுமா?!

#உள்ளே_ஓர்_மிருகம்

21/12/2019

காதல்-2


எங்கே...
உங்களுக்கு உண்மையில்
அந்தக் காதல் என்ற ஒன்று இருந்தால்
அது பற்றி எழுதுங்கள் பார்ப்போம்?!!

என் வாயை அடைக்க
என்னவள் விடும் சவால் அது!

உண்மைதான்...

கண்ணே மானே என்றால்
கண்ணும் மானும் கதறி அழும்
நிலவே மலரே என்றால் இனி
நிலவும் மலரும் ஓடி விடும்

நீ இல்லையெனில்
நான் சாவேன் என்றால்
அந்த சாவே
நம்மை சமாதிகட்ட
ஆயுதம் வழங்கும்

சரி கழுதை என்று
இதயக் ❤️குறியீடனப்பினால்
இளிக்கும் 😂குறியீடு
எகத்தாளமாய் வரும்!

அதையே ❤️❤️மீண்டும் அனுப்பினால்
அடுத்த நொடியே
குடிச்சது போதுமென்று
குறியீடு வரும்...

அடக்கொடுமையே...
ஐ லவ் யூ..என்றால்
இன்னுமா என்று....
இன்னும் சந்தேகம் வரும்..

என்ன கொடுமையென்று
ச்சும்மா.......இருந்தால்!
அலைபேசி வழியாக
அழைப்பு வரும்...
ஆம்..
காதல் வரும்❤️❤️❤️😊😊😊

✍️செ. இராசா

சிரிக்கும் இறைவன்


அனைத்தையும் துறந்துவிட்டு
அணைக்கின்ற துறவிகண்டும்;

அறமுள்ளத் தலைவனைப்போல்
அரசியல் செய்வார்கண்டும்;

வஞ்சக வணக்கம் வைத்துக்
கெஞ்சிடும் மாந்தர்கண்டும்;

மறைபொருள் தேடிவிட்டு
மறைவிலே மாறுவோர் கண்டும்;

இப்படி எழுதிவிட்டி
அப்படியே நகர்வோர் கண்டும்;

விரும்பிப் படித்துவிட்டு
விருப்பீடு தராதோர் கண்டும்;

அடடா அடடா என்று
ஆண்டவன் சிரிக்கின்றான்!

✍️செ. இராசா

வெங்காயம் வாங்கலியோ வெங்காயம்



வெங்காயம் வாங்கலியோ வெங்காயம்!
வெங்காயம் வாங்கலியோ வெங்காயம்!

ஈஜீ பூத்து வெங்காயங்கோ- இது
ஈஜீ பூத்து வெங்காயம்!
ராஜூ விக்கும் வெங்காயங்கோ- இது
ராஜூ விக்கும் வெங்காயம்!

சல்பரு உள்ள வெங்காயங்கோ- இதில்
அல்சரு ஏதும் வராதுங்கோ!
ஈபிஎஸ் தந்த வெங்காயங்கோ- இதில்
பீபி...சுகரும் வராதுங்கோ!

சோடி போட்டு வாருங்கோ- இதில்
மோடி வித்தை இல்லீங்கோ!
ஸ்டாலில் வந்து பாருங்கோ- ஆக
ஸ்டாலின் கொஞ்சம் சொல்லுங்கோ!

வெங்காயம் வாங்கலியோ வெங்காயம்!

✍️செ. இராசா

20/12/2019

உள்ளாட்சித் தேர்தல்



மதமும் சாதியும்
மல்யுத்தம் போடாமல்
.........மதுவும் பணமும்
.........எதுவும் நுழையாமல்
பாசமும் நேசமும்
பாசாங்கு பண்ணாமல்
........எந்த வெங்காயமமும்
........எவருக்கும் கொடுக்காமல்
உண்மையாய் நடக்கிறது
உள்ளாட்சித் தேர்தல்!

.........என்ன ஆச்சரியம்?!!

பாலாறும் தேனாறும்
பாய்ந்து வருகிறது!

..........மேலாடை நனைந்து
..........மெதுவாய்க் கண்விழித்தான்
#அன்னாடங்காட்சி
#த்த்த்தூ....
✍️செ. இராசா

அகதி


அ- அவசர நிலையில்
க- கதியற்றுப்போய்த்
தி- திண்டாடுவோர்
என்பதை உணர்த்தவா
அகதி என்றழைத்தார்கள்

ஐயகோ...

அகதி எனும்போதே
அகத் தீ எரிகிறதே

அகதி எனும்போதே
புறத்திலும் வெடிக்கிறதே...

சொந்த இடம் விட்டு
வந்த இடம் நொந்து
எந்த இடமின்றி
என்ன வாழ்வென்று
ஏங்கும் நிலை இன்று

போதும் போதும் ஐயா
போதும் போதும்...

சொர்க்கம் நரகமென
செத்தால் கிடைக்குமாமே ?!!

உண்மையைச் சொல்லுங்கள்...

அங்கேயாவது
அகதி முகாம் இல்லைதானே?!!

✍️செ. இராசா

(அண்ணாவின் கவிதையில் வியந்துபோய் எழுதிய பின்னூட்டம் இது... அந்தப் பிரம்மாண்டக் கவிதையைப் பாருங்கள். அகதியின் வலிகளை உணர்வீர்கள்)

19/12/2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மித்திரன்


மண்வாசம் மாறாது
.................வாழ்கின்றத் தம்பியின்
கண்ணிலே நிற்கின்றக்
..................கார்முகில்- கண்ணனை
மண்ணிலேத் தோன்றிய
.................மைந்தனாம் மித்திரனை
வெண்பாவில் வாழ்த்திடும் வாழ்த்து!

புத்திரனாய்த் தம்பிக்குப்
..................பூமியிலே வந்தவனே
சத்தியமாய் நின்தந்தை
...................சாமியடா- மித்திரா
இத்தனைநாள் ஆனபோதும்
.................. இன்றைக்கும் மாறாத
வித்தையினைக் கற்றிடுவாய் நீ!

என்நண்பன் நாகராஜால்
....................என்னுள்ளம் ஏறியவன்
அன்போடு சொல்கின்ற
...................அண்ணனென்ற- இன்சொல்லில்
உள்ளத்தில் ஊற்றெடுத்து
ஓடுகின்ற பாசமும்
கள்ளமில்லை மித்திரா காண்!

(இன்றைக்கு நான்சொல்லும்
...............இவ்வார்த்தை அர்த்தத்தைப்
பின்நாளில் கண்டு பிடி!)

18/12/2019

கோபத்தின் வேகத்தில்
உடைந்து போகிறது
மனது

17/12/2019

வந்தனம் செய்கிறோம் மார்கழியே!

மாதத்தில் நானொரு மார்கழியே- என்று
மாதவன் போற்றிய மார்கழியே!
வேதங்கள் தோன்றிய மார்கழியே- நீ
வேதனை நீக்கிடும் மார்கழியே!
வந்திடு வந்திடு மார்கழியே- உனை
வந்தனம் செய்கிறோம் மார்கழியே!

16/12/2019

#இன_நல_மாண்பு

உயிருள்ள எல்லா இனங்களையும்
உயிரினம் என்றே சொன்னாலும்
மகத்துவ இனமே நாம்தானே
மனிதா இன்னும் பிரிவினையேன்?!!

உலகில் எல்லா மொழிகளையும்
உயர்வாய் அவரவர் சொன்னாலும்
தனித்துவ இனமே நாம்தானே
தமிழா இன்னும் பிரிவினையேன்?!!

படைக்கிற எல்லாப் படைப்பிற்கும்
படிப்பவர் ஆயிரம் சொன்னாலும்
கவிக்கிற இனமும் நாம்தானே
கவிஞா உன்னுள் பிரிவினையேன்?!

✍️செ. இராசா

#இன_நல_மாண்பு
#வள்ளுவர்_திங்கள்_97

15/12/2019

எங்கள் குரு--விக்டர்தாஸ்

#மாயஜால_வித்தைகோடி” என்ற என் பாடலுக்காக, என் உயிரிலும் மேலான அண்ணன் மற்றும் குருவான சின்னக் கண்ணதாசர் திரு. விக்டர்தாஸ் அண்ணா அவர்கள் பாராட்டிய வார்த்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இது என் சுய விளம்பரத்திற்காக அல்ல உறவுகளே....இதில் உள்ள விடயங்கள் ஒரு வேளை யாருக்காவது பயன்படுமே என்ற ரீதியில்....இதோ

#அண்ணா

தம்பி ராஜமாணிக்கம் வணக்கம். நலமா!
தங்கள் பாடலைப் பார்த்தேன். உண்மையில் ரொம்ப நல்லா இருக்குடா தம்பி.

டேய்...இது நீ எழுதலைடா... ஆமாம்...நீ எழுதலை. உனக்குள்ள ஒரு சக்திதான் எழுதி இருக்கு.

ஆமாம். உனக்குத்தெரியுமா?!!
அது சிவ வாக்கிய சித்தர் எழுதிய சந்தம் பார்த்துக்க. அவர் போட்ட வார்த்தைகளைக்கூட நீ உன்னை அறியாமல் போட்டிருக்கடா தம்பி. உண்மையில் நீ நல்லா வருவ....!!

(நிறைய பாராட்டினார்கள். கட்டுரையின் நீளம் கருதி அதையெல்லாம் எழுதவில்லை...அதெற்கெல்லாம் ஒரு பெரிய மனது வேண்டும்)

அண்ணா சொல்லியதற்குப் பிறகு நான் சிவ வாக்கியர் பாடலைத் தொடர்ந்து Youtube ல் கேட்டு வருகிறேன். அது மட்டுமா அவரைத் தொடர்ந்து குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர்...எனப் பலருடையப் பாடல்களையும் இசைக்கோர்வையில் கேட்டு வருகின்றேன். ஆகா..ஆகா...எப்படிச் சொல்வேன் அந்த அனுபவங்களை...

இப்படித்தான் என் குரு என்னைச் செதுக்குகிறார். நீங்களும் அப்பாடல்களைக் கேளுங்கள் உறவுகளே... மெய்மறந்து ரசிப்பீர்கள்!!!

அவருக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

என் அண்ணுக்காக ஒரு #வெண்பா!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐

மின்னலின் வேகமும்
...........மேகத்தின் ஈரமும்
விண்மீன் உயரமும்
...........வெண்ணிலா உள்ளமும்
அண்டத்தின் ஞானமும்
...........ஆதவப் பாசமும்
கொண்டவர் எங்கள் குரு!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

மனமார்ந்த நன்றி அண்ணா

விக்டர்தாஸ் கவிதைகள்

14/12/2019

எப்போதும்போல்தான்அங்கே இப்போதும் சென்றேன்



எப்போதும்போல்தான்அங்கே
இப்போதும் சென்றேன்!!
ஆனால்,
இப்போது மட்டும்...
ஏனென்று தெரியவில்லை..

இரு கண்கள்...
என்னையே நோக்கியது...
நோக்கியதோடு அல்லாமல்
நெருங்கி வந்தது..
வந்ததோடு அல்லாமல்
வேகமாய்ப் பேசியது..

“பாய்சாப் இசா நகி ஆனேகா” என்றது
கியா...கியூ என்றேன்...!!!

அந்தப் பூங்காவில்
அரை டவுசர்
அனுமதி இல்லையாமாம்

இது
முக்கால் டவுசரென
முறையிட்டாலும்
இதில்
முட்டி தெரிகிறது என
முனங்கினான்....

டிகே டிகே என நகர்ந்தேன்
டிக்டாக் கொடுமைகளை நினைத்தவாறே

✍️செ.இராசா

(படத்தில் நண்பரின் மகளோடு நான்)

வரலாறு


எது வரலாறு?

எதைச் சொல்லவேண்டும்
எதைச் சொல்லக் கூடாதெனத்
தீர்மானிப்பதா வரலாறு?
எது எப்படியோ
அதை அப்படியே
மொழிவதுதானே வரலாறு?

கட்டபொம்மு நாயக்கரை
எட்டப்ப நாயக்கர்தான்
காட்டிக் கொடுத்தாரெனக்
கதைப்பது மட்டுமா வரலாறு?!
இருவரும் யாரென்று
தெளிவோடு மொழிவதுதானே வரலாறு!

கஜினி முகமதுவும்
கோரி முகமதுவும்
எப்படி வென்றார்களென
படிப்பது மட்டுமா வரலாறு?
ராஜ ராஜச் சோழனும்
ராஜேந்திரச் சோழனும்
எங்ஙனம் வென்றார்களென
எல்லோரும் படிப்பது(ம்)தானே வரலாறு?!

ஆரியம் திராவிடமென
அள்ளியள்ளி விடுவோர்
அளப்பது மட்டுமா வரலாறு?
எழுச்சியோ வீழ்ச்சியோ
உண்மையில் நடந்ததை
உரைப்பது(ம்)தானே வரலாறு?

எதையும்
திரித்துத் திணிப்பதல்ல வரலாறு!
இருந்ததை
இருந்தபடிச் சொல்வதே வரலாறு!
சரி தவறல்ல வரலாறு!
உள்ளதை உரைப்பதே வரலாறு!

கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்
மறை(ந்)த்த வரலாறு!
வந்து கொண்டு இருக்கிறது..

கீழடி நாகரிகமாய்...

✍️செ. இராசா

13/12/2019

துறந்திட மாட்டார் துணிந்து!

துறவறம் செல்லத் துணிபவர் எல்லாம்
குறளறம் சொல்வதைக் கேட்டால்- மறந்தும்
துறவியில் போலித் துறவியை நம்பித்
துறந்திட மாட்டார் துணிந்து!

சந்து பொந்து சாமியாரு


சந்து பொந்து சாமியாரு
குந்திக்கின்னு கூவுறாரு!
வெந்து போன மாமியாரு
நொந்து நூடுல்சாயிட்டாரு!

கைராசிச் சாமியாரு
கையவிட்டுப் போயிட்டாரு!
மையங்கொண்ட மாமியாரு
மையப்போட்டுப் பாக்குறாரு!

கார்ப்பரேட்டு சாமியாரு
கைலாசம் போயிட்டாரு!
நம்ம ஊரு மாமியாரு
இன்னும் இங்கேத் தேடுறாரு!

கன்னித்தீவில் சாமியாரு
இந்துபாத்து கேட்கிறாரு!
இந்தியாவில் மாமியாரு
சிந்துபாத்து ஆயிட்டாரு!

இங்கிலீசில் சாமியாரு
ரஞ்சிதமாப் பேசுறாரு!
சங்கிமங்கி மாமியாரு
வெங்காயத்தைத் தேடுறாரு!

✍️செ. இராசா

#சாமியார்_மாமியார்
#நித்யானந்தா

(போலிச்சாமியார்களைத் தடுக்க உடனடியாகச் சட்டம் இயற்றி, இந்தமாதிரி அசிங்கங்களை தடுத்து நிறுத்தாவிடில் இப்படிப்பட்ட அவமானங்களை நாம் சந்தித்துத்தான ஆக வேண்டும்)

*மாமியார் வீட்டுக்கு நித்தி போகும்நாள் வெகுதூரமில்லை

11/12/2019

இருளை விலக்க எதற்கு விளக்கு
பரிதி எழுந்ததன் பின்பு

10/12/2019

பாடல் மெட்டு: முத்தைத்திரு பத்தித்...


சந்தக்கவி தந்தக் கவியென
விந்தைக்கவி தந்தக் கவியென
என்னக்கவி இந்தக் கவியென
...................................நினையாமல்

சிந்தைக்கவி சிந்தும் கவியென
சின்னக்கவி தத்துக் கவியென
இந்தக்கவி உந்தன் கவியென
.................................நினைவாயோ
அன்புக்கவி கொஞ்சும் கவியென
இன்பக்கவி கொட்டும் கவியென
எண்ணக்கவி வண்ணக் கவியென
.....................................தமிழோடு
உள்ளக்கவி சொல்லும் கவியென
நல்லக்கவி உண்மைக் கவியென
வெல்லக்கவி வெள்ளக் கவியென
...................................வருவாயோ
அருள்வோயோ முருகா அருள்வாயோ!!!
✍️செ. இராசா

தங்கமோ தகரமோ எல்லாம் வெங்காயமே

மண்ணில் விளைந்ததும் மண்ணுள் பொதிந்ததும்
மண்ணில் சமமே மதி!

✍️செ. இராசா

09/12/2019

தமிழ்ழதான் கூவுது .......இன்னான்னுத் திரியல



தமிழ்ழதான் கூவுது
.......இன்னான்னுத் திரியல
தபா..தபாக் கூவுது
.......ஓன்னுகூட பிரியல..

இசுகூலு போயிக்கின்னா
.......என்னான்னுக் கேளுப்பா..
கசுமாலம் கூவுறதில்
......காதெல்லாம் நோவுப்பா

தோடா...படா..பேஜாராகீதுபா

✍️செ. இராசா

#காமம்_2




காமம் என்று சொன்னதுமே
காதைப்
பொத்திடும்
உறவுகளே!
காமன் நெஞ்சில் வந்ததுமே
கண்ணில்
கணையேன்
விடுகின்றீர்?

தந்தை செய்த வேள்வியிலே
தாயில்
தோன்றிய
உறவுகளே!
விந்தை செய்யும் காமத்திலே
வேண்டா
வெறுப்பேன்
கொள்கின்றீர்?



காம சூத்திரத் தத்துவத்தைக்
கற்றிடும்
முறைமையில்
கற்றிடவே
காமச் சித்திரச் சிற்பங்களைக்
கோவில்
குளங்களில்
வடிவமைத்தார்!

காமம் என்கிற பாற்கடலைக்
கட்டிய
துணையுடன்
கடந்திடவே
வாமன வடிவிலே வள்ளுவரும்
வையகம்
தளைத்திட
வழிசெய்தார்!



அடக்க நினைத்தால் அடங்காமல்
அறிய
நினைத்தால்
அடங்குகின்ற
கடவுள் படைத்த காமத்தின்
கடலைக்
கடக்க
முயல்பவரால்:

இன்பம் துன்பம் இரண்டையுமே
எளிதாய்க்
கடக்க
முடிவதினால்
இன்பக் கடலாம் காமத்தை
இனிதே
கடந்து
வென்றிடுவீர்!

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

✍️செ. இராசா

#காமம்_2
#காமமென்னும்_கடல்
#வள்ளுவர்_திங்கள்_96

08/12/2019

ஆனந்த யாழை .....மீட்டுகிறாய்




ஆனந்த யாழை
.....மீட்டுகிறாய்- அந்த
ஆதியின் ரூபத்தைக்
.....காட்டுகிறாய்!
கண்ணில் தென்றலாய்த்
........தாவுகிறாய்
நெஞ்சில் மீன்களாய் நீந்துகிறாய்!


ஒரு தங்கை இல்லா சோகம் என்னில்
....தொலைந்து போனது போனதடி!
அரும் புதையல் எல்லாம்
என்னைத்தேடி வந்தது உன்னால் வந்ததடி!

உந்தன் தெய்வச் சிரிப்பைக்
......கண்டுகொண்டேன்
பேசத் தோன்றவில்லை
.......வார்த்தை இல்லையடி!

உந்தன் அன்னை அன்பைக்
.....கண்டுகொண்டேன்
ஒன்றும் தோன்றவில்லை
....தெய்வம் உண்மையடி!

✍️செ. இராசா

07/12/2019

நீதிக்கு நேருமா நிற்கதி-



நீதியின் தேவதை நேரமாய் வந்திடின்
நீதிக்கு நேருமா நிற்கதி- நீதியை
வேகமாய்த் தந்திட வேண்டிய சட்டத்தை
வேகமாய்ச் செய்வாய் விரைந்து!

05/12/2019

கட்டிலில் போனதாம் கால்!

உள்ளக் கிளர்ச்சியிலே
.........ஓடிவரும் நற்கவிபோல்
வெள்ளைக் குதிரையென
.......வெண்ணிலவு- துள்ளிவர
எட்டிப் பிடிப்பதுபோல்
.........எண்ணுகின்ற வேளையிலே
கட்டிலில் போனதாம் கால்!

04/12/2019

#என்ன_விலை_அழகே?!!

#என்ன_விலை_அழகே?!!
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்!
விலை எதுவென்றாலும் தருவேன்!
இன்று விலையைக் கண்டு வியந்துபோகிறேன் ஓ
ஓரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்!

படைத்தான் இறைவன் உனையே
நினைத்தான் உடனே அவனே
அழுகை கொடுக்கும் திறமை முழுக்க
உன்னுடல் சார்ந்தது உன்னகம் சேர்ந்தது
உரிக்க உரிக்க எதுவும் புரியா
பொன் மேனி உன் மேனி
நீதானே மெய்ஞானி

விரைவினில் விலை குறைந்திடு
விரல்பட மெல்லப் புகுந்திடு
கடன் பட்டு வாங்கத் துடிக்குது
உடன் வந்து நீயும் தடுத்திடு

சித்திரப் புன்னகை ஏன்டி?
நித்திரை போனது வாடி
பற்றிடப் பாயுது நெஞ்சம் உனையே!
உன்னுடல் உண்டிட வேண்டி
என்னுடல் ஏங்குது வாடி
தொட்டிட ஏங்குது நெஞ்சம் உனையே!

✍️செ. இராசா



படம் உதவி Swarnam Meenakshinathan அம்மா (நன்றி அம்மா)
எவ்வளவு கொடுத்தாலும்
குறைவதே இல்லை
அன்னையின் அன்பு

03/12/2019

அசாம் மேகாலயா நினைவலைகள்-2

அசாம் மேகாலயா நினைவலைகள்-2
************************************
தீவிரவாதப் பகுதியிலே; அன்று
தீயைப்போலே வேலை செய்தேன்!
நேர்மையின் வழியில் சென்றதினால்
நேர்ந்தது எனக்குக் கொஞ்சமில்லை!


ஆட்களைக் கடத்தும் கூட்டமொன்றை
ஆர்மிப் படையினர் சுட்டனராம்!
இறந்து கிடந்தோர் சட்டையிலே
இருந்தது ஒற்றைக் காகிதமாம்!

காகிதம் சொன்ன சேதிபற்றிக்
காவல் துறையினர் சொல்லியதை
இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன்!
என்றும் நினைத்து வியக்கின்றேன்!

அவர்கள் கடத்தும் நபர்களிலே
அடியேன் பெயரே முதல்பெயராம்!
அடிக்கடி அவர்கள் முயன்றாலும்
அடியேன் ஏனோ சிக்கலையாம்!

........தொடரும்
✍️செ. இராசா
(பழைய படங்களை அனுப்பி வைத்து என் ஞாபகங்களை மீண்டும் துளிர்விடச்செய்த Afzalur Rahman ற்கு நன்றி....Both Sukria bhaijan)





02/12/2019

உன்னை வளரவிடாமல் செய்தது என்னவோ நான்தான்

உன்னை வளரவிடாமல் செய்தது
என்னவோ நான்தான்
அதற்காக..
உன்னைப் பிடிக்காது என்று அர்த்தமல்ல

உண்மையில்...
உன்னைப் பிடிக்கும்தான்
ஆனால்
உன் வளர்ச்சியில்
என்னழகு மறையலாமா?!!

உன்னைப் பிடிக்கும்தான்
ஆனால்
உன் வளர்ச்சியில்
என்நிறம் மங்கலாமா?!!

என்னை மன்னித்துவிடு
இப்படியெல்லாம் நினைத்துதான்
அப்படிச் செய்துவிட்டேன்..
அப்படியே மழித்து விட்டேன்

அதற்குப் பரிகாரமாய்
இதோ உன்னை வளர்க்கின்றேன்
வளர்வாய் என் அன்புத்தாடியே..
வளர்வாய்...நீ!

✍️😊செ. இராசா

#கயவர்கள்_சாக்கிரதை



உடுப்பதும் உண்பதும் கண்டாலே
சிடுசிடு என்றே சினந்திடுவான்!
குடுகுடு என்றே ஓடிவந்து
குறைகள் ஆயிரம் சொல்லிடுவான்!

தனக்குத் தானே பட்டமிட்டு
தன்னைத் தானே வியந்திடுவான்!
பிணக்குக் கவலை ஏதுமின்றி
தனக்குத் தானே மகிழ்ந்திடுவான்!

துடிப்போர் கண்டு கொடுக்காமல்
அடிப்போர் அடிக்கக் கொடுத்திடுவான்!
முன்னால் பல்லைக் காட்டிவிட்டு
பின்னால் கல்லை எறிந்திடுவான்!

#கயவர்கள்_சாக்கிரதை

01/12/2019

நாயே...நாயே... நன்றி கெட்ட நாயே.


நாயே...நாயே...
நன்றி கெட்ட நாயே..

நிறுத்துங்கள்.
நாங்கள் எங்கே நன்றி மறந்தோம்?!

பழையது போடும்போதெல்லாம்
புதுமனைவி போட்டதுபோல் திண்கிறோம்!
எங்கே கட்டிப்போட்டாலும்
அங்கேயே சொர்க்கம்போல் கிடக்கிறோம்!

காணாத போதெல்லாம் கரைகிறோம்!
காணும் போதெல்லாம் குழைகிறோம்!
தெரியாதோர் வந்தால் குரைக்கிறோம்!
தெரிந்தோர் வந்தால் குறைக்கிறோம்!

உங்களுக்கு ஆட்டத்தான்
எங்களுக்கு வாலோ என்று
வாலாட்டியே எங்கள்
வாழ்க்கையை ஓட்டுகிறோம்!

காவல் காக்கிறோம்!
மோப்பம் பிடிக்கிறோம்!
ஏன்...
உங்களுக்காக
உயிரையும் துறக்கிறோம்!

சீ.....
“நன்றி கெட்ட நாயே” என
நாக்கூசாமல் சொல்வதை நிறுத்துங்கள்
நான் சொல்வதை
நெஞ்சில் நிறுத்துங்கள்

“நன்றி கெட்ட நாய்” எனச்சொல்லி
நாய் இனத்தை அவமதிக்காமல்
“நன்றி கெட்ட மனிதா” எனச் சொல்லுங்கள்...

கொஞ்சமேனும் நன்றி இருந்தால்...

#நன்றியுள்ள_நாய்களின்_குரலாக
#நான்_நாயானபோது

✍️செ. இராசா

30/11/2019

மாவு மாவு மாவு- உன் மேலு எல்லாம் மாவு!!!



மாவு மாவு மாவு- உன்
மேலு எல்லாம் மாவு!!!
சீனு சீனு சீனு- நீ
செஞ்சுப்புட்ட சீனு!!!

பாலு புட்டிப் பாலு- அது
போரு மாமு போரு!
மாமு மாமு மாமு- நீ
மாவப் போடு மாமு!

வேஸ்டு மாமு வேஸ்டு- இந்த
டிவி டேபு வேஸ்டு!
பூஸ்டு மாமு பூஸ்டு- இந்தப்
பவுடர் கேமு பூஸ்டு!

பியூட்டி மாமு பியூட்டி- நீ
டோரா போல பியூட்டி!
நாட்டி நீயும் நாட்டி- நீ
ஸ்வைப்பர் போல நாட்டி!

✍️செ. இராசா

உள்ளம் தெளிந்தேன் உவந்து!




பாலைவன நெஞ்சுக்குள்
..........பைய்யவந்து பால்வார்த்து
சோலைமன வாழ்வென்னும்
........சொர்க்கத்தைக் காண்பிக்கும்
பிள்ளை(கள்) பெறுவதினால்
.........பெற்றோர்கள் என்றனரோ?!
உள்ளம் தெளிந்தேன் உவந்து!

29/11/2019

உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?!

உனக்கு என்னை
அவ்வளவு பிடிக்குமா?!
........
வருகிறாய்..
வந்த வேகத்தில் கழுத்தைக் கவ்வுகிறாய்
பின் என்னை விடவே விடாமல்...
ச்சை...
நீ செய்யும் சேட்டை இருக்கிறதே..
அப்பப்பா...முடியலை...
போய்விடு இருமலே போய்விடு
....

✍️😊😊😊

28/11/2019

சிறுவயதில் ஜீவ காருண்யம்!
சிரமேந்திப் பேணுகிறாள்
செல்ல மகள்!

எண்ணச் சமரடக்கி

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்!

✍️(எண்ணத்தரசன்...தலைப்பு தம்பி Manikandan KR​)

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்ணென்றே- எண்ணியதால்
எண்ணத் தரசனென என்னைநீ சொன்னாயோ?!
எண்ணி வியக்கின்றேன் இன்று!

27/11/2019

வெண்பாவில் வாழ்த்து!-- #முனைவர்_இளஞ்செழியர்



என்னுரை
💐💐💐💐
தூரிகையில் மைத்தொட்டுத்
...........தோற்றுவித்த ஓவியத்தைக்
காரிகையின் கைத்தொட்டே
...........காமுற்றக் காதலன்போல்
பார்த்தகண் மூடாமல்
...........பார்த்தபடி நின்றவனாய்
வார்க்கின்றேன் வெண்பாவில் வாழ்த்து!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#முனைவர்_இளஞ்செழியர்
.............முற்போக்கில் மூத்தோர்
வினையின் விளைந்திட்ட
............வித்தைகள் காத்தோர்
துணையின் விளைவாலே
............தொண்டுகள் செய்யும்
அணையா விளக்கென்றால் ஆம்!

#கவிஞர்_இளஞ்செழியர்
..........கற்பனைத் தேரில்
கவிதைக் குதிரையின்
.........கட்டவிழ்த்து விட்டாற்போல்
காட்டாற்று வெள்ளமாய்க்
........கண்டபடி ஓடியெம்மை
ஆட்டுவிக்கும் பாவலனா? ஆம்!!

#ஓவியரி_ளஞ்செழியர்
...........ஓவியமாய்த் தீட்டுகின்ற
ஓவியத்தின் உட்பொருளில்
...........ஒன்றிப்போய் நிற்கின்ற
காவியத்தில் கம்பனைப்போல்
.........காட்சிகளைக் காட்டுகின்ற
ஓவியத்தின் நாயகனா? ஓம்!

மூன்றே முகங்கள்தான்
........முத்தாய்ப்பாய்ச் சொன்னாலும்
சான்று பலவுண்டு
.........சான்றோனை யாம்போற்ற;
ஆண்டு பலவாழ்ந்திங்(கு)
.........ஆற்றிடுவீர் நற்தொண்டு!
வேண்டிப் பணிகின்றேன் வீழ்ந்து!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா