28/02/2023

நாய்கூட நடைப்பயிற்சி

 



நாய்கூட வந்து
.....நடைப்பயிற்சி செய்பவர்கள்
ஆய்போகும் நாயை
....அதட்டாமல்- சேய்போல
வாயில்லா ஜீவனுக்காய்
.....வைத்துள்ள பெட்டிக்குள்
ஆயினைப் போடனும்
.....ஆம்!
 
 
✍️செ. இராசா
 
(என்னே இரக்கம்?!....பெரிய விடயம்தான்)

இருந்ததன் அடையாளத்தை


 

இருந்ததன் அடையாளத்தை
விழுந்தபின் உணர்த்துகிறது
சிறகுகள்/ சருகுகள்

✍️செ. இராசா

26/02/2023

குறளுரையாடல் --- கரு: வெளிநாட்டு_வாழ்க்கை

 


ஒற்றைப்படை_சுந்தரராஜன்_தயாளன் 

இரட்டைப்படை_செ_இராசா


தனிமையில் வாழ்வது தானொருகை ஓசை!
இனிமையாய் வாழ்வீர் இணைந்து.
(1)

இணைந்து மகிழ்ந்திட ஈட்டிவரச் சென்றே
நினைந்து கரையுதய்யா நெஞ்சு!
(2)

நெஞ்சு வலிக்குதே நீர்சொல்லும் காதையில்
கொஞ்சம் மனபலத்தைக் கூட்டு.
(3)

கூட்டுவதைக் கூட்டியபின் கூடிடலாம் என்றெண்ணி
வாட்டமுடன் போகுதய்யா வாழ்வு
(4)

வாழ்வுநல் வாழ்ந்திடவே வாட்டமும் தேவைதான்
பாழாகும் உன்இளமை பார்?
(5)

பார்க்கின்ற நேரத்தில் பாராமல் விட்டுவிட்டால்
யார்க்கும் இதுபோல்தான் இங்கு
(6)

இங்கெங்கே இல்லாமல் எங்கும் இருப்பதுகாண்
தங்குதடை, துன்பம், துயர்
(7)

துயரங்கள் நீங்கத் தொலைதூரம் சென்றே
முயன்றவரை ஈட்டும் முனைப்பு
(8)

முனைப்போ முயற்சியோ முன்னெடுப்போ எல்லாம்
நினைத்தல் நடந்தால் நலம்
(9)

நலமுடன் வாழவழி நம்நாட்டில் கண்டால்
புலம்பெயர மாட்டார் புரி!
(10)

புரிந்தோம்நாம் நன்றாய் புரியாதோர் ஆட்சி
சரியில்லை இங்குவெறும் சங்கு
(11)

சங்கம் வளர்த்தயினம் தான்வாழ்ந்த நாடுவிட்(டு)
எங்கும் நகருதய்யா ஏன்?
(12)

ஏனென்றால் என்சொல்ல எல்லாம் சதியால்தான்
போனர் புலம்தான் பெயர்ந்து
(13)

பெயர்ந்து விழுகின்ற பேரண்டக் கல்லாய்
பெயர்ந்துதான் போகும் பிழைப்பு
(14)

பிழைப்புக்காய் நம்மக்கள் பல்நாடு போனார்
அழையா விருந்தினர் ஆம்
(15)

ஆமென்று சொல்வோர் அனைத்திலும் முன்செல்வர்
தாமதிப்போர் பின்செல்வர் தான்
(16)

தன்முன்னே செல்வதற்காய் தன்னினத்தைத் தான்கவிழ்ப்பர்
என்னபெயர் வைப்போம் இவர்க்கு?
(17)

இவர்களால் தானய்யா இந்நிலை வந்தோம்
இவர்போல் அவரும் இடர்
(18)

இடர்வரினும் மேலும் இடராதே வெல்வோம்
தொடர்ந்தேநல் நேர்வழியைத் தொட்டு
(19)

தொட்டதெல்லாம் இங்கே துலங்கிடும் என்றானால்
சட்டென்று நிற்போம் தனித்து
(20)

✍️ஐயா சுந்தரராஜன் தயாளன் &
செ. இராசா

25/02/2023

அறமில்லா தேர்தல் அவசியமா நாட்டில்
திறமில்லா ஆணையமே செப்பு?!

உடம்பு முடியவில்லை என்றான்....
நான்போய் மருந்து சாப்பிடவா என்றாள்...
மருந்தே மருந்து சாப்பிடுமா என்றான்...

புன்னகைக்கிறாள்

23/02/2023

வில்லத்தனமான பாடல்--- மெட்டு: கதை கேளு கதை கேளு..

 


#வில்லத்தனமான_பாடல்
(வில்லன் பாடுவதுபோல்.....முற்றிலும் எதிர்மறையாய்...)

#மெட்டு: கதை கேளு கதை கேளு....

வலைவீசு வலைவீசு
இடம்பார்த்து வலைவீசு
திடமோடு வளமான
இடம்பார்த்து வலைவீசு

உன்னைப் போல ஆளே இல்லை
என்று சொல்லி வீசு..
தன்னைப்போல வல்லையின்னா
வேற ஆளப்பாரு...(2)

(வலைவீசு வலைவீசு...)

சினிமாவில் மோகங் கொண்டு தேடாத ஆளுமில்லை
உச்சத்தில் போகனும்னு ஆசையில் வருவார்
சினிமாவில் ஜெயிப்பதெல்லாம் ஒன்றுமே இல்லையென்று
சும்மாநீ அள்ளிவிட்டா உன்னிடத்தில் வருவார்
பேசிடும் பொழுதே கணித்திட முடியும்
அடுத்தது என்ன அதிரடி தான்.
உண்மையை அறிந்து உணர்ந்திடும் முன்னே
உருவிட முடிந்தால் பலன்தானே...
ஆசையில் அலைபவர் அகிலத்தில் கோடி
அடிக்கிற நபரிடம் விழுகிறார் நாடி
மோசடி செய்தே முதலிடம் பிடித்தே
அரசியல் செய்பவர் பிழைக்கிற பொழுதில்
வருகின்ற ஆடுகள் தலையினைக் கொடுத்தால்
அறுக்காமல் விடுவது அதர்மமாய் முடியும்

(வலைவீசு வலைவீசு...)

✍️செ. இராசா

அல்டிக்கிறா சொழ்டிக்கிறா சில்பிக்கிறா டா

 #அல்டிக்கிறா சொழ்டிக்கிறா சில்பிக்கிறா டா- அவ
அட்சிக்கிறா பிட்சிக்கிறா நட்சிக்கிறா டா-ஏய்
பீத்திக்கிறா சாத்திக்கிறா போத்திக்கிறா டா- இனி
ஊத்திக்கினா ஏத்திகினா இன்னா..தப்புடா

உருட்டு உருட்டு உருட்டு ஓன் விருப்பம்போல உருட்டு....
கரெக்டு கரெக்டு கரெக்டு அட செய்வதெல்லாம் கரெக்டு.........
உருட்டு உருட்டு உருட்டு ஆங் கிடைச்சதெல்லாம் உருட்டு....
கரெக்டு கரெக்டு கரெக்டு இனி எல்லாமிங்கே கரெக்டு......

என்னைப் போல ஏமாந்த ஆளு
எங்கும் இல்லை ஏனென்று கேளு...
கண்ணைப் போல நாம்பார்த்த கேர்ளு
Gunனைப் போலே சுட்டாடா மாமு...

அல்டிக்கிறா சொழ்டிக்கிறா சில்பிக்கிறா டா- அவ
அட்சிக்கிறா பிட்சிக்கிறா நட்சிக்கிறா டா-ஏய்
பீத்திக்கிறா சாத்திக்கிறா போத்திக்கிறா டா- இனி
ஊத்திக்கினா ஏத்திகினா இன்னா..தப்புடா

வாடா மச்சி வாழைக்காய் பஜ்ஜி
வந்தா வச்சி வாழ்ந்தாலே போச்சி
வேணாம் மச்சி வேகாத சப்ஜி
வீணா வச்சி நோகாதே சீச்சீ

உருட்டு உருட்டு உருட்டு ஓன் விருப்பம்போல உருட்டு....
கரெக்டு கரெக்டு கரெக்டு அட செய்வதெல்லாம் கரெக்டு.........
உருட்டு உருட்டு உருட்டு ஆங் கிடைச்சதெல்லாம் உருட்டு....
கரெக்டு கரெக்டு கரெக்டு இனி எல்லாமிங்கே கரெக்டு......

#சரணம்_1

நாளு பூரா நாயாநான் உழைச்சு செல்போனு வாங்கித் தந்தா.
ஆளு மாத்தி ஆளோடப் பேசி எம்போன எடுக்க மாட்டா..
அட...
பூபரு மாமா-அதைப்
போல நினைச்சிட்டா
டாபரு மேனா எனை
அலைய வச்சுப்புட்டா
ஜோக்கரு சீட்டா- அவ
யூசு பண்ணிகிட்டா
டீக்கடை பெஞ்சா- எனை
தேய விட்டுப்புட்டா..

உருட்டு உருட்டு உருட்டு ஓன் விருப்பம்போல உருட்டு....
கரெக்டு கரெக்டு கரெக்டு அட செய்வதெல்லாம் கரெக்டு....
உருட்டு உருட்டு உருட்டு ஆங் கிடைச்சதெல்லாம் உருட்டு...


22/02/2023

எழுத்து

 #எழுத்து


 

மொழியின் இரண்டாம் வடிவம்
ஒலியின் அச்சுப் படிமம்
நாகரிக சமுதாயத்தின் அடையாளம்
கடந்துவந்த பாதையின் கால்தடம்
இனங்களின் முத்திரை
இப்படி....
எழுத்தின் பரிமாணங்கள்தான்
எத்தனை எத்தனை?!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
.....இது வள்ளுவர்
எண் எழுத்து இகழேல்
.....இது ஔவையார்
எண்ணிப் பார்த்தால்
என்ன தோன்றுகிறது?
எண் மட்டுமல்ல
எல்லாமே எழுத்துதான்!

இவ்வளவு ஏன்?

எழுதிவைத்த நூல்களெல்லாம் அழிந்துவிட
என்றும் அழியா தொல்காப்பியத்தின்
முதலாம் அதிகாரமே எழுத்து தானே...

என்னதான் இங்கே
எழுத்தில்லா மொழிகள்
எழுத்தை இரவல் வாங்கினாலும்
எழுதாத வரலாற்றை
யாரும் இரவல் வாங்கமுடியுமா?!

இங்கே...
கண்கள் தெரியாதவர்க்கும்
கண் திறக்க எழுத்துண்டு
ஆனால்;
கண்ணிருந்தும் படிக்காதவர்களின்
தலையெழுத்தை மாற்ற முடியுமா?

இந்த எழுத்துக்கள் கடந்துவந்த
பாதையைப் பாருங்களேன்...

கல்லில் கல்-வெட்டாய்
மண்ணில் மண்பானைக் கீறலாய்
பனையோலை-ஏடுகளாய்
செம்பில் செப்பேடுகளாய்
தோல்
துணி
காகிதப் படிகளேறி
கணினி
கைப்பேசி
இணையமென உச்சியில் இருக்கும்
இந்த எழுத்துகள் வியப்பாக இல்லையா?

இடமிருந்து வலமாய்
வலமிருந்து இடமாய்
முட்டை முட்டையாய்
வளைந்த ஜிலேபியாய்
கட்டிட தோரணமாய்
கச்சித ஆபரணமாய்...
அப்பப்பா....
ஆம்...
இங்கே எழுத்துகள் தினமும்
பிரசவமாகிக்கொண்டே இருக்கின்றன..
ஆனால்...
பிரம்மாக்கள்தான்...
வெறும் சவமாகிக் கொண்டே இருக்கின்றனர்..

இருந்தாலும் எழுதுங்கள்....
எழுத்துகள் உயிர்ப்பிக்கும்....
அந்த இயேசுவைப்போலவே....

✍️செ. இராசா

21/02/2023

பணியாரம் செய்றேன்னு

 

பணியாரம் செய்றேன்னு
.....பாய்ஞ்சவள் போக
மணிபாத்து காத்திருந்தால்
......வாயில் - பணிவின்றி
"என்னசட்டி வாங்கினாய்?!"
......என்றவுடன் நான்சுட்டக்
கன்னப் பணியாரம்
.....காண்! 
 
செ. இராசா

எட்டாம் வள்ளல் மயில்சாமி (மெட்டு: பரமசிவன் கழுத்தில்)



மனிதனொருவன் இறப்பில் இருந்து பாடம் கற்பது....
இதுதான் வாழ்க்கையா?
மனிதனொருவன் இறப்பில் இருந்து பாடம் கற்பது....
இதுதான் வாழ்க்கையா?
உன்னால் முடிந்த வரைக்கும் உதவி செஞ்சால்
அதுதான் வாழ்க்கையே..
அண்ணன் வாழ்ந்தது..
அதில் அர்த்தம் அள்ளது.

ஓடி வந்து உதவி செஞ்ச ஓபராயைக் கண்டு
தன் கழுத்தில் கிடந்தச் சங்கிலியைக் கழட்டித் தந்தார் அன்று..
போத்தக் கூட வழியில்லாத தாயின் நிலையைக் கண்டு...
தன் உடையை எடுத்துப் பேகனைப்போல் போத்திவிட்டார் அன்று...

வறியோரை ஒருநாளும் ஒதுக்காதே என்று
ஞானமுள்ள மனிதனுக்கு அண்ணன் சொன்னது
அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

(மனிதனொருவன்)

இருக்கும்போது கொடுப்பதிலே இங்கே என்ன சிறப்பு?- அட
இருப்பதையும் கொடுத்ததுவே மயிலு சாமி பிறப்பு...(2)

(வேறு)
ஏழு வள்ளல் என்றுதானே காலம் சொன்னது-
இல்லை..
எட்டாம் வள்ளல் அண்ணனென்று ஏற்றுக்கொண்டது.....

✍️செ. இராசா

20/02/2023

முதுமை




நேற்றைய நினைவுகளை
இன்றைக்கு அசைபோடும்
அதே வேளையில்;
இன்றைய நிகழ்வுகளை
இன்றைக்கே மறந்துவிடும்
முரணான ஆசிரியன்!

புத்தருக்கே புத்தி தந்த
முதலாம் குரு!

நரைத் தூதுவன் மூலம்
வெள்ளைக் கொடி காட்டுகின்ற
காரியவாதி!

பட்டபின் உணரும்
மாணவன்!

கெட்டபின் புலம்பும்
சிறைக்கைதி!

ஏக்கமுடன் வாழும்
அகதி!

சொல்லிச் சொல்லி காட்டும்
குழந்தை!

நோயின் அழையா
விருந்தாளி!
பாயின் நிரந்தரக்
கூட்டாளி!

இளமைக்குப் பிடிக்கா
இலக்கியவாதி!
எமனுக்குப் பிடித்த
இலட்சியவாதி!

#முதுமை

✍️செ. இராசா

(படம் FACE APPல் மாற்றம் செய்தது)

19/02/2023

 


இன்னும் சிலகாலம் எம்மோடு வாழாமல்
என்ன அவசரமோ இங்கிருந்து- சென்றாலும்
நல்ல மனிதரென நாடே புகழ்வதினால்
நல்ல மரணமென்பேன் நான்!
 
✍️செ. இராசா
 
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்!
💐💐💐🙏🙏🙏💐💐💐

18/02/2023

பன்னீர் மசாலா'வாய்

 


பன்னீர் மசாலா'வாய்
......பக்கத்தில் வந்தாலே
முன்னீர் உருவாகி
......மோதுதுபார்- தன்னாலே
ஆசைப் பெருவெள்ளம்
.......அத்தனையும் பொங்கிவந்தால்
மீசையில் ஒட்டாதா?!
.........நீர்!!

16/02/2023

நல்லவன்போல் கதை அளப்பான்

  


#பாடல்

#நல்லவன்போல் கதை அளப்பான்
நம்பி வந்தா கழுத்தறுப்பான்
வாயிலேயே வடை சுடுவாங்க...
அண்ணனைப்போல் இல்லையென்பான்
அண்டி வந்தா தொல்லையென்பான்
நாயைப்போல மதிச்சிடுவாங்க‌.‌.‌

வேணாங்கோ வேணாங்கோ
வீணாங்கோ போவீங்கோ...(2)

விட்டுடு விட்டுடு விலகி வந்திடு
சட்டுனு பட்டுனு நகர்ந்து வந்திடு....
அப்படி இப்படி சொல்லியே சொல்லியே
ஆட்டையப் போடுவான் தள்ளியே நின்னுக்க..
எப்படி இன்னுமும் செய்யலாம் செய்யவே
எப்போதும் பேசுவான் சொல்லுறேன் கேட்டுக்க..

அடி...
பட்டவன் சொல்லுறேன் கேட்டுக்க- கேடு
கெட்டவன் யாருன்னு பார்த்துக்க......(2)

துட்டுக்கு மாத்திரம் தூண்டில போடுவான்
நட்புனு சொல்லியே நஞ்சினை ஊட்டுவான்
மூஞ்சிக்கு முன்னால பாசத்தைக் கொட்டுவான்
கெஞ்சியும் தல்லைனா கம்பிய நீட்டுவான்..

விட்டுடு விட்டுடு விலகி வந்திடு
சட்டுனு பட்டுனு நகர்ந்து வந்திடு....

✍️செ. இராசா

13/02/2023

வருவாரா வரமாட்டாரா....

வருவாரா வரமாட்டாரா.....
நல்ல பதிலை சொல்லுங்கள் - திருப்பித்
தருவாரா தரமாட்டாரா...
நல்ல வழியைச் சொல்லுங்கள்....மேதகு வருவாரா...?!

இளையான்குடியைச் சேர்ந்த நண்பர்

 




17 வருடங்களுக்கு மேலாக கத்தாரில்நான் பணிபுரிந்தாலும் பெட்ரோலிய நிறுவனத்திற்காக வேலைபார்க்கும் பிரத்தியோகமான தொழிலாளர் குடியிருப்பில் சென்று வந்தது என்னவோ இதுதான் முதல்முறை. அதுவும் நம்ம சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த நண்பர் மற்றும் பொறியாளரின் அழைப்பின் பேரில் குடியிருப்பை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. (பொதுவாக வெளிப்புறங்களை அனுமதி இல்லாமல் ஒளிப்படம் எடுக்கக் கூடாது என்பதால் இங்கே பதிவிடவில்லை)
 
இங்கேயுள்ள பொறியாளர்களின் அறைகள், தொழிலாளர்களின் அறைகள், தேநீர் அங்காடி, விளையாட்டு மைதானமென்று ஒவ்வொன்றாக சுற்றிக் காண்பித்தபடி இறுதியாக
அருமையான
சுவையான தற்பகிர் உணவக அறைக்கு கூட்டிப்போய் ஒரு விருந்தும் அளித்தார். உண்மையில் மிகவும் இனிமையான சுவையான அனுபவமாக இருந்தது.
 
✍️செ. இராசா

சொந்தங் கூடும் வீட்டுல சொர்க்கம் வந்து சேருமே..

  


#குடும்பப்_பாடல்

#பல்லவி

சொந்தங் கூடும் வீட்டுல
சொர்க்கம் வந்து சேருமே...
இந்த வீட்டைப் பாருன்னு
ஊருக்குள்ள பேசுமே...

இன்பங் கூடும் வீட்டுலே
என்றும் இல்லை சோகமே
இந்த வீட்டில் யாருன்னு
எட்டியெட்டிப் பார்க்குமே

சின்னச் சின்னக் கூட்டுக்குள்ள
செய்யும் அன்புச் சேட்டையில
கண்ணைக் கட்டும் சோகம்கூட
கான லெனப் போகுமே...

#சரணம்_1 (தேர்வுக்குட்பட்டது)

கண்ணிமைக்கும் நேரங்கூட
கண்ணைவிட்டுப் போனதில்லை...
உங்களைப்போல் தெய்வம் இல்லையே...

செல்லம் தங்கம் ராசாவென்று
கொஞ்சி கொஞ்சி ஊட்டிவிட்ட
காட்சி ஏதும் மறக்கவில்லையே.....

முட்டி முட்டி படிக்கும்போதும்
எட்டிடாத மதிப்பெண் கண்டு
திட்டும் சொல்லில் கோபமில்லையே...

கேட்டதெல்லாம் வாங்கிவந்து
சொல்லாமலே காட்டுகின்ற
பாசத்துக்கும் எல்லை இல்லையே....

தப்பு செஞ்சு நிக்கும்போது
ஓங்கி ஒன்னு வக்கிம்போது
உங்க கண்ணில் வெள்ளம் பொங்குமே...

ஓடி ஆடித் திரியும்போது
காயம் பட்ட தென்றால்போதும்
உங்க நெஞ்சில் ரத்தம் சிந்துமே...

கொல்லுகின்ற சோகமிருந்தும்
சொல்லும் சொல்லில் காட்டிடாத
அன்பு கொண்ட ஆசான் நீங்களே....

வெல்லுகின்ற வேகமிருந்தும்
வேண்டுமென்றே விட்டுத்தந்த
வேசம் போடா நண்பன் நீங்களே....

*LONG METER*

நூறு கோடி வச்சிருந்தாலும்
சொந்தம் பந்தம் இல்லையினா
என்னைக்குமே ஏழை தானடா...

ஆயிரந்தான் உறவிருந்தாலும்
ஆன சொந்தம் இல்லையினா
உண்மையிலே எல்லாம் வீணடா...

#சரணம்_2 (தேர்வுக்குட்பட்டது)

மொட்டமாடி நிலாச்சோறு
ஊரு-கம்மாய் கெளுத்திமீனு
நாக்கிலின்னும் வாசம் போகலையே...

காலிபாட்டில் பொறுக்கிவச்சு
ஐஸுவண்டிக் கெல்லாம்போட்டு
திங்கும்ஐஸின் கூலிங் தீரலையே...

பைக்குவரும் சப்தங் கேட்டே
அப்பாவென்று ஓட்டமோடி
புத்தகத்த கையில் வச்சோமே

தாத்தாசொல்லும் மொக்கை ஜோக்கும்
செம்மசெம்ம வென்றேசொல்ல
உண்மையிலே சிரிப்பு வந்திடுமே..

ஆட்டுக்குட்டி அறுக்கும்போது
பாவமென்று சொன்ன வாயில்
நல்லிபோயி உச்சுக்கொட்டிடுமே...

சுருட்டிவச்ச பேப்பர்நுனியில்
வத்திப்பொட்டி பத்திவச்சு
சிகரெட்போல குடிச்சுபார்த்தோமே..

அரும்புமீசை அரும்புபோதில்
பெரியமீசைக் காசப்பட்டு
ஷேவிங்பண்ண பிளேடு வெட்டுமே...

சாமியாடும் ஐயாபார்த்து
கூட்டமில்லா நேரம்பார்த்து
ஆசைவச்ச தெல்லாம் கேட்டமே...

*LONG METER*

ஊரு பூரா சுத்திவந்தாலும்
உண்மைச் சொந்தம் இல்லையினா
என்ன இங்கே உண்டு சொல்லடா

பேரு பெற்ற ஆளுயென்றாலும்
பெண்டு பிள்ளை இல்லையினா
என்ன வாழ்க்கை எல்லாம் பொய்யடா

#கூடுதல்_வரிகள்

தாயின் அன்புக் கீடே இல்லை
தந்தை போலத் தோழன் இல்லை
பாரம் தாங்கும் பூமி நீங்களே...

மேகத்திற்கு பேதம் இல்லை
தூரும் நீரில் வர்ணம் இல்லை
பாசம் கொட்டும் வானம் நீங்களே...

என்ன தவமோ என்றைக்கு செய்தோமா...
அந்தப் பலனை இன்றைக்கு பெற்றோமோ....
உம்மைப் போல யாருமில்லையே
உம்மை விட்டா நாங்க இல்லையே

✍️செ. இராசா

12/02/2023

ஒட்டகம் மேலே

 


ஒட்டகம் மேலே உலாவரும் அத்தருணம்
பட்டென்று நானும் படமாக்கி- விட்டதற்காய்
பாராட்டித் தந்த படமதிப்புச் சான்றிதழை
ஊரார்க்கு வைத்தேன் உவந்து!

THANK YOU VERY MUCH Single Frame Photography

11/02/2023

ஓட்டி ஓட்டிப் பார்க்குறேன்

 


ஓட்டி ஓட்டிப் பார்க்குறேன் ஓட்ட முடியல......
சீட்டப் புடிக்க பார்க்கிறேன் சீட்டுக் கிடைக்கல...
போட்டி போட்டு பார்க்குறேன் போக முடியல
ரூட்ட மாத்த நினைக்கிறேன் வேறவழி இல்லை..
.......பீம் பீம்..பீம் பீம்...பீம்பீம்
.......பீம் பீம்..பீம் பீம்...பீம்பீம்

பாலுகுடி மறக்கல படிக்க சொல்லுறான்
நாலுஸ்டெப்பு நடக்கல ப்ளே ஸ்கூலுன்றான்
நிமிரக் கூட முடியல பேக்க வைக்கிறான்
கண்ணமூடி கண்திறந்தா காலேஜுன்றான்...
நீட்டு கேட்டு ரூட்டப் போட்டு போபோங்குறான்
போட்ட ரூட்ட மாத்தி போட்டு ஐடிங்குறான்...

போரு போரு போரு மச்சி போரு போரு
சோறு துண்ண நேரமில்லை போரு போரு..
ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு
ஓடலைன்னா ஒதுக்கிடுவான் ஓடு ஓடு

.......பீம் பீம்..பீம் பீம்...பீம்பீம்
.......பீம் பீம்..பீம் பீம்...பீம்பீம்

✍️செ. இராசா


கள்தோற்கும் உந்தன்முன்

 


கண்ணாடி மேனியை
......கைவிரல்கள் தொட்டணைக்க
கண்ணிமைகள் மூடியே
.......கவ்வியிதழ்- பண்ணிசைக்க
உள்ளிறங்கும் வேகத்தில்
.......உற்சாகம் துள்ளிவர
கள்தோற்கும் உந்தன்முன்
........காண்!
 
✍️செ. இராசா

10/02/2023

அம்மா அம்மா அம்மா அம்மா


  

*பல்லவி*

அம்மா அம்மா அம்மா அம்மா
எங்க தெய்வம் நீரே அம்மா..
அம்மா அம்மா அம்மா அம்மா
உண்மை வெல்ல வேண்டும் அம்மா....

சிங்கம் போல ஆண்ட தாயே..
தேடுகிறோம் தெய்வம் நீயே...
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..

(அம்மா அம்மா...)

*சரணம்-1*


எரியும் நெருப்பில் செந்தீ பற்றி
உடலை உதறி உயிர்நீக்கும்
எரிஞ்ச சாம்பல் பொடியில் மீண்டும்
பீனிக்ஸங்கே பறந்துவரும்..

நாடு இருக்கும் நிலைய பாத்து
உடனே நீங்க வந்திடனும்...
எதிரி கண்ணில் விரலை நீட்டி
குடையும் அழகை கண்டிடனும்..

ஊரு இங்கே ரெண்டு பட்டா
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
கழகத்துக்குள் கலகம் நடந்தா
யாருக்கிங்கே சந்தோசம்?

அம்மா ஆட்சி நடப்பதற்கு
வணங்குகிறோம் மண்ணைத் தொட்டு..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..

(அம்மா அம்மா...)

*சரணம்-2*

அண்ணன் எப்போ காலி ஆவான்
திண்ணை எப்போ காலி ஆகும்
என்றுவாழும் கூட்டமிங்கே
காலை ஊன்ற பார்க்குதிங்கே

பொய்யச் சொல்லி புரளியச் சொல்லி
வெல்லும் அந்த கூட்டத்துக்கு..
உண்மை சொல்லி உள்ளத சொல்லி
மீண்டும் வெல்ல வேண்டுமுங்க...

அம்மாதந்த திட்டம் போல
நல்ல திட்டம் மேலும் செய்ய..
சத்தியமா நம்மைப் போல
வேற யாரும் இங்கே இல்ல..

மீண்டும் அம்மா ஆட்சி செய்ய
வேண்டுகிறோம் வா தாயே...

தெய்வமெங்கத் தெய்வத்தாயே
சிங்கம் போல வா தாயே...
தெய்வமெங்கத் தெய்வத்தாயே
சிங்கம் போல வா தாயே..

(அம்மா அம்மா...)

*பல்லவி*

சிங்கம் போல ஆண்ட தாயே..
தேடுகிறோம் தெய்வம் நீயே
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..

(அம்மா அம்மா...)

✍️செ. இராசா

09/02/2023

ராங்கி

  


#ராங்கி திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன்....

லிபியா நாட்டின் #கடாஃபியைப் பற்றி ஏற்கனவே நிறையவே படித்துள்ளேன்.
எப்பேர்ப்பட்ட ஆளுமை?!!..
அவர் செய்த தவறுதான் என்ன?. ஒன்றுமில்லை...

தன் நாட்டில் உள்ள பெட்ரோலிய வளத்தைப் பெருக்கி அதில் வரும் வருமானத்தை தன் நாட்டு மக்களுக்கே பிரித்துக் கொடுத்தார்.
தன் நாட்டின் பூமிக்கடியில் கடல் போல் ஒளிந்திருந்த நன்நீரைக் கண்டறிந்து ஐந்து திட்டங்களாய் விரிவு செய்து இரண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியும் உள்ளார். MENA region என்று சொல்லப்படும் ஆப்பிரிக்க அரேபிய நாடுகள் ஒருங்கிணைந்த அமைப்பின் மாபெரும் ஆளுமையாக வளர்ந்து வந்தார். இதுபோதாதா..?!!... அவ்வளவுதான்...உடனே வழக்கம்போல் பெருச்சாளிகள் உட்புகுந்து நாசம் செய்ததன் விளைவு.... அந்நாட்டில் போராட்டக் குழுக்கள் உருவானார்கள். அதிலுள்ள ஒரு பையன் ஆலிம் என்பவனின் காதல் கதையே இந்த ராங்கி....

இதில் கொடுமை என்னவென்றால் அந்த பையன் காதலிக்கும் பெண்ணிற்கு இதைப்பற்றி கடைசி வரை எதுவுமே தெரியாது. அந்தப் பெண்ணின் அத்தையான திரிசா வேண்டுமென்றே செய்யும் ஒரு நிகழ்வில்தான் ஆலிமின் காதல்.....

எவ்வளவு பெரிய சிக்கலான திரைக்கதை பாருங்கள். ஆனால் அற்புதமான காட்சியமைப்பில் அச்சத்தலாக செல்கிறது. ஆயினும் வழக்கம்போல் படம் பொருளாதார ரீதியாக வெற்றியடையவில்லை. ஆமாம்....இங்கே துணிவு வாரிசு தானே வெல்லும்......!!! அட போங்கப்பா....

வாழ்த்துகள் திரிசா, சரவணன் மற்றும் ஒட்டுமொத்த ராங்கி குழுவினர்கள்....

இந்த ஹீரோபோமியா மாறினால்தான் இந்த மாதிரி படங்களும் வெல்லும்....

அதுவரையிலும்......நாம் கட்டவுட்டில் பால் ஊத்துவோமாக....

 

 


செந்தமிழ் பாடிய சித்தர்கள் கூட்டத்தில்
வந்தவன் யாரென சொல்லு?- சிந்து
தந்தவன் யாரென சொல்லு?
பண்டைய பாவலர் யாருக்கோ பாடிட
பண்ணினான் பாரதி வந்து!- பண்ணில்
பிண்ணினான் காவடிச் சிந்து!

கற்றவர் மற்றவர் கட்டிடும் பாக்களில்
நற்றமிழ் செய்ததார் சொல்லு? - கற்று
கற்றிடத் தந்ததார் சொல்லு!
முற்றிலும் மாறிய முத்தமிழ் பாடலைப்
பற்றினான் மாகவி அன்று- பற்றி
முற்றிலும் மாற்றினான் நன்று!

✍️செ. இராசா

எண்ணையில் நீராடி

 


எண்ணையில் நீராடி
......என்னைநீ காணவந்தாய்..
அண்மையில் வந்தவுடன்
.....அங்கத்தை- சுண்டிவிட
வெப்பமிகு மூச்சால்
......விரல்களை சுட்டுவிட்டாய்..
அப்போதும் தள்ளலையா?!
......அஞ்சு!
 
✍️செ. இராசா

08/02/2023

நண்பன் விசயத்தில் இவனோ

நண்பன் விசயத்தில் இவனோ
காசப் பார்க்கல..‌
காசு விசயத்தில் அவனோ
நட்பப் பார்க்கல...
 
இரண்டு பேருமே பலநாள் பழகுறானுங்க...
இரக்கம் காட்டியே இவனும் உருகுறானுங்க...
நாட்கள் போகவே நட்பில் விரிசல்பாருங்க.
வேறு என்னங்க‌‌...காரணம் காசுதானுங்க...
 
உரசிப் பார்த்தா... தங்கம் தெரியும்
பழகிப் பார்த்தா... உறவு புரியும்......(2)
 
✍️செ. இராசா

07/02/2023

பாலும் தெளிநீரும்

 


பாலும் தெளிநீரும்
........பாத்திரத்தில் பொங்கிவர
காலும் அரையுமென
.........காஃபித்தூள் சர்க்கரையை
சேர்க்கும் முறையறிந்து
........சேர்க்கநீ கற்றிருந்தால்
பூக்கும் உனக்குள்ளும்
..........பூ!
✍️செ. இராசா