20/08/2020

சக்தி தாண்டவம்

 

 


 

 #சக்தி_தாண்டவம்

சக்திசக்தி சக்தியென்று
..........சக்திபற்றி சொல்கிறீர்!
சக்திஅந்த சக்திசொந்த
...........சக்திபற்றி கண்டிலீர்!
சுத்தசக்தி சுட்டசக்தி
...........சுக்கிலத்தைக் கட்டுவீர்!
சித்தசக்தி புத்தசக்தி
..........சூத்திரத்தைப் பற்றுவீர்!

உச்சசக்தி ஒற்றைசக்தி
.........உள்ளசக்தி கொள்ளுவீர்!
துச்சசக்தி கெட்டசக்தி
.........தொற்றுசக்தி கொல்லுவீர்!
சக்தியுக்தி நல்லபக்தி
..........சத்தியத்தைப் பற்றுவீர்!
முத்திமுத்தி பக்திமுத்தி
..........முக்திவித்தை வெல்லுவீர்

கற்றசக்தி பெற்றசக்தி
............கற்றுபெற்ற சித்தியை
சுற்றியுள்ள உற்றவர்க்கு
............தக்கசக்தி ஊட்டுவீர்!
முட்டிமுட்டி தட்டிதட்டி
...........முட்டுகின்ற சக்தியை
முட்டையுள்ளே வச்சசக்தி
............மொத்தசக்தி எண்ணுவீர்!

✍️செ.இராசா

No comments: