31/08/2020

துன்பத்திலும் நகுக----------வள்ளுவர் திங்கள் 126

 



முரண் என்ற வார்த்தையின்
மொத்தப் பொருளே
அவனும் அவளும்தான்..
 
இவனுக்கு இசையென்றால்
அவளுக்கு இரைச்சல்
இவனுக்கு உறக்கமென்றால்
அவளுக்கு விழிப்பு
இவனுக்கு இதுவென்றால்
அவளுக்கு அது..
 
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தவனை
பேயாநீ என்கிறாள்...
சொற்பொழிவில் திளைப்பவனை
சொற்களால் வதைக்கிறாள்...
வார்த்தைகளின் வலியால்
வழிகிறது கண்ணீர்...
 
வஞ்சியின் முகம்‌
வாஞ்சையாகிறது..
எப்போதும் போல்தானே..
இப்போதென்ன?!! என்கிறாள்..
இப்படியே போகாதீர்
போகுமிடம் பிரச்சினை வரலாம்! என்கிறாள்
 
பிரச்சினையோடே வாழ்பவனுக்கு
பிரச்சினை வருமா என்கிறான்?!
அங்கே....
சிரிப்பொலி சிம்பொனியாகிறது
 
ஆம்...
முரண் என்ற வார்த்தையின்
மொத்தப் பொருளே
அவனும் அவளும்தான்..
 

No comments: