20/09/2010

வாஸ்து என் பார்வையில்

வாஸ்து என் பார்வையில்

வாஸ்து என்றால் என்ன ?
         வாஸ்து,வாஸ்து  என்று நாம் எங்கு திரும்பினாலும் கேட்கின்ற ஒரு சொல்லாக இது உள்ளது.அப்படி என்ன தான் சொல்கின்றது இந்த வாஸ்து?
        மனிதனின் அத்தியாய தேவைகளின் ஒன்றாக  இருக்கும் இருப்பிடத்தை, ஒரு இயற்க்கை விதியோடு வடிவமைப்பதே  வாஸ்து ( வாஸ்து சாஸ்திரம் என்பர் சிலர் ) என்கிறோம் .

பொறியாளருக்கு வாஸ்து தெரிய வேண்டுமா ?
        ஊரோடு ஒத்து போகிறவர்கள் தானே சாதிக்க முடியும்.  வாஸ்து பழமையான விதியாக இருப்பினும் ,பெரும்பாலனோர் வாஸ்து விதி கட்டிடத்தை தான் விரும்புகின்றனர் .எனவே அதை பற்றிய அடிப்படை அறிவு  இந்தியப் பொறியாளருக்கு  கண்டிப்பாக அவசியம்.

வாஸ்து அறிவியல் பூர்வமானதா?
           பழமை அனைத்தையும்  புதிய அறிவியலால் விளக்க முடிந்தால் தான் நம் அறிவு அதை ஏற்கும்.இல்லையேல் அது எப்பேர்பட்ட தாயினும் பகுத்தறிவு யோசிக்க வைக்கும்.
           ஆம் பஞ்ச பூதங்களையும்(நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம்) நமக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை வடிவமைப்பதே இந்த வாஸ்து விதி.
            நம் பூமி 23 1/2 பாகை சாய்வாக சுற்றுகிரதல்லவா? புவி ஈர்ப்பு விசை  நம்மை என்றும் பாதிக்கும் காரணி,சரி தானே ?  இதை சரி சைய்ய வேண்டி உள்ளது ,ஆகவே தான் ஒரு பக்கம் நாம் (தென் மேற்கு ) உயர்த்தியும் ,மறுபக்கம் (வட கிழக்கு ) தாழ்த்தியும் அமைக்கிறோம்.
              நமக்கு வட கிழக்கு  பருவ காற்று அதிகம் வீசுவதால், ஹால் மற்றும் போர்டிகோ வடகிழக்கில் வருவதாக அமைக்கிறோம் .
              மலைச்சாரல் உள்ளே வரக்கூடாது என்பதற்க்காக  வடக்கு மற்றும் கிழக்கு பகுதி கூரை தாழ்வாக இருக்க வேண்டும்.சனி மூலையில் போர் போடுவது என்பது ஒரு பொதுவான விதியே.(அனைவரும் ஒரே விதியில் சென்றால் ஊற்று பரப்பு பிரச்னை வராதல்லவா? )
            காலைக் கதிரவன் கதிர்கள் சமையலறை சன்னலில் படும் பொழுது அதில் படிந்துள்ள பூஞ்சைகள் அழிகின்றன,எனவே தான் நாம் சமையலறையை  தென் கிழக்கில் அமைக்கின்றோம் . மாலைக் கதிரவனில்  விட்டமின் D உள்ளது,அதன் கதிர் விழ படுக்கை அரையை  தென் மேற்கில் அமைக்கிறோம்.
              இப்பொழுது நாம் கூறலாமல்லவா, வாஸ்து நவீன அறிவியலோடு ஒத்துள்ளது என்று. இயற்க்கையை சரியான விகிதா சாரத்தில் பயன்படுத்தும் அறிவியல் கலை-வாஸ்து .

வாஸ்துவால் என்ன நன்மை?
           இயற்கையோடு  பொருந்தி வீடை வடிவமைப்பதால் நம் வீடு ஒரு உயிர் ஓட்டமுள்ள இல்லமாக நம்மை சந்தோசப்படுத்துகிறது.ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் கிடைக்க வழி வகுக்கின்றது.  நாம் கட்டிய வீட்டில், நிம்மதி கிடைக்கும் பொழுது நமக்கு மகிழ்ச்சி தானே?.

 எல்லாரும் வாஸ்து பார்த்து கட்ட முடியுமா ? 
             கண்டிப்பாக முடியாது . இட நெருக்கடியும் , பொருளாதார வசதியும் மிக முக்கிய காரணிகள்.பெரும்பாலும் தனி வீடு  அமைப்பவர்களுக்கே வாஸ்து விதி சாத்தியம். அடுக்கு மாடி வீடு மற்றும் வாடகை வீட்டில் குடி இருப்போர் இதை குழப்பி கொள்ள வேண்டாம்.

 வாஸ்து  இல்லா வீடு பாதிப்பா ?
     கண்டிப்பாக இல்லை.
 தூய்மையான ஆலயம்,அழகான அருவி ,ரம்மியமான ஏரி.....இவைகளை நாம் பார்க்காவிட்டாலும் வாழமுடியும்.அதைப் போல, இயற்க்கை விதியான வாஸ்து இல்லாத  வீட்டிலும்  வாழமுடியும்.

பரிகாரம் தேவையா ?
        தேவையே இல்லை.(இருந்தாலும் நம் மனது எதையாவது சையலேன்னா,அவ்வளவு சீக்கிரம் நிம்மதி பெறாது.எனவே சில ஐட்டங்களை கூறுகிறேன்.இது எல்லாம் சும்மா ஒரு மனோ ரீதியான விடயமே . தினமும்  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூ போடுவது.வாசலில் விளக்கு வைப்பது .பிரமிடு வைப்பது .சப்த ஓலி எழுப்பிகளை தொங்க விடுவது ........இன்னும் யோசிப்பாங்க ..?)

வாஸ்து முக்கிய விதிகள் என்ன ?

  • வடகிழக்கு (சனிமூலை) -ஹால்,போர்டிகோ ,கன்னி மூலையைவிட தாழ்வாக இருக்க வேண்டும்,பூஜை அறை . போர் போடலாம்.வெற்றிடம் விடலாம் .
  • தென்கிழக்கு (அக்னி) -சமையலறை. முடியாவிடில்  வாயு  மூலை.
  • வடமேற்கு (வாயு  மூலை)-படிப்பறை,சின்ன படுக்கை அறை
  • தென்மேற்கு (கன்னி மூலை)-பெரிய படுக்கை அறை ,கன்னி மூலை உயரமாக வேண்டும்,
  • வடக்கு - தளக்கூரை தாழ்வு,வெற்றிடம்  தென் மேற்கை விட அதிகமாக விடவும் 
  • கிழக்கு-  தளக்கூரை தாழ்வு ,வெற்றிடம் தென் மேற்கை விட அதிகமாக விடவும்
  • தெற்கு -கழிப்பறை ,படிக்கட்டு ,தளக்கூரை உயரம்
  • மேற்கு -கழிப்பறை ,படிக்கட்டு ,தளக்கூரை உயரம் 

----------------------------------முற்றும்-------------------------------------------அன்புடன்,  இனேஷ் ராஜா

13/09/2010

உலகப் பூ

உலகப் பூ
இந்த உலகப் பூ
ஒருநாள்
வெடித்து சிதறத் தான் போகிறது
சிதறிய பூக்களில் சிவந்த பூ ஒன்று
உன் காலடியில் விழுமேயானால்
அது என் இதயப் பூவாய்தான் இருக்கும் .
------------------------------------------------------யாரோ ஒரு இறந்த காதல் ஜோடியைப் பற்றி தினத்தந்தியில்  பத்து வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது.தன் காதலியோடு இறந்த ராஜ்குமார் என்பவரின் டைரியில் இருந்த கவிதை என  பிரசுரித்ததில் மனதில் ஆழமாக பதிந்த கவிதை.