14/06/2018

ஆசை


அத்தனைக்கும் ஆசைப்படும்
பித்தனைப்போல் இல்லாது
சத்தியத்தைப் பின்பற்றும்
புத்தனைப்போல் வாழ்ந்திடுவாய்!

எத்தனையோ ஆசைகளால்
புத்திகெட்டு போகாது
சுத்தவெளி இறைவனையே
கத்திகவி பாடிடுவாய்!

ஐம்பொறியின் ஆசைகளால்
மாய்ந்திங்கே மடியாது
ஐயமில்லா முக்திபெற
ஐங்கரனைத் தொழுதிடுவாய்!

பற்றிக்கொண்ட ஆசைகளால்
வெற்றுயிராய் வீழாது
வெற்றி தோல்வி கவலையின்றி
பற்றில்லாமல் முயன்றிடுவாய்

✍️செ. இராசா

No comments: