14/06/2018

தமிழ்ச்சோலை


எந்தமிழ் உறவினர்கள்
செந்தமிழ் பேச வேண்டும்!

பைந்தமிழ் நூல்களெல்லாம்
பயின்றிட முயல வேண்டும்!

முத்தமிழ் கற்றவராய்
முன்னேற்றம் அடைய வேண்டும்!

நற்றமிழ் வித்தகராய்
நலம்பெற்று உய்ய வேண்டும்!

பொங்குதமிழ் புலவராக
பூவுலகை வெல்ல வேண்டும்!

அருந்தமிழ்க் கவிஞராக
அனைவருமே சிறக்க வேண்டும்!

சங்கத் #தமிழ்ச்சோலையிலே
சங்கமித்து மகிழ வேண்டும்!

தெள்ளுதமிழ் கவி எழுத
#வள்ளுவர்_திங்கள் வர வேண்டும்!------------------------------------------------------அறிஞர்கள் கவிபாடும் சோலை
ஆன்றோர்கள் புகழ்பாடும் சோலை
இளைஞர்கள் தமிழ்பாடும் சோலை
ஈகைக்குக் கரம்கொடுக்கும் சோலை
உண்மை உறவாடும் சோலை
ஊக்கத்தை உருவாக்கும் சோலை
எழில்தமிழ் விளையாடும் சோலை
ஏற்றதால் சிறப்புறும் சோலை
ஐயமில்லா அற்புதச்சோலை
ஒளியேற்றி வழிகாட்டும் சோலை
ஓர் கோட்டில் பயணிக்கும் சோலை
ஔவை அறம் போற்றும் சோலை
இஃதே எங்கள் தமிழ்ச்சோலை

வாருங்கள் உறவுகளே... தொடர்ந்து பயணிப்போம்...

இது நம் தமிழ்ச்சோலை....
உங்கள் தளம்

No comments: