14/06/2018

சிறுவர் பாடல்- விவசாயம்


ஏற்றம் போட்டு உழுது
சேற்றில் விதையைத் தூவி
நாற்றை வளர்க்கச் செய்வோம்!

வெற்றுக் களையைப் பறித்து
முற்றுக் கதிரை அறுத்து
காற்றில் பதரைப் பிரிப்போம்!

நெல்லைத் தனியே எடுத்து
நெல்லின் உமியைக் களைந்து
நெல்லில் அரிசி எடுப்போம்!

அரைத்த அரிசி எடுத்து
அம்மா கையில் கொடுத்து
அழகாய்ச் சோறு சமைப்போம்!

No comments: