04/06/2021

தங்கக் காசுகள்

 




நேற்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றே சொல்லலாம். காரணம், என் நிறுவனத்தின் தலைவர் என்னை அழைத்து அவர் விரும்பிக்குடிக்கும் கறுப்பு நிறக்குழம்பியோடு (Coffee) நான்கு தங்கக் காசுகள் கொடுத்து எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துக் கொடுப்பதாகவும் கூறினார். மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பத்திரமாக என் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு கம்பீரமாக ஒரு விதப் புன்னகையோடு நடக்க ஆரம்பித்தேன். பிறகு அதை என் கணினி முன் வைத்து புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டைநோக்கிப் பறந்தேன். வெயில் மிகவும் உச்சத்தில் இருந்ததால் தங்கக் காசுகள் உருக ஆரம்பித்தது. உடனேயே வண்டியை நிறுத்தி தங்கக் காசுகளின் உறையை உரித்து நானே தின்றுவிட்டேன். ஆகா... ஆகா...என்னே சுவை?!😊😊😊😅

✍️செ. இராசா

No comments: