02/06/2021

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் இசையே..

 


அன்னை மொழியின் அன்னக் கிளியே*
இன்னல் களையும் எங்கள் ஒளி(லி)யே
பஞ்சு** கொடுத்தப் பருத்தித் திரியே
விஞ்சி எழுந்த விம்மீன் பொறியே
எம்மை இயக்கும் இருதய விசையே
உம்மைப் புகழ்ந்தால்...உவக்கும் இசையே

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் இசையே...💐💐💐

✍️செ. இராசா

* அன்னக்கிளி- இசையமைத்த முதல் படம்
**பஞ்சு அருணாசலம் அவர்கள்

No comments: