16/06/2021

மகன் பாடல்


 

அந்தத் தருணங்கள மறக்க முடியுமா?!
எந்தப் பொருளுமதைக் கொடுக்க முடியுமா?
 
விதைச்சு விட்ட வித்து ஒன்னு
வெடிச்சு வரும் நேரத்தில..
துளியில் பூத்த சின்னத் துளிர்
துடிச்சு வரும் நேரத்தில...
என்ன சொல்ல என்ன சொல்ல
ஏதோ ஒரு மின்னல் பாரு
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
கன்னாப் பின்னா ஆட்டம் பாரு
 
மகனே மகனே மகனே மகனே
மகனே மகனே மகனே மகனே
 
பொக்க வாயில நீ ...ங்க்கா சொல்லுவ
பல்லு போட்டதும்..அப்ப...அப்பா சொல்லுவ
போற போக்குல...நீ..டாடா காட்டுவ
பொழைக்க வழியில்ல...ஆனால் டாட்டா ஆக்குவ
பெரிய ஸ்கூலுல தம்பி சீட்டு கிடைக்கல
கிடைச்ச ஸ்கூலுல அட நோட்டு பத்தல
மார்க்கு குறைஞ்சிட்டா உங்க அம்மா கத்துவா
பார்க்கு பீச்சுக்கு உங்க அப்பா ஓடுவான்
அரிசி போட்டா என்ன நூடுல்ஸ் பொங்குமா
படிச்சுப் போட்டா என்ன ஸ்கோரு குறையுமா?
 
மகனே மகனே மகனே மகனே-
மகனே மகனே மகனே மகனே
 
✍️செ. இராசா

No comments: