15/09/2020

வாழ்க வளமுடன் அல்லது வாழ்க வளத்துடன்...... எது சரி...?

 


 

 #வாழ்க_வளமுடன் அல்லது #வாழ்க_வளத்துடன்...... எது சரி...?


இதில் இலக்கணப் பிழை ஏதும் இருக்கிறதா என்போருக்காகவே இப்பதிவு.

அதாவது அம் ஈற்று பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் வேற்றுமை உருபு வந்தால் அம் கெட அத்துச் சாரியை தோன்றி, அதன் பிறகு உருபு வேற்றுமையுருபு புணரும் என்றும் இலக்கண விதி சொல்வோர்கள்
கீழ்வரும் திருக்குறள்களைப் பார்க்க வேண்டுகிறேன்.

கண்ணோட்டம் என்பது உலகியல் அஃதிலார்
உண்மை #நிலக்குப் பொறை
(1)

இங்கே நிலம் என்ற சொல்லை வள்ளுவர் கையாண்டு இருக்கிறார். நிலம் என்ற சொல்லொடு கு என்ற வேற்றுமையுருபு ஏறினால் நிலம் + கு = நிலத்தக்கு என்று வர வேண்டுமல்லவா?! ஆனால் வள்ளுவரோ, அத்துச் சாரியை விட்டு விட்டு, நிலக்கு என்று எழுதியிருக்கிறாரே ஏன்? .

மேலும் உள்ள மற்ற குறள்களையும் பாருங்கள்;

#நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில் பிறற்குரியாள் தோள்தோயா தார்’,
(2)

"கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை #நிலக்குப் பொறை’
(3)

மேலும் அத்து முதலிய சாரியைகளை தவிர்க்கவும் செய்யலாம் என்பதற்கு பின்வரும் #நன்னூல்_சூத்திரம் பாருங்கள்;

#பதமும்_விகுதியும்_பதமும்_உருபும்
#புணர்வழி_ஒன்றும்_பலவும்_சாரியை
#வருதலும்_தவிர்தலும்_விகற்பமும்_ஆகும்’.
#மகரஈற்றுப்_பெயர்ச்சொற்களோடு #வேற்றுமையுருபைச்சேர்க்கும்_போது
#அத்துச்சாரியையும்சேர்க்க #வேண்டியதில்லை என்பதற்கு இலக்கண ஆசிரியரான #நன்னூலாரை விட வேறு யாரிடம் போய்ச் சான்று கேட்க முடியும்.

எனவே ’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவதில் இலக்கணக் குற்றம் எதுவுமே இல்லை.

✍️செ. இராசமாணிக்கம்


No comments: