15/12/2019

எங்கள் குரு--விக்டர்தாஸ்

#மாயஜால_வித்தைகோடி” என்ற என் பாடலுக்காக, என் உயிரிலும் மேலான அண்ணன் மற்றும் குருவான சின்னக் கண்ணதாசர் திரு. விக்டர்தாஸ் அண்ணா அவர்கள் பாராட்டிய வார்த்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இது என் சுய விளம்பரத்திற்காக அல்ல உறவுகளே....இதில் உள்ள விடயங்கள் ஒரு வேளை யாருக்காவது பயன்படுமே என்ற ரீதியில்....இதோ

#அண்ணா

தம்பி ராஜமாணிக்கம் வணக்கம். நலமா!
தங்கள் பாடலைப் பார்த்தேன். உண்மையில் ரொம்ப நல்லா இருக்குடா தம்பி.

டேய்...இது நீ எழுதலைடா... ஆமாம்...நீ எழுதலை. உனக்குள்ள ஒரு சக்திதான் எழுதி இருக்கு.

ஆமாம். உனக்குத்தெரியுமா?!!
அது சிவ வாக்கிய சித்தர் எழுதிய சந்தம் பார்த்துக்க. அவர் போட்ட வார்த்தைகளைக்கூட நீ உன்னை அறியாமல் போட்டிருக்கடா தம்பி. உண்மையில் நீ நல்லா வருவ....!!

(நிறைய பாராட்டினார்கள். கட்டுரையின் நீளம் கருதி அதையெல்லாம் எழுதவில்லை...அதெற்கெல்லாம் ஒரு பெரிய மனது வேண்டும்)

அண்ணா சொல்லியதற்குப் பிறகு நான் சிவ வாக்கியர் பாடலைத் தொடர்ந்து Youtube ல் கேட்டு வருகிறேன். அது மட்டுமா அவரைத் தொடர்ந்து குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர்...எனப் பலருடையப் பாடல்களையும் இசைக்கோர்வையில் கேட்டு வருகின்றேன். ஆகா..ஆகா...எப்படிச் சொல்வேன் அந்த அனுபவங்களை...

இப்படித்தான் என் குரு என்னைச் செதுக்குகிறார். நீங்களும் அப்பாடல்களைக் கேளுங்கள் உறவுகளே... மெய்மறந்து ரசிப்பீர்கள்!!!

அவருக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

என் அண்ணுக்காக ஒரு #வெண்பா!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐

மின்னலின் வேகமும்
...........மேகத்தின் ஈரமும்
விண்மீன் உயரமும்
...........வெண்ணிலா உள்ளமும்
அண்டத்தின் ஞானமும்
...........ஆதவப் பாசமும்
கொண்டவர் எங்கள் குரு!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

மனமார்ந்த நன்றி அண்ணா

விக்டர்தாஸ் கவிதைகள்

No comments: