01/11/2019

தந்தையின் தந்தையார்



தந்தையின் தந்தையார்
......தந்தைக்குத் தந்ததை
உந்தையும் தந்தார் உனக்கு!

உந்தையைப் போலவே
...............உந்திடும் விந்தையால்
தந்தையாய் மாறுவாய் தந்து!

தந்ததைத் தந்திடும்
.............தந்தையார் ஓட்டத்தில்
மந்தையாய்ப் போவதா வாழ்வு?!

மந்தையாய்ப் போகிற
............மாயத்தைப் போக்கிடச்
சிந்தையைச் சீராய்ச் செதுக்கு!

✍️செ. இராசா

(புரியுது...புரியுது....என்னமோ சொல்றாப்புல...அதானே....😊😊😊😀😀😀)

#திருவண்ணாமலை

No comments: