03/11/2019

மையம்


மையமா அல்லது
மய்யமா?
ஐயமே இல்லை
மையமேதான்...!!

மத்திய அரசோ?!
மாநில அரசோ?!
அதிகார வரம்புகள்
அதிகமாய் இருப்பது
ஒரு மையத்தில்தான்!

சின்ன உயிரோ?!
பெரிய உயிரோ?!
ஓடும் உயிரணுக்கள்
உயிர்ப்பாய் இருப்பது
ஒரு மையத்தில்தான்!

ஆம்....
கரு மையக் கணக்கின்றி
எந்தப் பிறவியும் இல்லை!
கரு மையக் கருத்தின்று
எந்தப் படைப்பும் இல்லை!

தன் மையத்தைத்
தானே சுற்றும் பூமியும்;
சூரிய மையத்தைச்
சேர்த்துச் சுற்றும் கோள்களும்;
பிரபஞ்ச மையத்தையே
சுற்றி வரும் பால்வீதிகளும்
இந்த மையநோக்கு மந்திரத்தை
எங்கே கற்றன?!!
ஓ....
அனைத்திற்கும்
ஆதாரமான அணுக்களிடம் கற்றனவோ?

எனில்...
அந்த ஆதார மையத்தை அறிந்தால்,
கண்டிப்பாய் அறிந்திடலாம்
அனைத்திற்கும் காரணமான
அந்த #மையத்தை....

✍️செ. இராசா

No comments: