06/11/2019

#பாட்டில்_ஏறாத_வரிகள்_1




(நாம் மெட்டுக்குப் பாட்டெழுதும்போது ஏறாத வரிகளும் உண்டுதானே?!! ஏதோ சில காரணங்களால் அவ்வரிகள் பாட்டில் இடம்பெறாமல் போனாலும் அவையும் நம் பிள்ளைகள் அல்லவா?! அவற்றை அப்படியே அநாதையாக விடலாமா என்ன?!! இதோ இங்கே அரங்கேற்றம் செய்கிறேன்)

நாட்டில் எத்திக்கும் நாம்தானே பேச்சு
பாட்டில் தித்திக்க சொன்னாலென்ன?!
நாட்டில் எத்திக்கும் நாம்தானே பேச்சு
பாட்டில் தித்திக்க சொல்வோமிங்கே!

ஞானப் பாட்டன்கள் நாடாண்ட நாளில்
வானப் பட்டாசாய் வாழ்ந்தோமடா!
மூடர்க் கூட்டங்கள் நாடாள் வதாலே
ஈரப் பட்டாசாய் போனோமடா!

நாம்பட்டக் காயங்கள் போதுண்டா- நண்பா
நேர்நின்றே நாம்வெல்ல வேணுண்டா!

மாற்ற வேண்டும் நிற்காமல் ஓடி ஓடி வா
மாற்ற நீயும் ஓடோடி வா!
மாற்றம் வேண்டும் நிற்காமல் ஓடி ஓடி வா
மாற்ற நீயும் ஓடோடி வா!

சேட்டைக் காட்டிடும்
..............சைத்தானை ஓட்ட ஓடி வா!
நாட்டைக் காக்க ஓடோடி வா!

போட்டி போட்டிடும்
...............கார்ப்ரேட்டை ஓட்ட ஓடி வா!
நாட்டைக் காக்க ஓடோடி வா!

மாட்டில் காட்டிய
...............போராட்டம் காட்ட ஓடி வா!
நாட்டைக் காக்க ஓடோடி வா!

#ஏறாத_வரிகள்_ஒரே_மெட்டுக்க

ஈழ வேழம் தோற்காது என்று நம்பு டா!
ஆழ விழுது வேர் போடுண்டா!

சோழ ராஜன் போடாடேய் எங்க ஆளுடா!
கூகுள் பிச்சை எங்க ஆளுடா!

வீரத் தமிழன் கண்ணுக்குள் காட்டு தீ யடா!
பார்த்தால் போதும் பத்தி எரியும்டா!

வீர நெஞ்சுள் எப்போதும் காட்டுத் தீயடா!
ஈரம் கொண்டால் பற்றாது டா!

பாறை நெஞ்சில் புல்டோசர் போட்டு ஆட்டிட்ட
பார்ரா இனிமேல் பூகம்பம்ண்டா!

போட்டி போட்டு நீயெம்மை ஆண்டு கொள்(ல்)ளவா?!
ஓட்டு போட்டே ஏமாறுறோம்!

வீரத் தமிழன் சோழராஜனின் எள்ளுப் பேரன்டா!
பார்த்தால் போதும் பத்தி எரியும்டா!

வீரத் தமிழன் சோழராஜனின் வம்சம் நாங்கடா!
ஆளப் போறான் நீபாருடா!

ஏறிப் போடா! நிக்காத....நீயே கில்லி டா!
சீறிப் போடா! சிக்காத டா!!

போட்டுத் தாக்கு! பட்டாசா மாச காட்டு டா!
போட்டுத் தாக்கு! மாசு காட்டு டா!

வீரத் தோழா....நிற்காதே மாசு காட்டு டா!
சீறிப் போடா! சிக்காதே டா!

✍️செ. இராசா

No comments: