18/09/2018

112வது கவிச்சரம்- பஞ்ச பாண்டவர்கள்

112வது கவிச்சரம்

🌸🌼🌸🌼🌼🌸

தமிழ்த்தாய் வணக்கம்
*********************
ஆதியிலே வந்தமொழி
ஆதவனாய் நின்றமொழி

அத்தனைக்கும் மூத்தமொழி!
அம்மையப்பர் சொந்தமொழி

எந்தன்மொழி எந்தைமொழி
எங்கள்பிள்ளை பேசும்மொழி

அம்மொழியாம் தமிழ்மொழியை
அகமொழியில் வணங்குகிறேன்
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கவிச்சரத் தலைமை வணக்கம்
*****************************
ஏது தலைப்புகள் கொடுத்தாலும்
சேது அண்ணா கலக்கிடுவார்!

ஐக்கூ சென்றியூ என்றாலும்
நச்சென நன்றாய் எழுதிடுவார்!

களஞ்சியம் போட்டிகள் வந்தாலே
கவிச்சரம் தானெனக் காட்டிடுவார்!

உவமைக் கவிதை வடிவத்திலே-நம்
உள்ளம் கவர்ந்த நாயகரை
மனதால் மொழியால் வாழ்த்துகிறேன்!
மகிழ்வுடன் அவரை வணங்குகிறேன்!

வாழ்க வளமுடன் அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சபை வணக்கம்
***************
நவ ரத்தினக் கற்களைப்போல்
நவ கிளைகள் கண்டசபை!

இந்திய எல்லைவிட்டு
இலங்கையிலும் கொண்டசபை!

எத்தனயோ கிளை பரப்பி
எங்கெங்கும் பரவும் சபை!

எங்கள் சபைப் பட்டறையை
என்தமிழால் வணங்குகிறேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பஞ்ச பாண்டவர்கள்
*******************
சந்திரவம்சக் குலம்தன்னில்
பாண்டு மன்னரின் பிள்ளைகளாய்
பஞ்ச பாண்டவர் பிறந்தனரே...

பாண்டு அரசரின் முன்னவனாம்
திருதராஷ்டிரர் பெற்றெடுத்த
நூறு கவுரவர் வந்தனரே...

ஐந்தும் நூறும் சண்டையிட
ஐந்தின் துணையாய் கண்ணன்வர
ஐந்தால் நூறை வென்றனரே...

எண்ணிக்கை என்பது பொருட்டல்ல
எண்ணங்கள் என்பதே பொருட்டாகும்!
நம்பிக்கை மிகுந்த எண்ணத்தினால்
நன்மைகள் நிச்சயம் நடந்தேறும்!

ஐம்புலன் ஆள்கின்ற மனம்போல
ஐவரை ஆண்டது கண்ணனன்றோ?!!
இச்சைகள் நூறையும் கொல்வதற்கு
இறைவனின் துணையும் வேண்டுமன்றோ?

தருமன்
*******
வில்லிலே சிறந்தவன் விஜயன்- ஆனால்
விருப்பதில் பெண்களின் பித்தன்!
ஆயிரம் யானைபோல் பீமன்- ஆனால்
அரக்கரின் குணம்கொண்ட முரடன்!

மாத்ரியின் மைந்தர்கள் இருவர்-ஆனால்
சத்ருக்கள் பயப்படாத சிறுவர்!
ஐவரிலும் சிறந்தவர் தருமர்- அவர்
ஐயமின்றி அறம்காத்த ஒருவர்!

நன்றி நவில்தல்
***************
எத்தனையோ கவிஞர்களை
ஏற்றிவிட்ட சபையினை
எளியோனின் கவிதைக்கும்
இடம்தந்த சபையினை
நன்றிகூறி விடைபெறுகின்றேன்
நன்றி! நன்றி!! நன்றி!!!

No comments: