13/09/2018

நன்றி நவில்தல்



நான் எனும் மண்குடத்தை
நான் செய்ய முயலுகையில்
அணிந்துரை எழுதித்தர
அருமை அண்ணா சம்மதித்தார்!
(விக்டர்தாஸ் கவிதைகள்)

வாழ்த்துரை வேண்டுமென்று
கரூர்தம்பி (கரூர்பூபகீதன்) எனைக்கேட்க
யாரிடம் கேட்பதென்னு
யோசனை செய்கையிலே

தானே வழங்குவதாய்
தாமாக முன்மொழிந்து
வாழ்த்திய வள்ளலானார்
செல்வம் சந்திரனார்
(Selvam Chandran)

யாரிவர்?!
*********
பன்னாட்டு நிறுவனத்தில்
பல நாட்டு நபர்களோடு
நம் நாட்டு நண்பராக
என்னோடு பயணிப்பவர்...

என்ன சிறப்பு?
*************
எண்ணத்தைச் சொல்லாக்கி
எழுதுகின்ற கிறுக்கன் நான்!
எண்ணத்தை செயலாக்கும்
எழுச்சிமிகு இளைஞர் அவர்!

மரமொன்றும் வளர்க்காத
மரமண்டை மனிதன் நான்!
மரங்களை நேசிக்கின்ற
மரநேய மனிதனவர்!

யாருக்கும் செய்வதிலே-அன்று
ஊரறிந்த கஞ்சன் நான்!
ஊருக்குச் செய்வதிலே
உண்மையிலே வள்ளலவர்!

அது மட்டுமா?!!

இயற்கை விவசாயமோ
இவருக்கு அத்துப்படி!
இந்திய நாட்டு மாடுகளோ
இவருடைய மனையின் பிடி!

வெளிநாட்டில் இருந்தாலும்
உள்நாட்டில் இவர்மூச்சு!
பொறியாளர் ஆனாலும்
அறம்போற்றும் தமிழ்ப்பேச்சு!

கட்டுரை எழுதுவதில்
கைதேர்ந்த எழுத்தாளர்!
கருத்துரை வழங்குவதில்
கருணைமிகு ஆசிரியர்!

கேப்பையும் கூலும் வைத்து
கைபோட்டு சாப்பிடுவார்!
போலி உலகத்திலே
பொய்யின்றிப் பழகிடுவார்!

இவருக்கு பெருமை செய்ய
இத்தனை நாள் ஆகியதில்
எனக்கிருந்த மனச்சுமையை
இன்றேதான் இறக்கி வைத்தேன்!

வாழ்க வளமுடன் நண்பரே!
வாழ்க வளமுடன் ஐயா!

✍️செ. இராசமாணிக்கம்

(புகைப்படம் எடுத்தவர்: திரு. Riaz Ahamed அவர்கள்)
— with Selvam Chandran.

No comments: