27/04/2019

#ரோசாவும்_ராசாவும்




(ஆணும் பெண்ணும் தனித்தனியாக தூரத்தில் இருந்து பாடுகின்றார்கள். பழைய திரைப்படங்களில் உள்ள பாடல் காட்சியைப்போல கற்பனையில்...
#ரோசாவும்_ராசாவும் என்று பழைய பாணியிலேயே)

தன்னானே நானன்னே தன்னானே
தன்னானே நானன்னே தன்னானே

குடிகாரன் நானில்லை ரோசாவே-ஆனால்
குடிக்காமல் புலம்புறன்டி ரோசாவே
கவியெழுதத் தெரியாது ரோசாவே- இப்ப
கவிஞனாக மாறிபுட்டேன் ரோசாவே

சத்தியவான் நீதானே ராசாவே- நீ
சத்தியங்கள் செய்யனுமா ராசாவே
வைரமுள்ள வரியெழுதும் ராசாவே- என்
வைரமுத்து நீதானே ராசாவே

உன்னோடு சேரத்தான் ரோசாவே- அட
உசுருல்லாம் கொதிக்குதடி ரோசாவே
எனக்காகப் பூத்திருக்கும் ரோசாவே- நீ
எப்போது வந்திடுவ ரோசாவே

எனக்காக வாழுகின்ற ராசாவே- நீ
எப்போதும் என்னோட ராசாவே-நான்
இப்போதே வந்திடவா ராசாவே- ஊர்
தப்பாகப் பேசிடுமே ராசாவே!

கருப்பாக நானிருந்தும் ரோசாவே- நீ
கருக்காமல் பார்த்துக்குவேன் ரோசாவே
கருப்பானக் கட்டழகு ராசாவே- நீ
கருத்தாலே கவருகின்ற ராசாவே!

✍️செ. இராசா

No comments: