04/03/2022

வெண்பா_உரையாடல்---கண்ணாடி முன்னாடி


  

 

#வெண்பா_உரையாடல்
#ஒற்றைப்படை_நான்
#இரட்டைப்படை_தங்கை
Mythili Dhayalan

கண்ணாடி முன்னாடி
.........கைத்தூக்கி சீவுனா
பொண்டாட்டி வந்தெங்கே
........போறேம்பா- கிண்டலா‌‌
அப்ப சிரிச்சீனா
........அம்புடுத்தான் பார்த்துக்க
உப்புமாக் கண்டவன்போல் ஓடு!
(1)

சொன்னாதான் என்னண்ணா
.....சொத்தாக் குறைஞ்சிடும்
சின்னதாக் கிட்டும்ல
.....சந்தோஷம்..என்னத்தான்
எங்கதான் கிளம்புதோனு
......ஏங்கியே நாள்முழுக்க
கங்கலங்கத் தேவையாக் கூறு..
(2)

கூறுவதைக் கூறினாலும்
......கூறுவதை நம்பனுமே
சீறுகிற பாம்பைப்போல்
......சீறிடுவா- தாறுமாறா
வேறென்ன செய்யுறது
.....வீண்வாதம் வேண்டாம்னா
வேறுவழி சொல்லேன்மா நீ!
(3)

சொல்றத நீங்க
.......சிரிக்காம சொன்னாக்க
இல்லாளும் வாழ்வா
.......இனிமையா..பல்லஈனு
வச்சாப் படுபாவி
......வாய்ல வரதெல்லாம்
பச்சைபொய்னு கத்துறாங்கப் பாரு..
(4)

பாரெல்லாம் சொல்லுதும்மா
.......பாராட்டித் தள்ளுதும்மா
ஊரென்ன சொன்னாலும்
......ஓயாது- பாரம்மா
என்ன கிழிச்சேம்பா
......என்னத்த தந்தேன்பா
என்னம்மா செய்ய இனி!
(5)

ஒன்னுமேச் செய்யாம
........ஓனு முகத்தையும்
துன்பமா நீவச்சு
.........தான்பாரேன் .. என்னங்க
ஏங்கனே உங்கள
.........ஏந்த புரியுமேத்
தாங்கும் அவங்க தவிப்பு..
(6)

உம்முனு நானிருந்தா
....ஓயாம நச்சரிப்பா
சும்மான்னு சொன்னாலும்
....சொல்லென்று- வம்பிழுப்பா
ஒன்னுமில்லை என்றாலும்
.....உண்மையில்லை என்றுரைப்பா
என்னக் கருமம் இது?!
(7)

தன்னுலகம் பெண்டிர்க்குத்
......தன்குடும்பம் தான்அண்ணா
அன்பின் மிகுதியால்
.....ஆட்டிடுவர்..இன்னாது
நீங்கள் இரண்டுநாள்
.....நீண்டால் கவனிங்க
சங்கடப்படு வாங்கண்ணா சோர்ந்து!
(😎

தங்கையுன் வார்த்தையை
....தாய்ச்சொல்லாய் ஏற்பவனாய்
உங்கண்ணி முன்னால்
‌...உமக்காக- அங்கேநான்
அன்பாய் உரைத்தபின்
....ஆவதைச் சொல்கின்றேன்
என்னாகும் பார்ப்போம் இனி
(9)

✍️....... நானும் தங்கையும்

குறிப்பு: இங்கே கரு என்பது கற்பனையே. ஆமாம் சொல்லிப்புட்டேன்

No comments: