16/03/2022

காகிதம்

 


கதையா? கவிதையா?
எதாயிருந்தால் என்ன?
கழுதைகளின் தேவை
காகிதம்தான்!
 
கடவுளா? கவர்ச்சியா?
எதாயிருந்தால் என்ன?
மாடுகளின் தேவை
சுவரொட்டிதான்!
 
தமிழா? ஆங்கிலமா?
எதாயிருந்தால் என்ன?
கடைகளின் தேவை
பொட்டலம்போடத்தான்!
 
டப்பாவிலா? ரோலரிலா?
எங்கேயிருந்தால் என்ன?
கழிப்பறையின் தேவை
துடைத்தெறியத்தான்!
 
✍️செ. இராசா
 
(தயவுகூர்ந்து கவிதையாய் மட்டும் பார்க்க வேண்டுகிறேன்🙏🙏🙏)

No comments: