12/03/2022

இஸ்லாமியப் பாடல்- - லாஹிலாஹா இல்லல்லாஹ் முகம்மதூர் ரசூலுல்லா

 


லாஹிலாஹா இல்லல்லாஹ்
முகம்மதூர் ரசூலுல்லா...(2)
 
சமத்துவத்தைப் போற்றுகின்ற இஸ்லாம் இஸ்லாம்!
சாதியத்தை வேரறுத்த இஸ்லாம் இஸ்லாம்!
ஓரிறைவன் கொள்கைகொண்ட இஸ்லாம் இஸ்லாம்!
உய்யவழி காட்டுகின்ற இஸ்லாம் இஸ்லாம்! 
 
தொழுகையைந்தும் கடமையென்ற
இஸ்லாம் இஸ்லாம்!
தூயநெஞ்சில் நோன்புவைக்கும் இஸ்லாம் இஸ்லாம்!
ஏழைகாக்க ஜகாத்தந்த இஸ்லாம் இஸ்லாம்!
இயன்றால்ஹஜ் கடமையென்ற இஸ்லாம் இஸ்லாம்!
 
உலகமெங்கும் பரவுகின்ற இஸ்லாம் இஸ்லாம்!
உரிமைகளை வழங்குகின்ற இஸ்லாம் இஸ்லாம்!
மதுவிலக்கைக் கொண்டுவந்த இஸ்லாம் இஸ்லாம்!
விதவைமண வாழ்வுதந்த இஸ்லாம் இஸ்லாம்!
 
இறைவனவன் சாட்சிவைத்த இஸ்லாம் இஸ்லாம்!
மறையிலதை சொல்லிவைத்த இஸ்லாம் இஸ்லாம்!
இம்மைமறுமை முறைமைசொன்ன இஸ்லாம் இஸ்லாம்!
நன்மைதீமை உண்மைசொன்ன இஸ்லாம் இஸ்லாம்!
 
✍️செ. இராசா

No comments: