12/08/2021

விடியல் வருன்னு சொன்னாங்க ...எப்ப வரும் கேளுங்கோ?!

 


லைக்கு வல்லை கமெண்டு வல்லை
அதுக்கு என்னங்கோ?
சோறு துண்ண துட்டு வல்லை
வழியச் சொல்லுங்கோ...

பார்க்கு இல்லை பீச்சு இல்லை
பரவா இல்லீங்கோ
பார்க்க ஒரு நாதியில்லை
பொழப்பப் பாருங்கோ

கொரானா பூச்சீங்கோ
....கொடுமை கட்டுதுங்கோ
Part- one Part two ங்கோ
.... Version காட்டுதுங்கோ...
ஆனு லைனில் கிளாசுங்கோ
...அள்ளுறாங்க பீசுங்கோ
லேபர் எங்களைப் பாருங்கோ
...லேசு இல்லை வாழ்வுங்கோ...

விடியல் வருன்னு சொன்னாங்க
...எப்ப வரும் கேளுங்கோ?!

✍️செ. இராசா

கொரொனா பூச்சி- வார்த்தை உபயம் M Sekar Appa அக்கா 🙏

No comments: