18/05/2021

என்று தணியும் இந்தக் கொரோனா வேகம்?

என்று தணியும் இந்தக் கொரோனா வேகம்?
என்று தோன்றும் எங்கள் சுதந்திர காலம்?
இன்னலில் எத்தனை உயிர்களும் போகும்?
என்னதான் செய்கிறான் ஆண்டவன் இன்னும்?

இன்றே இவ்விடம் வந்திட வேண்டும்!
எங்களின் ஆக்ஸிஜன் தந்திட வேண்டும்!
இன்னமும் இன்னமும் தாமதம் ஆனால்
எங்கிலும் உன்னையும் நீக்கிட வேண்டும்!

No comments: