24/08/2018

இந்தியா வளர்கிறது



கிழிந்த தார்ச்சாலையில் உலவும்
கடனூர்திகள் சொல்கிறது
இந்திய வளர்ச்சியை...

பணமில்லாது சிரிக்கும்
தானியங்கிகள் சொல்கிறது
இந்திய வளர்ச்சியை...

மாணவர்களே இல்லாத
அரசுப்பள்ளிகள் சொல்கிறது
இந்திய வளர்ச்சியை...

வேகமாய்ப் பெருகும்
மதுஆலைகள் சொல்கிறது
இந்திய வளர்ச்சியை...

டாலருக்கு நிகரான
ரூபாய் சொல்கிறது
இந்திய வளர்ச்சியை...

ஆம்...

இந்தியா வளர்கிறது...

No comments: