26/02/2019

உயிர்பெற்ற தமிழரின் பாட்டு--பாரதியின் ஒரு பாட்டே போதும்



முக்தியும் ஞானமும் சொல்பவர்கள் - நம்
மக்களின் மொழியினில் சொல்வதில்லை!
உலகில் சிலபேர் சொன்னாலும்- அவர்
உலகியல் உண்மையைச் சொல்வதில்லை!

எப்படிச் சொல்வேன் பாரதியை- அவன்
எப்பவும் இதிலே விதி விலக்கே!
எப்படிப் புகழ்வேன் மா கவியை-அவன்
எப்பவும் நமக்கு விதி விளக்கே!

ஆயிரம் நூல்களின் ஞானம்- ஒரு
ஆதவன் பாட்டிலே கண்டேன்!
பாயிரம் போலவே நானும்- இந்த
பாடலை இங்கே தந்தேன்!

உயிர்பெற்ற தமிழரின் பாட்டு- அது
உயர்புகழ் கவிஞனின் பாட்டு!
உயிர்பெரும் முக்தியின் பாட்டு- அது
உயர்வினைத் தருகிற பாட்டு!

---இராசா--
******************************************************
அன்பு நண்பர்களே,

நாம் அனைத்தையும் அறிந்து கொள்ள, “உயிர்பெற்ற தமிழரின் பாட்டு" என்ற பாரதியின் ஒரு பாட்டே போதும்.

சாதிய சவுக்கடியில் தொடங்கி, புராணங்களின் கட்டுக்கதைகளை விளக்கி, வேதங்கள் செய்த பிரிவினையை எடுத்துசொல்லி, உண்மையில் யார் மேலோன் என்று சொன்ன விதம் அருமையோ அருமை. (வையகம் காப்பவரோ அல்லது வாழைப்பழக் கடை நடத்துபவரோ உண்மை சொல்பவரே மேலோர் என்று சொல்கின்றார்)

கடினமான வார்த்தைகளின் எளிதான விளக்கங்களைப் பாருங்களேன்:

தவம்- உண்மைகள் கூறி இனியதைச் செய்தாலே போதும்
யோகி- நலம் தர உழைப்பவன் யோகி
யோகம்- ஊருக்கு உழைத்திடல் யோகம்
யாகம்- பிறருக்கு வருந்துதல் யாகம்
ஞானம்- போரில் நின்றாலும் பொங்கிடா அமைதி ஞானம்
பரம்பொருள்- எங்கும் இருக்கும் அறிவு பரம்பொருள்
முக்தி- இன்பம், துன்பம், வெறுமை மூன்றையும் ஏற்று நடக்கும் பக்குவமே முக்தி நிலை.

அது மட்டுமா....இன்னும் நிறைய உள்ளது.

No comments: