08/03/2018

மகளிர் தின வாழ்த்துகள்





கடைசி நிமிடம்வரை
கரைந்துருகும் பெண்ணினமே!
மெச்சிடும் தியாகத்திலே
மெழுகுவர்த்தி உன்னினமே!

உழைத்து உழைத்தேதான்
உயிரைவிடும் பெண்ணினமே!
தீபத்தை ஏற்றுகின்ற
தீக்குச்சியும் உன்னினமே!

கருவின் திருஉருவை
காக்கின்ற பெண்ணினமே!
கருணை பொழிவதிலே
கடவுளும் உன்னினமே!

No comments: