19/03/2018

நண்பரின் புகழாரம்



# இப்பதிவு தேவையா?
தேவையே!!!!
எவ்ளோ நல்ல விடயங்களால்
நறுமணம் வீசும்
முகநூலில்...
ஒருவர் மற்றொருவரை
பாராட்டல்
மிக அரிதாகவே...
வருத்தமான விடயமாய்!
நான்கூட
நல்ல கவிஞர்களின்
கவிதைகளால் ஈர்க்கப்பட்டு...
தானாய் முன்வந்து
ஊக்கமூட்டங்கள் செய்வேன்...
ஆனால் 90% பேர்...
அவர்கள்
படைப்புகளை பதிவிடலில்
காட்டும் அக்கறையை...
பிறர்கவனித்தலை
புறக்கணிக்கின்றனர்...
அதனால் வெறுப்புற்று,
பலரின் தொடர்பு
எல்லைகளைத் தொலைத்துள்ளேன்...


ஆக
என்ன சொல்ல வருகிறேன் எனில்...
நேரமில்லை
என்று சாக்கு சொல்லாதீர்...
தயவு செய்து
தவறுகளை சுட்டுங்கள்...
நல்லவற்றை
மனம்திறந்து பாராட்டுங்கள்
நட்பூக்களே!


இவ்வகையில்...
இன்று
எனக்கொரு சிறந்தநாள்!
தமிழ்ப்பட்டறை
நிர்வாகிகளில் ஒருவரும்...
நல்ல கவிஞருமான...
ராஜா மாணிக்கம்...
என கவிதைகளை
பாராட்டி பின்னூட்டமிட்டார்...
பெருமகிழ்வில் நான்!
இதென்ன விளம்பரம்???
புரிகிறது...
அப்படியாவது
ஒரே ஒருவரேனும்...
மற்றவரை பாராட்ட
முன்வரவேண்டும்
என்ற உத்வேகம் கொள்ளவே!
தவறாயிருப்பின்
மன்னிக்கவும் நட்பூக்களே!

# ராஜூ ஆரோக்கியசாமி

--------------------------------
கவித் தென்றல் அனுராதா கட்டபொம்மன் Raja Manickam ஒரு சிறந்த பண்பாளர். அவரை பாராட்டுவது தகும். எனக்குப் பின்னூட்டமிடுபவர்கள் பலர் படைப்பை நான் பார்ப்பதில்லை என்பது உண்மையே. நான் ஒப்புக் கொண்ட பல விஷயங்களில் - இலக்கணம் எழுதுவது உட்பட - என் நேரம் முழுதும் செலவாகி விடுகிறது. அது இல்லாமல் ஒரு நாளைக்கு சுமார் 50 தகவல்களுக்குக் குறையாமல் உள் பெட்டிக்கு வருகிறது. அவைகளையும் என்னால் கவனிக்க முடியவில்லை. என்னால் Raja Manickam போல் இருக்க முடிய வில்லையே என்ற வருத்தம் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம் பொதுப் பதிவுகளைப் பார்க்கிறேன். அப்போது என் மனதைக் கவரும் வரிகளுக்குப் பின்னூட்டமிடாமல் இருப்பதில்லை. இன்று இந்தப் பதிவு கண்ணில் பட்டு என் கருத்தைக் கவர்ந்தது. பின்னூட்டமிட்டிருக்கிறேன். எல்லா பதிவுகளுக்கும் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. அப்படி பின்னூட்டமிட எனக்கு நாளைக்கு 72 மணி நேரம் வேண்டும். மேலும், நான் எதையும் எழுத முடியாது. மிக, மிக வருந்துகிறேன். அன்புடன் ''அகன்''...............................

 
நான்: 

தாங்கள் நேரம் ஒதுக்கி அருமையான மற்றும் ஆழமான பதிவு எழுதியதுகண்டு நான் மிகவும் மனம் மகிழ்கிறேன் ஐயா....

தங்களைத் தன்குருவாக பாவிக்கும் எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.....


தாங்கள் நடுவராகக் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் திருத்துவதும் தட்டிக்கொடுப்பதும் மிகப்பெரிய வேலை......
நான் அதைக்கண்டு வியக்கின்றேன்...

முகநூலில் இலவசமாக நிறைய விடயங்களைத் தாங்கள் கற்றுக்கொடுப்பது மிகப்பெரிய சேவை.

இதற்கிடையில் இந்தப்பதிவிற்கும் தாங்கள் நேரம் ஒதுக்கி பின்னூட்டம் இட்டமையில் மிகவும் மனம் மகிழ்கின்றோம்.

நன்றி ஐயா...

(நன்றிகள் அல்ல என்று தாங்கள் கற்றுக்கொடுத்தது. தங்களைப் பார்த்து வளரும் ஏகலைவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பணிவுடன் கூறிக்கொள்கிறேன் ஐயா)



கவித் தென்றல் அனுராதா கட்டபொம்மன் இலக்கணத்தை எளிமையாக்கவும், நிறைய எடுத்துக் காட்டுகளுடன் எழுதவும் ஒரு பதிவுக்கு குறைந்தது 4 நாட்களாவது பிடிக்கிறது. இதற்கிடையில் மனதில் ஊறும் கற்பனைகளை இறைத்துக் கவிதையாக்கிப் பதிவிட்டு என் மொழிவளம் மற்றும் கவி வளம் இரண்டையும் நிலை நிறுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. சக படைப்பாளிகளின் ஆவல் எனக்கும் புரிகிறது. என்னால் முடியவில்லை என்ற ஆதங்கமும் இருக்கிறது. என்ன செய்ய?

 

No comments: