20/03/2018

அம்மன் பட்டி-2


 
செம்மை குறையாத
சிவகங்கைச் சீமையில
அன்பு குறையாத
அம்மன்பட்டி கிராமமுங்க....

என்னப்பா ராசான்னு
எல்லோரும் அழைப்பாக...
சூதுவாது இல்லாமல்
சொந்தமாவே நினைப்பாக...

வீட்டுக்கு ஒருத்தருன்னு
வெளிநாட்டில் இருப்பாக...
எப்போதோ ஒருமுறைதான்
ஊருக்கு வருவாக....

வரும்போது எல்லோரும்
வளமாத்தான் வருவாக....
வந்தவேலை முடிஞ்சதுன்னா...
வந்தவழி போவாக...

வானம் பாத்த பூமியிலே
வாழவழி இல்லேன்னு
காடுபோகும் காலம்வரை
கடைசிவரை உழைப்பாக....

சாதிமதம் பார்க்காமல்
சமத்துவமா வாழ்வாக...
பஞ்சாயத்துத் தேர்தல் மட்டும்
பிணக்கில் சிலர் இருப்பாக...

மத்தபடி எல்லோருமே
மனிதநேய தெய்வமுங்க....
எந்த ஊரு போனாலும்
எங்க ஊரே சிறப்புங்க...

கலக்கலாய் நடிக்கின்ற
கூல் சுரேசு ஊருங்க (Cool Suresh)
நினைத்ததைக் கிறுக்குகின்ற
நானும் அந்த ஊருங்க...

சொந்தவூர நினைச்சாலே
சிந்தையெல்லாம் குளிருதுங்க.....
சொந்தமான ஊரு சனம்
எந்தன் முன்னே தெரியுதுங்க...

—-செ. இராசா—-

(ஊரைப்பற்றி எழுதச்சொன்ன தம்பி Raja Sumithra விற்கும் திரைத்துறையில் வளர்ந்துவரும் மாப்பிள்ளை சுரேஷிற்கும் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்

No comments: