01/04/2022

சிலம்பம்

 


வெற்றி எங்கள் மூச்சு- தமிழ்
வீரம் எங்கள் பேச்சு...
குற்ற நெஞ்சை நீக்கு- இல்லைக்
கோலை ஏந்தித் தாக்கு...

சிலம்பும் ஓசை கேட்டு- அதில்
கிழம்பும் லெட்சம் பாட்டு...
கழியின் தாளம் சேர்த்து- அடி
கலந்து கட்டும் கூத்து...

உலகின் மூத்த கலையில்
.....உயர்ந்த கலையே சிலம்பம்!
உயிரைக் காக்கும் வகையில்
‌‌.....முதலில் பிறந்த சிலம்பம்!
விலங்கு நோக்கு முறையில்
.....வரிசை அமைத்த சிலம்பம்!
வியந்து நோக்கும் முறையில்
‌....விரிந்து விளங்கும் சிலம்பம்!

டக்கட டக்கட
டக்கட டக்கட
டக்கட டக்கட சிலம்பம்
டக்கட டக்கட
டக்கட டக்கட
டக்கு டக்கட சிலம்பம்...

No comments: