21/01/2019

விழி பேசும் மொழிகள்


கண்ணில் மொழிபேசி
நெஞ்சில் கவிபாடி
என்னில் கொண்டாயே காதல்-இன்று
என்னோடு எதனாலே மோதல்?!

எண்ண விதைதூவி
எங்கும் எனைப்பாவி
என்னில் விளைந்தாயே கதிராய்-இன்று
எங்கு போனாயோ புதிராய்?

கவியில் சீராகி
கட்டும் தளையாகி
ஒட்டி இருந்தாயே தமிழாய்-இன்று
வெட்டிக் கொண்டாயோ தனியாய்?!!

மதியில் ஒளியாகி
மனதில் ஒலியாகி
மயங்க வைத்தாயே இசையாய்-இன்று
மறைந்து போனாயோ இறையாய்?!

கண்ணில் மணியாகி
காட்சிப் பொருளாகி
எங்கும் தெரிந்தாயே உருவாய்-இன்று
என்னைச் செய்தாயே குருடாய்?!

No comments: