08/10/2022

உசரம் போக ஆசைவச்சா

 உசரம் போக ஆசைவச்சா
....உழைக்க வேணுங்கோ
விசமம் செய்யும் மனசிருந்தா
.....விலகத் தோணுங்கோ- கீழ
.....விழுக வேணுங்கோ!

புடிக்கனுன்னு ஆசைவச்சா
....படிக்க வேணுங்கோ
படிக்குமுன்னே ஜெயிக்கனுன்னா
....கிழிஞ்சு போகுங்கோ- டவுசர்
....கிழிஞ்சு போகுங்கோ!

இடையில் வழிய அடைச்சுப்புட்டு
.....எதையோ நெனச்சு நடக்கிற..
கிடைக்கும் கொசுற மதிச்சுக்கிட்டு
...கொடுக்கும் இறையத் துறக்குற...
அடிக்கும் சரக்க நெனச்சுக்கிட்டு
......அகத்தில் பகடை உருட்டுற..
துடிக்கும் உறவை தொலைச்சுப்புட்டு
.....துவண்டு மறைஞ்சு கிடக்கிற..

போடா டேய்...

No comments: