20/10/2022

அவளை மறக்கத்தான்

 


அவளை மறக்கத்தான்
..........அங்கிருந்து வந்தேன்
அவளை மறக்கவில்லை!
...........ஆமாம்- இவள்யார்?
இவளை மறக்கநான்
............இங்கிருந்து போனால்
எவளை மறப்பேன்
.............இயம்பு?
 
அவளை மறக்கவா?- இல்லை
இவளை மறக்கவா?
அவளை நினைக்கவா-இல்லை
இவளை நினைக்கவா?
 
அவளை மறக்க இவளை நினைச்சு
இவளை மறக்க அவளை நினைச்சு
கவலை பெருக்க கவலை பெருக்க
எவளை மறக்க? எவளை நினைக்க?
எவளை நினைக்க? எவளை மறக்க?
ஐயோ........
 
......அவளை மறக்கவா?

No comments: