26/10/2022

சிறுபொறி போதும்

 

சிறுபொறி போதும் வெடிவெடிக்க
.....சிதறிடும் பொறியில் வெடித்துவிடு!
சிறுதுளி போதும் உருவெடுக்க
.......சிந்திடும் துளியில் உயிர்த்துவிடு!
சிறுகவி போதும் சிறகடிக்க
......சிறகினை உயர்த்திப் பறந்துவிடு!
சிறுநகை போதும் களங்கடிக்க
.......சிரிப்புடன் எதிரியைக் கடந்துவிடு!

No comments: