25/07/2021

பாவம்தான் மணிப்புறா

 




உச்சி வெயில்
42 டிகிரி செல்சியஸ்...
கொதிக்கும் பாலைவனம்
நிற்கவும் நிழலில்லா சூழல்
கூடுகட்டவும் வசதியில்லை
குடும்பம் நடத்தவும் வசதியில்லை
எப்படி முட்டையை அடைகாப்பது?!
இப்படியே விட்டால் அவிஞ்சு போகாதா?!
எத்தனை நாட்களில் குஞ்சு வரும்?
குஞ்சு பொரிந்தால் எப்படி காப்பது?
ஓ...
உண்மையில் பாவம்தான் மணிப்புறா
யோசித்தவாறே நகர்ந்தான்
ஏசி பட்டனை அழுத்தியவாறே..
.
✍️செ. இராசா

No comments: