01/12/2020

அறியாத மனசு

 




#மின்கலம் இல்லாக் கணிப்பொறியாய்
முடங்கிப் போனேன் அறிவாயா?

#அருகலை அறுந்த கைப்பேசியாய்
அடங்கிப் போனேன் அறிவாயா?

#புலனம் காணா குழுமங்களாய்ப்
புழுங்கிப் போனேன் அறிவாயா?

#முகநூல் செல்லாக் கவிஞர்களாய்
இன்னும் முயல்கிறேன் அறிவாயா?

அறிந்தால்; இந்த
#இயங்கலை தேடும் இளைஞனின்
#இணையத் தொடர்பில் வருவாயா?!!

💐செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_138
#அறியாத_மனசு

மின்கலம்- Battery
அருகலை- WIFI
புலனம்- WhatsApp
முகநூல்- Facebook
இயங்கலை- Online
இணையம்- Internet

No comments: