13/05/2018

அன்னையர் தின வாழ்த்துகள்---தீபா மோகன் ராஜ்

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் கூறிக்கொண்டு, கருணையின் வடிவமாகத்திகழும் சகோதரி தீபா மோகன் ராஜ் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.
அவர்களை அறிமுகப்படுத்திய அக்கா Agalya Ravi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(கண்ணுக்குத் தெரியும் கடவுளின் வடிவமான அன்னையை வணங்குவோம் தீபா மோகன்ராஜ்
*****************
“தீபா”
குன்றின்மேல் தீபமாய்
குன்றாத ஒளிகொண்டு
அன்புச் சுடர்விடும்
அற்புத அன்னைக்கு
எத்தனை அழகான பெயர்!!
எவ்வளவு பொருத்தமான பெயர்?!!

ஆம்.... அதிசயம்தான்

குறைவில்லா மனத்தோடு
நிறைவான குணத்தோடு
அறுபத்து ஐவரோடு
அவர்களோடு ஒருவராக
உறவின் உரமாக
உழைக்கின்ற உத்தமரே தீபா...

தான்பெற்றிடாப் பிள்ளைகள்
நூற்று முப்பத்து ஐவரையும்
தாய்கொண்ட அன்போடு
தாங்கிநிற்கும் பெருந்தகையே...தீபா..

சிகரமாய்த் திகழ்கின்ற
சிறப்புப் பள்ளி நிறுவனரே தீபா....

ஆட்டிசம் என்றும்
டவுன்ஸ் சிண்டரோம் என்றும்
ஏதேதோ பெயர்கொண்டு
எவரிங்கே வந்தாலும்
அத்தனை குழந்தைகளையும்
அரவணைக்கும் நற்குணவதியே...தீபா

ஈன்றதோ இரு மலர்கள்
ஈட்டியதோ பல மலர்கள்....

அன்றொரு நாள்
இரண்டாம் மலருக்கு
மூன்றாம் வயதில்வந்த குறைபாடு..
கிரெனியோஸ்டெனோசிஸ்
மூளை வளர்வதற்குள்
மூடியதாம் மண்டையோடு
மூளையில் குறைபாடு.

அய்யோ... என்ன இது?!
பதறினார்.... பரிதவித்தார்...

குறை களைய ஆளில்லை...
குறை நீக்க இடமில்லை

தன்னைத் தானே தேற்றினார்
தனக்கான பாதை கண்டார்

பெற்றோருக்கும் தீபமானர்
மற்றோருக்கும் தாயானார்...

வணங்கியே அவரை
வளம்பெற வாழ்த்துவோம்...

https://tamil.yourstory.com/…/37d542ea…/deepak-mohanraj-39-s

தமிழ் கவிதை தந்த
சகோதரர் Raja Manickam
அவர்களுக்கு நன்றி🙏

 https://www.facebook.com/agalya.sapphire/posts/1890027797698649🙏🙏🙏)
பிற்சேர்க்கை:
*************
தங்களுடை சேவை மிகவும் மகத்தானது.
எண்ணம் சொல் செயல் மூன்றும் ஒன்றானவர்களால் மட்டுமே இவ்வளவு பெரிய அறப்பணி செய்ய முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

“தெய்வம் பூமிக்கு வருவதில்லை தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்....” என்று வரும் பாடல் வரிகளே எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த பாடல் வரிகளோடு Agalya Ravi அக்காவின் வரிகளையும் இணைத்து மாற்றினால்

இதோ இப்படி எழுதலாம்....

தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்...
தாயில் சிறந்தது எதுவுமில்லை....
தாயில் சிறந்தத் தாயாக
அவனே தங்களுள் இறங்கி விட்டான்...

வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்

No comments: