18/05/2018

அட்டைப் படம்

அட்டைப் படம்
***************
“நான் எனும் மண்குடம்”
என் கவிதைத் தலைமகனுக்கு
நான் அன்போடு சூட்டிய பெயர்.

அரங்கேற்றம் ஏறுபவனை
அகிலமே அறிவதற்கு
அட்டைப்பட ஆடை செய்ய
அளவில்லா ஆசை கொண்டேன்...

கடல் நீரில் மீன்களோடு
மண் பானைக் குடங்களோடு
கருத்து சொல்லும் ஓவியமாய்
ஆடையொன்று நான் செய்தேன்!

நீர்நிலையில் ஒரு பானை
தனிமையிலே தவிப்போடு
உருகுகின்ற ஓவியமாய்
உடை செய்தார் அன்பு நண்பர்!
செந்தில் குமரன் அவர் பெயர்!

கண்ணகியின் சிலை போன்றும்
கர்வமுள்ள பெண் போன்றும்
கவிதை மிகு பல படங்கள்
கனிவோடு அனுப்பி வைத்தார்
அடியேனின் ஆலோசகர்
அறிவுமிகு பேராசிரியர்
அவர் பெயரே கிருஷ்ணசாமி!

இளங்கலை தமிழ் படிக்கும்
இரண்டாமாண்டு மாணவர்கள்
இருவராய் சேர்ந்து செய்த
அழகான புகைப்படங்கள்
அடுத்தடுத்து வந்ததிலே
அக மகிழ்ந்து போனேன் நான்!

அன்போடு தமிழ்கொஞ்சும்
அன்னைத் தமிழ் யாசகனாய்
இணையத்தில் உலாவரும்
இளஞ்கவிஞர் “அய்யன்” உடன்
இணைந்தே பயணித்து
பல படங்கள் அனுப்பி வைத்த
வருங்கால வீரனாக
இராணுவத்தில் வர இருக்கும்
சுந்தர இளைஞனவன்
“சுந்தர பாண்டி” பெயருடையோன்!

அலுவலகப் பணியாளர்
அன்பு நண்பர் செல்வத்தின்
நண்பரின் நண்பரான
நல்ல ஓவிய நண்பரவர்
“ராஜா” பெயருடையார்!

ஆண் படம் வேண்டாமென்றும்
பெண் படமே வேண்டுமென்றும்
ஆலோசகர் சொல்லியதால்
அழகுள்ள பெண்தேடி
அடியேன் நான் நிற்கையிலே
அன்புத் தம்பியான
இம்ரானின் சொல் கேட்டு
நான் சென்று அணுகியதோ
தமிழ்நாட்டுப் பேரழகி
தன்னடக்க குண அழகி
“ஷாலி நிவேகாஸ்” பெயருடையாள்...

ஆமாம்....யார் அந்தப் பேரழகி?!
2018ல் தமிழ்நாட்டின் அழகியாக
இரண்டாமிடம் வந்த நபர்!
2018ல் தென்னிந்திய அழகிகளில்
சில சிறப்பு பட்டம் பெற்ற நபர்!
வணக்கம் தமிழகத்தை
வழி நடத்தும் நிருபர் அவர்!

அவரின் தந்தை “நாகராஜன்’
அடியேனின் நண்பராவார்!
அன்னைத் தமிழ் சொல்லெடுத்து
அனைவரையும் வாழ்த்துகின்றேன்!
அடியேனின் கரமுயரத்தி
அகம் மகிழ வணங்குகின்றேன்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

நன்றிக்குரியவர்கள்
********************
1. திரு. Senthil Kumaran , Doha
2. திரு. Krishnasamy Kalakad , Doha
3. திரு. Ayan Tamil, திருப்புவனம்
4. திரு. சுந்தரபாண்டியன். திருப்புவனம்
5. திரு. ராஜா, சென்னை (Selvam Chandran)
6. Model: Shali Nivekas
7. Photography: Karthick balaji-Pix momentos
8. MUA: Preethi Makeup
9. Sponser :Mabia boutique
10. Designed by Priya Regan
11. Jewellery sponsor: Vivah Jewellery
12. Special thanks to Mr.K.Nagarajan for your boundless support.




















No comments: