10/11/2022

ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல்

 



[எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இன்னும் பதில்தான் வரவில்லை. அந்தக் கேள்வி இதுதான்]
 
ஐயா வணக்கம்!
எனக்கு, நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம்! இதுபற்றி எவ்வளவோ தேடினாலும் விடைதான் கிடைக்கவில்லை. கண்டிப்பாக தங்களால் (மட்டுமே) முடியுமென்றே, இந்த மின்னஞ்சலை எழுதுகின்றேன்.
 
இந்த சாதி, இந்தப் பிரிவுக்குள்தான் வருகிறது என்பதை நம் சுதந்திர இந்தியாவில், ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்தவர்கள் யார் யார்? எப்போது? அந்த அமைப்பில் எத்தனை பேர் இருந்தார்கள்? அவர்களுக்கெப்படி இந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் தெரியும்? உதாரணமாக, வெள்ளாளர் இனத்தில், சைவ வெள்ளாளர்கள் OC என்றும், வீரகொடி வெள்ளாளர் BC என்றும், இசை வெள்ளாளர் MBC என்றெல்லாம் வகுத்தது யார்? இப்படி ஒவ்வொரு சாதிக்குள்ளும் எத்தனையோ பிரிவுகள் உள்ளது. இதையெல்லாம் யார் வகுத்தார்கள்? எப்படி வகுத்தார்கள்? அவர்கள் வகுத்தவைகள் எல்லாம் சரியா?
 
இன்னும் இந்த சாதியக்கட்டுகள் இருப்பதை எப்படி மாற்றலாம் என்னும் திட்டங்கள் எல்லாம் நம் அரசியல் அமைப்பில் உள்ளதா? அப்படி இருந்தால், ஏன் கட்சிப் படிவங்களில் சாதிய ஓட்டுக்கள் பற்றியெல்லாம் கேட்கும்படியான கேள்விகள் உள்ளன? இன்னும் சாதி பார்த்தே வேட்பாளர்கள் நிறுத்தும் போக்கைத் தாங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? உண்மையில் நம் இந்தியா அல்லது தமிழகம் சாதியத்தில் இருந்து வெளிவரும் சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா? இந்நிலை மாற வாய்ப்புள்ளதா?
தயவுகூர்ந்து விளக்க வேண்டுகிறேன்!
 
இப்படிக்கு,
செ. இராசமாணிக்கம்.
[விடைதேடும் கேள்விகள்...விடை இருந்தால் கூறுங்கள்]

No comments: