03/01/2021

ஆங்கிலத்தில் பிழைவிட்டால்

 

ஆங்கிலத்தில் பிழைவிட்டால் பதறுகின்ற நண்பர்கள் தமிழில் பிழைவிட்டால் கண்டுகொள்வதில்லையே ஏன்?

ஒரு காணொளியில் ஒரே ஒரு எழுத்து தவறானதற்கு எத்தனை அழைப்புகள்?! இருக்கட்டும், உங்களுக்கு சில கேள்விகள்;
 
1. முன்னூறு வருடங்களுக்கு முந்தைய ஆங்கிலத்தை நம்மால் படிக்க முடியுமா? ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் இப்போது படித்தாலும் புரிகின்றதே...
எடுத்துக்காட்டு:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)
இதில் எந்த வார்த்தைப் புரியவில்லை என்று சொல்லுங்கள்?
 
2. மொழிக்கு ஒலிவடிவம் முதன்மையானதா? இல்லை வரி வடிவம் முதன்மையானதா?. ஆனால் ஆங்கிலத்தில் Knowledge என்று சொல்லிவிட்டு K silent என்கிறார்களே இது அபத்தம் இல்லையா? 
 
3. மொழி சீரமைப்பு நடவடிக்கைக் குழு என்று ஏதேனும் ஆங்கிலத்தில் உள்ளதா?
 
4. அவர்களிடம் காலத்தை உணர்த்தும் இலக்கணம் எளிதாக உள்ளதா? அதை அனைவரும் பின்பற்றுகிறார்களா?
 
5. ஆங்கிலத்தை உலக அளவில் ஒரு பொது மொழியாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை ஒரு கௌரமாக எல்லாம் ஏற்க முடியாது. எனில் பிழை விடலாமா என்றால், தட்டச்சுப் பிழை தவறுதான், ஆனால் இதே துடிப்பு தமிழுக்காக இல்லையே ஏன்?
 
செ. இராசா

No comments: