16/12/2024

கண்கவர் இளநீர்

 



நன்றாகச் சீவி
நளின உடையுடுத்தி
முன்னே தெரியாமல்
மூடிவிட்டுச்- சின்னதாய்க்
கண்ட உடனேயே
கவ்வுகின்ற பெண்தானோ?
கண்கவர் இவ்விளநீர்
காண்!

✍️செ. இராசா

(இளநீருக்குப் போட்ட உடையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் சுவைதான் சரி இல்லை. வியட்நாம் இளநீர்.... மக்களே...நாம் கூட இப்படி டிசைன்செய்து வித்தா நல்லாதான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆமாம்..அப்பவாவது குடிப்பாங்கல்ல)

யாரென்ன சொன்னாலும் திமுகனா கெத்துங்க

 

யாரு யாரு வருவதாரு
இதில என்ன டௌட்டு
வேற யாரு சின்னவரு
வருவதுதான கரைட்டு
ஊரி ஊரி வருவதுதான்
எதிரணியின் ரூட்டு
வேற மாறி வெல்வதுதான்
தளபதியார் வெயிட்டு
யாரென்ன சொன்னாலும்
திமுகனா கெத்துங்க
யாரெதிர் நின்னாலும்
டெபாசிட்டே டௌட்டுங்க
கலைஞரு பேரெனெங்க
உதயநிதி யாருங்க
அமைச்சரா மின்னியிங்க
கலக்குறாருப் பாருங்க..
அதிரடியாகப்பேசி
அசத்துறது யாருங்க
தளபதி அனுப்பிவச்ச
உதயநிதி அண்ணங்க
சாதிமதத்தைச் சொல்லி பிரிக்கிறது யாருங்க?
நீதிபுகட்ட எண்ணி போடவேணும் ஓட்டுங்க...
மோதிஜெயிக்க இங்கே பேசுவதைக் கேளுங்க..
நீதிஜெயிக்க எண்ணி நம்மயாரு காட்டுங்க....
யாரென்ன சொன்னாலும்
திமுகனா கெத்துங்க
யாரெதிர் நின்னாலும்
டெபாசிட்டே டௌட்டுங்க
தமிழினம் வாழ்த்துகின்றத்
தங்கமகன் யாருங்க?
தென்னகம் பெருமைகொள்ளும்
சிங்கமிவர் தானுங்க..
சென்னையில் வெற்றிகண்ட
உதயநிதி யாருங்க?
நம்மினம் நிமிரவச்ச
கழகத்தோட தூணுங்க...
மாநில உரிமை காக்க நாமவெல்ல வேணுங்க
மாறிடும் சூழ்நிலைய நினைச்சு வோட்டப் போடுங்க
நாட்டையே அடகுவச்ச மோசமான கூட்டங்க
நாமதான் தடுக்கவேணும் சின்னம் பார்த்து போடுங்க
....நம்ம சின்னம் பார்த்துப் போடுங்க!
யாரென்ன சொன்னாலும்
திமுகனா கெத்துங்க
யாரெதிர் நின்னாலும்
டெபாசிட்டே டௌட்டுங்க

15/12/2024

எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா

 

ஹேய்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக நம்மக் கட்சி வேணும்
தில்லு இருந்தா மோதிப் பாரு
உன்னால முடியாது தம்பி
அட நாதியத்துப் போகுதுபார்
தமிழ்நாட்டில் மலராம வெம்பி...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்..
தன் நேரத்தை எப்போதும் நமக்காகக் கொடுத்தது
கலைஞரின் மூளையப்பா.‌‌
அதைக் கொடுத்தாலும் அப்பப்போ மதிக்காம விட்டது
நாம்செஞ்ச பாவமப்பா........(1 × 2)
கலைஞர் விதைச்ச நிலம் பாரு
இப்போ முளைச்ச களைநூறு
தலைவர் வழியில் மகன்பாரு
களைய அறுக்க வருவாரு
தமிழ்நாட்டக் காக்கும் தலையாரு?
தமிழ்வாழ அரணா இருப்பாரு...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
சரணம்_2
அட.
நான் நீன்னா ஒட்டாது
நாமென்றால் ஒட்டும்னு.
கலைஞரய்யா சொன்னதுங்க
ஆட்சி
இருந்தாலும் உழைப்பாங்க
இழந்தாலும் உழைப்பாங்க
நாம்கண்டு கொண்டதுங்க
அண்ணா பெரியார் கொடுத்ததெல்லாம்
மானம் காக்கும் கொள்கை தானுங்க
ஸ்டாலின் ஐயா நினைப்பதெல்லாம்
யாவும் யார்க்கும் கிடைக்கவேணுங்க
தலைவர்
வாரி கொடுத்தத நினைச்சுப்பாரு
தொடர்ந்து ஆட்சி நடந்திட ஓட்டப்போடு
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக நம்மக் கட்சி வேணும்
தில்லு இருந்தா மோதிப் பாரு
உன்னால முடியாது தம்பி
அட நாதியத்துப் போகுதுபார்
தமிழ்நாட்டில் மலராம வெம்பி...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்..

14/12/2024

அனுபோகம் வேண்டுமா?

 


கரை வீணையை மீட்டி
அலை விரல்கள் எழுப்பும்
அற்புத சிம்பொனியில்
அணுஅணுவாய்க் கரைகின்ற
அந்த அனுபோகம் வேண்டுமா?
இதோ இந்தக்
கடலோரக் கவிதையை வாசியுங்கள்!

13/12/2024

குறள் அந்தாதி வெண்பாக்கள்


அடைமொழியின் உள்ளே அடைபட்டோம் என்றால்
தடைப்பட்டுப் போகும் தமிழ்.
(1)

தமிழை உயர்த்துவதாய் தம்பட்டம் போட்டுத்
தமிழால் உயர்கின்றார் தான்.
(2)

தான்தான் உயர்வென்று தற்பெருமை பேசினால்
சான்றோர்முன் தாழும் தரம்.
(3)

தரமில்லாச் செய்கை தரம்தாழ்த்தும் என்றும்
சிரமுயரச் செய்தால் சிறப்பு.
(4)

சிறந்தவராய் மாற சிலகாலம் ஆகும்
திறமை குறையாமல் தேடு.
(5)

தேடுகின்ற அத்தனையும் சேர்வதில்லை என்றாலும்
ஓடுகின்ற காலத்தில் ஓடு.
(6)

ஓடுகின்ற காலத்தில் ஓயாமல் ஓய்ந்துவிட்டால்
கேடுறும் வாழ்க்கைதான் தீர்வு .
(7)

தீர்வில் தெளிவோடு தேடுகின்ற ஓட்டத்தால்
யார்க்கும் எளிதாம் இலக்கு.
(8)

இலக்கின்றிப் போனால் எளிதும் அரிதாம்
இலக்கை முதலில் எழுது!
(9)

எழுத்தென்னும் ஆயுதத்தால் எண்ணத்தைக் கீறி
அழுத்தமுற வெற்றி அடை!
(10)

✍️செ. இராசா

10/12/2024

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா

 



பார்க்கப் பழகப்
.....பசுபோல் இருந்தாலும்
சேர்க்கை அழுக்கென்றால்
.....சேர்வதில்லை- தீர்க்கமுடன்
தன்னைப் பெரிதென்றே
......தானெங்கும் காட்டாத
இன்பக் கலிலே
......இவர்!

தேடல் ஒருபக்கம்
.......தேவை மறுபக்கம்
பாடல் பயணமெனப்
........பாடுபட்டே- ஓடுகின்ற
இன்பக் கலிலென்னும்
.......இன்னிசை வேந்தருக்கு
நண்பனாய் நான்தரும்
.......வாழ்த்து!

✍️செ. இராசா


அலைசூழ் உலகு

 

அலைசூழ்ந்ததே ஐயா - எங்கிலும்
அலை சூழ்ந்ததே
ஆதியில் ஆனதும் காண்கிற யாவிலும்
அலை சூழ்ந்ததே ஐயா- எங்கிலும்
அலைசூழ்ந்ததே- அந்த
ஆதியில் ஆனதும் காண்கின்ற யாவிலும்
அலைசூழ்ந்ததே.... ஐயா
ஜடப்பொருளாக அசையாமலே நிற்கும்
ஜடப்பொருளாக அசையாமலே நிற்கும்
யாதுமாயினுமதனுளே அணுவாகவே அதனாலயே- எங்கிலும்
அலைசூழ்ந்ததே....ஐயா

05/12/2024

வழிவிடு கருப்புசாமிக்காக ஒரு பாடல்

 



வழிவிடு கருப்புசாமி க்காக ஒரு பாடல்

பல்லவி
எத்தனையோ சாமி இருக்குது.....ஏ..
எங்கசாமி கருப்பனைப்போல்
குலசாமி எங்கே இருக்குது...

தகதகன்னு ஆடி வருகுது...ஏ.
வழிவிடும் கருப்புசாமி
தந்தத்தனத்தோம் பாடி வருகுது...

இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....

நம்ம குலம் காக்கனுன்னு
நம்ம குலம் காக்கனுன்னு
நாடி வாறான் கருப்புசாமி
உண்மை வெல்ல வேணுமுன்னு
ஓடி வாறான் கருப்புசாமி
வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடாl

சரணம் 1
பந்தளத்து ராசனுக்குப்
பதினெட்டாம்படி கருப்பன்..
ஐயனாரு அத்தனைக்கும்
அன்பா‌‌..வழி விடுங்கருப்பன்

பாட்டன் பூட்டன் ஓட்டன்வழி
பரன்பரைக்கே மூத்தவனே
காட்ட நாட்ட வீட்டயென்று
காத்துவரும் முதல் அரணே..

வட்ட வட்ட பொட்டு வச்சு வடிவழகா இருப்பவனே‌‌..
முட்ட முழி கண்ண வச்சு நகர்வலமா
வருபவனே..

இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....

வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடா

சரணம் 2
எல்லையில நிப்பவந்தான்
எங்ககுல கருப்புசாமி
தொல்லைகள தொலைப்பவன்தான்
எங்ககுல கருப்புசாமி

கச்சைமேல கச்சைகட்டி
ஆடிவாறான் கருப்புசாமி
சாட்டையத்தான் சுழட்டிக்கிட்டே
ஓடிவாறான் கருப்புசாமி

கொட்டு கொட்டி கொம்பூதி குலவையிட்டு கூப்பிடுவோம்
எட்டுக் கட்டில் பாட்டுக்கட்டி
இங்கேவரக் கூப்பிடுவோம்

இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....

வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடா

✍️செ. இராசா


03/12/2024

தற்பெருமை பாடித் .......ததிகிடத்தோம் போடுவதை

 

தற்பெருமை பாடித்
.......ததிகிடத்தோம் போடுவதைக்
கற்றவர்கள் வாழ்த்துவதா
.......கண்ணியம்?- உற்றுணர்ந்தே
தட்டிக் கொடுப்பதற்குத்
.......தட்டிக் கொடுத்துவிட்டுச்
சுட்டும் பிழையிருந்தால்
.......சுட்டு!

நான்சொன்னால் கேட்பரா
....நல்லதே ஆனாலும்
வான்புகழ் வள்ளுவனின்
...வாக்கொன்றே- சான்றாம்
பணியுமாம் என்றும்
.......பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை
....வியந்து!

✍️செ. இராசா

01/12/2024

வருவது வரும்வரை வரவு


வருவது வரும்வரை வரவு- பின்
வருவதில் கழிவது செலவு!
...வரவால் சிரிப்பதும்
...செலவால் அழுவதும்
புரிந்தும் புரியா நிகழ்வாகும்!

கடனுற வாழ்வது இழுக்கு- நம்
கடமையைப் புரிவது சிறப்பு!
....கடனாய்ச் சூழ்வதும்
....கடமையை மறப்பதும்
இருந்தும் இல்லாக் கணக்காகும்!

வாழ்க்கையொரு வாழும்கலை 
அறிந்தோர் வாழ்வே வாழ்வாகும்

கணம்கணம்நீ வாழ்ந்துவிட்டால்
கவிதை போன்றே இனிதாகும்.