28/04/2026

மாற்றம் தருமாமே ........நாலு!

 

கருத்துக் கணிப்பா?
.....கருத்துத் திணிப்பா?
வருமா? திரும்ப
.......வராதா? - ஒருவழியாய்
ஏற்றம் எவருக்கோ
.......ஏமாற்றம் யாருக்கோ?
மாற்றம் தருமாமே
........நாலு!?
✍️செ. இராசா
இந்த வெண்பாவில் ஈற்றடியில் ஒரு சிறப்பு உள்ளது. இருமுறை படிக்கவும்

24/04/2026

தற்பெருமை பாடும் சபை

 

தற்பெருமை பாடும் சபையென்று கண்டால்
....தள்ளியே நிற்க வேண்டும்!
கற்றவர்கள் பேசும் சபையென்று கண்டால்
....கண்ணியம் காக்க வேண்டும்!
அற்பர்கள் கூடும் அவையென்று கண்டால்‌
....அந்நியம் ஆக வேண்டும்!
உற்றவர்கள் சூழும் இடமென்று கண்டால்
.....உண்மையில் போக வேண்டும்!

அறியாமை

 

அறியாமை யாதெனெ ஆராயா தன்மை
அறியாமை என்றே அறிக- அறிந்தே
அறிந்ததாய்ப் பேசும் அறிவிலி கண்டால்
அறிந்ததைப் பேசா(து)அகல்.

21/04/2026

Costly கவிஞர்

 

Costly கவிஞர் கமல்ஹாசன்தான்...
ராஜ்யசபா சீட்டுன்னா சும்மாவா..
அவர்பாட்டுக்கு இருந்தவர
அவர் பாட்டுக்கு பாட வச்சுட்டாங்கல்ல...🤣🤣

20/04/2026

ஆவியில் வெந்தபின்னர்

 


ஆவியில் வெந்தபின்னர்
......அப்படியே போட்டறைத்துத்
தூவிடும் உப்பைத்
........துணையாக்கி- பாவித்தால்
நற்சுவையாய் நாவிற்கும்
.....நன்மருந்தாய் ஊனிற்கும்
அற்புதமாய் உள்ளதென்பீர்
.....ஆய்ந்து!

.✍️செ. இராசா

19/04/2026

Haiku

 

கருத்துக் கணிப்பு
கூடிக்கொண்டே போகிறது
YouTube Viewers
(1)
எவ்வளவு கிடைக்குமென
ஆர்வத்தைத் தூண்டுகிறது
பணப் பட்டுவாடா
(2)
தேர்தல் பரப்புரை
வாயடைக்க வைத்தது
தொண்டை வலி
(3)
✍️செ. இராசா

புறக்கணிப்பு

 

புறக்கணிப்பு செய்பவரை நீயும்
புறக்கணி..... ப்பூ‌...வென்று
அகக் கணிப்பு இல்லார்தான்
புறக் கணிப்பு செய்கின்றார்;
அது
கட்சிகளே நடத்தும்
கருத்துக் கணிப்பு போலதான்; அங்கே
அவரவர் கட்சிக்கே இடமுண்டு
அடுத்தவர்க்கு செய்வது புறக்கணிப்பே..
அறக்கணிப்பு இல்லாதோர்
புறக்கணிப்பு செய்தால்: அதைப்
புறக்கணிப்பாய்க் கருதாதே..
நல்லவேளை நேரம் மிச்சமென
உள்ளவேலை ஏதாவது செய்; அதுவுன்
உள்ளத்திற்கு உரம்போடும்!
புறக்கணிப்பு செய்தே
புலகாங்கிதம் அடைவோர்
ஒன்றை மறந்து விடுகின்றனர்
கால பூமராங்கில்
காணாமல் போகையில்
ஞாலமே புறக்கணிக்குமென்று...
எனில்;
புறக்கணிப்பை
புறக்கணிப்பு செய்வீர்; ஆனால்
புறக்கணிப்பு செய்வோரை
புறக்கணிப்பு செய்யாதீர்..
ஏன் தெரியுமா?
அவர் நாண நன்னயம் செய்யவே!
✍️செ. இராசா

17/04/2026

கானம்

 


பலகாலமாய் பலநேரமாய்
‌......படைப்போங்கிட நாளும்
விலகாமலே ஒருநோக்கிலே
......உருவாக்கிய கானம்!
அழகாகவே தெளிவாகவே
......புதிதாகவே யாவும்
இழப்பாயினும் வருந்தாமலே
......கொடுத்தேனதைப் பாரும்!
இறையோனவன் தருவானென
......நினைந்தேதரும் போதும்
முறையாயொரு பெரிதாயொரு
......பலனேயிலை ஏதும்!
குறைநீங்கிட நிறையோங்கிட
......தருவானெனில் லாபம்
முறையாகவே விரைவாகவே
......தருவேன்பல கானம்!
✍️செ. இராசா

16/04/2026

காஃபி

 


இதழ்களில் சூடேற்றி
நாவில் உறவாடி
உமிழ் நீரில் சங்கமித்து
துளித்துளியாய் இறங்கி...
ஆகா...
உற்சாக இன்பமது; ஆம்
உற்சாக இன்ப- மது!

15/04/2026

சேடப்பட்டி மணிமாறன்

 

போடு ஓட்டப் போடு- நம்மச்
சின்னம் பார்த்துப் போடு
யாரு அண்ணன் யாரு-மணி
மாறன் அண்ணன் பேரு
எளியோரின் நண்பரு
கனிவான மனிதரு
எப்போதும் நிற்பதாரு
இப்போதும் நம்மோட நிற்கிறாரு
தப்பாம தவறாம ஓட்டப்போடு
ஏ....
கடகடன்னு முடிச்சிடுவார் அண்ணன் வந்தாலே
தொகுதிக்காக உழைச்சிடுவார் சொல்லும் முன்னாலே
#சேடப்பட்டி_மணிமாறன் பேரைச் சொன்னாலே
தெரியாதவர் யாரிருக்கா தொகுதி உள்ளாரே
சரணம்:
ஓடோடி உழைச்சு
ஊரைத்தான் நினைச்சு
நமக்காக இங்கே நின்னதாரு?
கழகத்தின் மூச்சு
கருத்தான பேச்சு
அவர்போல அன்பான மனுசன்யாரு?
மக்கள் மனசத்தான் ஜெயிச்சதுபோல
தேர்தல் மன்றத்தில் ஜெயிக்கனும் நீங்க..
அன்பைப் பொழிவதில் தளபதி போல
விடியல் தொடர்ந்திட ஜெயிக்கனும் நீங்க
ஏ....
கடகடன்னு முடிச்சிடுவார் அண்ணன் வந்தாலே
தொகுதிக்காக உழைச்சிடுவார் சொல்லும் முன்னாலே
சேடப்பட்டி மணிமாறன் பேரைச் சொன்னாலே
தெரியாதவர் யாரிருக்கா தொகுதி உள்ளாரே
சரணம்:2
கழகத்தின் ஆட்சி
அதுதானே சாட்சி
டூ பாயிண்ட் ஓ கட்டாயம் தொடரும் பாரு
நாடாளும் காட்சி
மீனாட்சி சாட்சி
கோட்டைக்குள் எழுதுங்க அண்ணன் பேரு
சங்கம் வளர்த்திட்ட மதுரையை ஆள
தங்கத் தலைவரா நீங்க வருவீக...
உதய சூரியன் சின்னத்தைப் போல
விடியல் ஞாயிறா அள்ளித் தருவீக..
ஏ....
கடகடன்னு முடிச்சிடுவார் அண்ணன் வந்தாலே
தொகுதிக்காக உழைச்சிடுவார் சொல்லும் முன்னாலே
சேடப்பட்டி மணிமாறன் பேரைச் சொன்னாலே
தெரியாதவர் யாரிருக்கா தொகுதி உள்ளாரே

14/04/2026

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 

சித்திரையில் தோன்றுமொளி
.......சிந்தைக்குள் பாயட்டும்!
நித்திரையால் சூழ்ந்தயிருள்
......நீங்கட்டும்- அர்த்தமுற
எத்திசையும் நற்புகழை
.......ஈட்டவழி கிட்டட்டும்!
முத்தமிழை வேண்டுகிறேன்
.......நான்!
✍️செ. இராசா

13/04/2026

வாய்ப்புள்ள தென்றே

 

வாய்ப்புள்ள தென்றே வாயுள்ளே தள்ளாமல்
..... நாவடக்கம் பயில வேண்டும்!
சாப்பிட்ட பின்னே சட்டென்று தூங்காமல்
....சற்றேனும் நடக்க வேண்டும்!
சோப்பிட்ட பின்னே நீரள்ளி ஊற்றாமல்
....தோலூற பொறுக்க வேண்டும்!
ஈர்ப்புள்ள தென்றே ஆன்ட்ராய்டில் மூழ்காமல்
.....ஏதேனும் படிக்க வேண்டும்!
✍️செ. இராசா

11/04/2026

சந்தர்ப்ப கூட்டணியால்

 

சந்தர்ப்ப கூட்டணியால்
.....சந்தி சிரித்தபடி
முந்திவர எத்தனித்தே
......மோதுகிறார்- உந்திஉந்தி
கொள்ளை அடித்தபணம்
.....கொண்டுவந்து கொட்டுகிறார்
உள்ளத்தில் வைத்தளிப்பீர்
......ஓட்டு!
சாதிமதம் பாரார்யார்?
.....சாக்கடைபோல் உள்ளோர்யார்?
நாதியற்ற நாதிகள்யார்?
.....நல்லவன்யார்? - மாதிரி'யார்?
மெய்யோன்யார்? பொய்யோன்யார்?
....மேதகுயார்? போக்கிரியார்?
உய்த்துணர்ந்து போடுவீர்
....ஓட்டு!
என்னதான் சொன்னாலும்
.....என்ன நடந்துவிடும்?
என்றுதான் உள்ளார்கள்
...என்செய்ய?- ஒன்றுமில்லை
என்றும் இவரென்றும்
...என்றும் அவரென்றும்
இன்றும் உள்ளாரே
... ஏன்?
✍️செ. இராசா

10/04/2026

பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

 

மெய்ஞானம் பெற்றிங்கே
....மேன்மேலும் வாழ்ந்திடவே
பொய்மாயை இல்லாமல்
....போகட்டும்- மெய்யருளால்
சுற்றத்தார் சூழ
....சுகம்பல கூடியிங்கே
நற்றமிழ்போல் வாழயெம்
.....வாழ்த்து!
✍️செ. இராசா
இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

03/04/2026

சென்னை விமான நிலையத்தில்

 



சென்னை விமான நிலையத்தில் நம்ம தமிழ்நாட்டு கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் நுழைந்தபோது இம்முறை நான் வாங்கிய பொருட்கள் மரத்தால் செய்த புத்தர் சிலையும் (500₹) காகிதத்தில் உருவான வள்ளுவர் சிலையும்தான் (250₹). பொதுவாக வெளியே விற்பனை செய்யும் பொருட்கள் விமான நிலையத்தில் பல மடங்கு கூடுதலாக இருக்கும். ஆனால் இது தமிழ் நாட்டு அரசின் அங்காடி என்பதால் வெளியே என்ன விலையோ அதையே வைத்திருந்தார்கள் (வாடகை தமிழ் நாட்டு அரசாங்கம் கொடுக்கிறது). தற்போது எப்படி வியாபாரம் போகிறது என்று கேட்டபோது வளைகுடா நாட்டில் நடக்கும் போரின் விளைவாக வியாபாரமே இல்லையென்று மிகவும் வருத்தப்பட்டார் விற்பனையாளர். அதாவது தினமும் 1 இலட்சம் வியாபாரம் போகுமிடத்தில் வெறும் 3000/- போவதே பெரிய விடயமாகக் கூறினார். உண்மைதான் உறவுகளே....ஒரு காஃபி 300/- ரூபாய் விற்பனையாகும் இடத்தில் அரசு விற்பனை நிலையம் என்பதால் மிகவும் குறைவாகக் கிடைக்கும் இதுபோன்ற கடைகள்கூட வியாபாரம் இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு போரின் தாக்கம் எந்த அளவு உள்ளதென்று புரிந்து கொள்ள முடியும்.
உண்மையில் இந்தப்போரின் உண்மையான தாக்கம் என்பது இப்போது வரையிலும் நம் நாட்டில் அதிகமாகப் பிரதிபலிக்காமல் இருப்பதற்குக் காரணம் தேர்தல் மட்டுமே. தேர்தல் முடிந்த பிறகே தெரியும் உண்மையான தாக்கம்.
கூடிய விரைவில் போர் முடிவுக்குவர அனைவரும் வேண்டுவோமாக.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!

அரவிந்த்ரமேஷ்


பல்லவி
வாசலுக்கே ஓடிவருவ தாருங்க அண்ணன்
வாஞ்சையோடு பழகுகிறார் பாருங்க
தளபதியார் ஆசிபெற்ற ஆளுங்க- அரவிந்த்6
ரமேஷண்ணன் நம்ம வீட்டு பிள்ளைங்க
வாறாரு வாறாரு மீண்டும் விடிய ஹாட்ரிக்
வெற்றிதர போறாரு போட்றா வெடிய
சரணம் 1
சோழிங்க நல்லூரின் சிங்கமே- நீங்க
கழகத்தோட அடையாளம் என்றுமே
அண்ணன்மனசு சுத்தமான தங்கமே- அவரு
வென்றுவந்தா அத்தனையும் தங்குமே
அள்ளித்தரும் வள்ளல்பாரி நெஞ்சமே... நாங்க
சொல்வதெல்லாம் மிகையில்ல கொஞ்சமே...
வெற்றிதரும் உதயசூரியன் சின்னமே நீங்க
மறக்கமா வாக்களிக்க வேணுமே
வாறாரு வாறாரு மீண்டும் விடிய ஹாட்ரிக்
வெற்றிதர போறாரு போட்றா வெடிய
சரணம் 2
சாதிபேதம் பார்த்திடாத உள்ளமே- உங்க
சாதனைக்கி ஈடு இல்லை எதுவுமே
தொகுதிக்காக அர்ப்பணிச்ச கழகமே-இதத்
தொடர்ந்துவரும் வாய்ப்பு பதிலச் சொல்லுமே-
நம்ம சின்னம் வெற்றிதரும் சின்னமே- நீங்க
போடுகிற ஓட்டில் விடியல் தொடருமே...
ஓட்டைப் பிரிக்க நினைச்சுவரும் கூட்டமே-
எங்க டூ பாயிண்ட் ஓ ஆட்சி நிச்சயம் தோன்றுமே
வாறாரு வாறாரு மீண்டும் விடிய ஹாட்ரிக்
வெற்றிதர போறாரு போட்றா வெடிய
வேறாரு வேறாரு அண்ணனத் தவிர
அரவிந்த் ரமேசண்ணா போல்யாரு போட்றா வெடிய
கூத்து நடத்திப் பொழப்பவன்லாம் எதுக்கு?
நேத்து முளைச்ச காளான்கள ஒதுக்கு!
பார்த்து பார்த்து செஞ்ச கட்சியப் பார்த்து
ஓட்டுப் போட்டு தேர்தல் கடமையாற்று?
போடு போடு போடு உதய சூரியனில் போடு (2)
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எதுக்கு?
கடைசி வரைக்கும் வழிநடத்தும் அதுக்கு
பார்த்துப் பார்த்து செஞ்ச கட்சியப் பார்த்து
ஓட்டுப் போட்டுத் தேர்தல் கடமையாற்று...
போடு போடு போடு உதயசூரியனில் போடு...(2)