பழகுகின்ற நட்பெல்லாம்
....பாராமல் போனாலும்
அழகுமிகு சுற்றமெல்லாம்
...அற்பமெனப் போனாலும்
பழம்முதிர்ந்த சோலையெல்லாம்
....பாலையெனப் போனாலும்
சுழலுமந்த ஆதிவிட்டு
....சுத்தவெளிப் போகுமோ?!
என்னதான்...
தற்குறி தற்குறி என்றீர்!
ஆம் தற்குறிதான்!
தன் குறி தவறாது
தட்டித் தூக்கியதால்
அவர்கள் தற்குறிதான்!
அலையில்லை அலையில்லை என்றீர்!
ஆம் அலையில்லைதான்!
சுனாமி எழும்முன்
சின்னச் சின்ன அலைகளுக்கு
வேலை இல்லைதான்!
டெல்லி டெல்லியென்று கூவினீர்!
டெல்லி வரவில்லைதான்!
விஜய் என்னும்
சென்னைப் பெருவெள்ளம்முன்
டெல்லிக்கு இடமில்லைதான்!
அணில் குஞ்சென்று நக்கல் செய்தீர்!
ஆமாம் அணில்குஞ்சுகள் தான்!
ராமர் பாலம்கட்ட உதவியதுபோல்
விஜயை அரியணை ஏற்ற உதவிய
அதே அணில் குஞ்சுகள்தான்!
கூட்டம் ஓட்டாகாது என்றீர்!
அதுயென்னவோ உண்மைதான்!
காசுக்கு கூட்டிய கூட்டமெல்லாம்
கானலாய் போகுமெனில்
வெறும் கூட்டம் ஓட்டாகாதுதான்..
பணம் பாதாளம்வரை என்றீர்!
பார்த்தீர்கள் தானே?!
ஜன நாயகம் வெகுண்டால்
பண நாயகம் என்னாகுமென்று?!
செ. இராசா
ஊரென்ன சொன்னாலும்