28/03/2026
சொன்ன வார்த்தைதான்
நீலாங்கரை மாமு
25/03/2026
ஒரு கல்யாண மாப்பிள்ளை
ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா
காதல் வைபோகமே.....வாயா வைப் ஏத்தலாம்
24/03/2026
மையமோ ஓரமோ
மையமோ ஓரமோ
......மன்றத்தில் நாங்களில்லை
பைய வருவோம்
.....பதுங்கிப்பின்- ஐயமென்ன?
தீயசக்தி வென்றிடுமோ
.....தேர்தலிலே என்றெண்ணி
ஓயமனம் கொண்டேன்
....உவந்து!
செ. இராசா
அதைஇதை எழுதாமல்
19/03/2026
நீயே எனக்குத் துணையாவாய்
18/03/2026
அற்புத உணவுதான் இந்த ஹலீம்
ஒவ்வொரு உணவுக்கும்
ஒவ்வொரு சுவையுண்டு
ஒவ்வொரு சுவைக்குமே
உண்மையில் உணர்வுண்டு
உணர்வின் நினைவலை
மனதினில் எழுகையில்
துளிர்விடும் பதிவுகள்
கிளர்ச்சியைத் தூண்டுமே...
அப்படி ஒரு அற்புத உணவுதான் இந்த #ஹலீம். நம்மில் பலர் இந்த உணவைப் ருசிக்காமலேயே ஒதுக்கி விடும் மனப்பான்மை கொண்டவர்கள். எங்கள் வீட்டில் கூட நானும் என் மகனையும்தவிர யாரும் சாப்பிடுவதில்லை. இந்த உணவை ருசிக்கும் முன் இதை எப்படித் தயார் செய்கிறார்கள் என்று ஒருமுறைப் பாருங்கள். அந்தத் தயாரிப்பு முறையே இந்த உணவை ஒருமுறையேனும் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டும்.
இந்த உணவு தினமும் ஹைதராபாத்தில் இருந்து கத்தாரில் உள்ள டெக்கான் திவான் உணவகத்திற்கு விமானத்தில் வருவதாக 2013ல் கேள்விப்பட்டு வாங்கிச் சாப்பிட்டேன். அன்றுமுதல் அவ்வப்போது வாங்குவேன். அதே உணவை இன்று சென்னையில் இணைய வழியாக வாங்கிச் சாப்பிட்டேன். அட அடா அடா.... அற்புதமான சுவைங்க... அப்படியே நாக்கில் நிற்கிறது.
மட்டன், கோதுமை, பல்வேறு பருப்புகள், கொஞ்சம் அரிசு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, நெய்..... இப்படி என்னனென்னமோ போட்டு பிரத்தியேகமாக அடுப்பைத் தயார் செய்து பலமணிநேரம் கிண்டு கிண்டுவென கிண்டி.....அதை அப்படியே தம்போட்டு எடுத்து....ப்பா அத்தனை மெனக்கெடலுக்குப் பின் ஹல்வா பதத்தில் வரும் பாருங்க.....
அட போங்க ஜி....போய் ஒருமுறையேனும் சாப்பிடுங்க... அப்புறம் சொல்வீங்க.
செ. இராசா
16/03/2026
நன்றி இறைவா
நட்பென்று வந்தாய்!
.....நகைந்தாட வைத்தாய்!
.....மனமார்ந்த நன்றி இறைவா!
கிட்டாத தெல்லாம்
.....கிடைத்தறிய வைத்தாய்!
.....சிரம்தாழ்ந்த நன்றி இறைவா!
எட்டாத இன்பம்
....எமையுணர வைத்தாய்!
.....இனிதான நன்றி இறைவா!
சட்டென்றே ஓர்நாள்
.....சகமுணர வைப்பாய்!
.....அதற்கின்றே நன்றி இறைவா!
15/03/2026
எத்தனையோ முறை கத்தாரில்.....
எத்தனையோ முறை கத்தாரில் இருந்து இந்தியா வந்திருந்தாலும் இம்முறை வந்தது உண்மையில் மறக்கமுடியாத அனுபவமாகவே இருந்தது. பொதுவாக ஊருக்கு போய்வரும் பதிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாலும் இந்தப் பதிவின் அவசியம் கருதியே பதிவிடுகின்றேன்.
08/03/2026
குண்டுமழை பொழிகிறது
குண்டுமழை பொழிகிறது
07/03/2026
சுக்ரன் ஹபீபி.
04/03/2026
படபடப்பாய் உள்ளதெனில்
03/03/2026
வெறுப்பு
பற்றிய ஒன்றைப்
பறித்துப் பாருங்கள்...
பச்சக் குழந்தைகூட அலறும்..
ஆனால்..
வெறுப்பை உமிழாது!
அதுவே
ஒருவர் பற்றிய விடயத்தைப்
ஒருவரிடம் பேசுங்கள்
வெறுப்பு வாந்திகள்
வேகமாய் விழும்...
விருப்பின் முரணாய்
வெறுப்பே வீற்றிருந்தாலும்
வெறுப்பையே விரும்பும்
அருவருப்பான உலகமிது....
யோசித்துப் பாருங்கள்?!
பற்றற்றான் பற்றையே
பற்றச்சொன்னார் வள்ளுவர்
........பற்றினோமா?!
பற்றற்றானை விட்டுவிட்டு
பற்றினோம் மதத்தை; விளைவு
பற்றி எரிகிறதுபார்; ஆம்
பற்றி எரிகிறது பார்!
முதலில் ஒருவர் வருவார்!
பின்னர் இன்னொருவர் வருவார்!
இப்போது முன்னவர்பின் நிற்போர்; பழமைவாதி!
பின்னர்வர்பின் நிற்போர்; புதுமைவாதி!
அதற்குப்பின் ஒருவர் வந்தால்
முந்தைய பின்னவர் பழமைவாதி!
இன்றைய பின்னவர் புதுமைவாதி!
இதில் யார் சரி?
இல்லை யாருடையது சரி?!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
உயிர்நீங்கும் போதும்
பாவிகளை மன்னியுங்கள் என்றார்
இயேசுநாதர்!
யார் பிறரை மன்னிக்கிறாரோ
அவரின் கண்ணியத்தை அதிகப்படுத்துகிறான் என்றார்
நபிகள் நாயகம்!
தத்வமஸி எனும் தத்துவம்கூறி
எதிரியை நேசிக்கச் சொல்கின்றன
உபநிடதங்கள்!
பகைவனுக்கு அருள்வாய்
என்றார் பாரதியார்!
வெறுப்பை அன்பே வெல்லும் என்றார் மகாத்மா!
இப்படி எத்தனையோ போதனைகள்
இருந்தும் என்செய்ய?
வெறுப்புப் பிரசாரம்
வெறுப்புப் பின்னூட்டமென
எதிர்மறைக் கருத்துக்களை
எப்போதும் நிறைத்தால்
எதிர்காலத் தலைமுறை
என்னவாகும்?!
அட
இப்போதே இடிஇடிக்கிறதே.
போதும்!
வெறுப்பை விருப்பால் வெல்வோம்!
விருப்பை விரிவாய்க் கொள்வோம்!














