29/10/2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அன்பு மகளே அனுஸ்ரீ.....
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அணுவிலும் நீயே அனுஸ்ரீ
என்னருமைக் கவிமுகிலின்
இரண்டாம் மழையமுதே...
நின்னன்புச் சாரலிலே
இதயமும் சிலிர்க்குதம்மா!!!
யார்செய்த புண்ணியமோ?!!
இறையருள் புரிந்ததம்மா!
கோபத்தைக் கழித்து
கோபுரத்தைத் தொட்டிடு!
ஆபத்தை வகுத்து
ஆர்வத்தை வளர்த்திடு!
ஊக்கத்தைக் கூட்டி
ஏக்கத்தை களைந்திடு!
ஆக்கத்தைப் பெருக்கி
நோக்கத்தை அடைந்திடு!
புறப்படு மகளே புறப்படு
புதுமை படைத்திட புறப்படு!
துணிந்திடு மகளே துணிந்திடு
கடவுளின் துணையுடன் துணிந்திடு!
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அன்பு மகளே அனுஸ்ரீ.....
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அணுவிலும் நீயே அனுஸ்ரீ
✍️செ. இராசா

No comments: