அவனைப்போல் ஒருவன்
....அவனியிலே இல்லை
.........அவனுக்கு நிகர்அவனே!
சிவனைப்போல் அவனும்
..... சினம்கொண்டு விட்டால்
............சிவந்தவிழி கொள்பவனே!
கவிதைபோல் செய்வோர்
......கதையேதும் விட்டால்
............கவியம்பால் கொய்பவனே!
கவிதையிலே நல்ல
.....கவிதைகளாய்ச் செய்த
.........கலைதெய்வ ஆண் அவனே! நீர்
.........கலைதெய்வம் ஆனவனே!-
செ. இராசா
கவியரசர் நினைவு நாள் கவிதை

No comments:
Post a Comment