நடக்கின்ற சம்பவத்தை
........நாமுற்று நோக்குகையில்
நாமென்ன செய்ய முடியும்?!
கடக்கின்ற காலத்தை
.......கைப்பற்றும் நோக்கத்தில்
கைவிலங்கா போட முடியும்?!
இடம்விட்டு போனாலும்
.......எதைச்செய்து தடுத்தாலும்
யார்-எமனை வெல்ல முடியும்?
திடமோடு சிந்தித்தே
......தெளிவோடு செல்கின்ற
செய்வினையால் மா(ற்)ற முடியும்!!!
No comments:
Post a Comment