12/10/2025

சாதிப் பேரை நீக்கச் சொல்லி

 

சாதிப் பேரை நீக்கச் சொல்லி
...சட்டம் போடும் மாந்தரே
சாதிப் பேரைச் சுட்டும் பாலம்
...தாங்கள் வைத்தால் நியாயமோ?!
சாதி இல்லை என்று சொல்லி
...சப்பைக் கட்டும் கூட்டமே
சாதி என்ன சாதி என்றச்
...சான்றை நீக்க முடியுமோ?!
✍️செ. இராசா

No comments: